Tamil Leader News
முக்கியம்
மின்னேரியா விபத்தில் விசேட வைத்திய நிபுணர் மரணம்!●எரிபொருள் வரிச் சுமையும் விநியோக நெருக்கடியும்: உண்மை நிலை என்ன?●தீபாவளியை முன்னிட்டு தமிழ் மொழி மூலப் பாடசாலைகளுக்கு திங்களன்று விடுமுறை!●தேயிலை - தேங்காய் டிஜிட்டல் மயமாக்கலால் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்குமா?●சில மணிநேரக் கனமழையால் கொழும்பு முடங்கிய விந்தை!●நுவரெலியா அஞ்சல் கட்டிடம் சுற்றுலா மையமாகிறது: பொதுமக்களின் பணத்திற்கு நீதி கிடைக்குமா?●இலங்கையின் நீல நண்டுக்கு உலகளாவிய சான்றிதழ்: ஆசியாவுக்கே முன்னுதாரணம்!●டயர் தரக் கட்டுப்பாட்டு வர்த்தமானி வெளியிடப்பட்டாலும் பரிசோதனை வசதிகளின்றி நெருக்கடி!●ABU மாநாட்டின் மூலம் சுற்றுலாத்துறைக்குக் கிடைத்த உலகளாவிய வாய்ப்பு!●உலகளாவிய தொழில்நுட்பப் பங்குகள் சரிவு: பிணைமுறைகளை நோக்கி முதலீட்டாளர்களின் கவனம்!●
செய்திகள்

குருந்தூர் மலையில் கம்மன்பில!

T

The Leader Desk

ஜூன் 22, 2023 • 11:36 AM

குருந்தூர் மலையில் கம்மன்பில!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கட்டளைகளை மீறி விகாரை அமைக்கப்பட்ட விவகாரம் இலங்கையில் மாத்திரமன்றி சர்வதேச ரீதியில் பாரிய ஒரு விவகாரமாக உருவெடுத்துள்ளது.
  • இவ்வாறான பின்னணியில் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில நேற்று (21) முல்லைத்தீவு மாவட்டத்தில் குருந்தூர் மலைக்கு தென்பகுதியில் இருந்து சிங்கள ஊடகவியாலர்கள் பலரையும் தேரர்கள் சிலரையும் அழைத்துக்கொண்டு குறித்த பகுதிக்கு வருகை தந்திருந்தார்.
  • இதனை தொடர்ந்து பௌத்த பூசை பொருட்களுடன் மலைக்கு ஏறிய தேரர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஆகியோர் புதிதாக அமைக்கப்பட்ட குருந்தூர் மலை விகாரையில் வழிபாடுகளை மேற்கொண்டுள்ளார்கள்.
எழுத்து அளவு:
கட்டளைகளை மீறி விகாரை அமைக்கப்பட்ட விவகாரம் இலங்கையில் மாத்திரமன்றி சர்வதேச ரீதியில் பாரிய ஒரு விவகாரமாக உருவெடுத்துள்ளது.

குருந்தூர் மலையில் தொல் பொருள் திணைக்களத்தால் கையகப்படுத்தப்பட்ட 79 ஏக்கர் காணியில் நீதிமன்ற கட்டளைகளை மீறி விகாரை அமைக்கப்பட்ட நிலையில் அதற்க்கு மேலதிகமாக தமிழ் மக்களின் பூர்வீக வாழ்விட ,விவசாய காணிகள் உள்ளடங்கலாக 279 ஏக்கர் தொல்பொருள் திணைக்களத்தினால் மீள எல்லையிடப்பட்டுள்ள நிலையில் காணிகளை விடுவிக்க மக்கள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் அண்மையில் இலங்கை தமிழரசுக் கட்சிக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் பிரஸ்தாபிக்கப்பட்ட பின்னணியில் தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் அவர்களும் பதவி விலகியிருந்தார்.

இவ்வாறான பின்னணியில் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில நேற்று (21) முல்லைத்தீவு மாவட்டத்தில் குருந்தூர் மலைக்கு தென்பகுதியில் இருந்து சிங்கள ஊடகவியாலர்கள் பலரையும் தேரர்கள் சிலரையும் அழைத்துக்கொண்டு குறித்த பகுதிக்கு வருகை தந்திருந்தார்.

இதனை தொடர்ந்து பௌத்த பூசை பொருட்களுடன் மலைக்கு ஏறிய தேரர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஆகியோர் புதிதாக அமைக்கப்பட்ட குருந்தூர் மலை விகாரையில் வழிபாடுகளை மேற்கொண்டுள்ளார்கள். இதன்போது சுடர் ஏற்றி மலர் வைத்து ஊதுபத்தி கொழுத்தி வழிபட்டுள்ளார்கள். தொடர்ந்து பௌத்த முறையில் வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டு குருந்தூர் மலையில் உள்ள ஏனைய இடங்களையும் பார்வையிட்டுள்ளார்கள்.

இதனை தொடர்ந்து ஊடகங்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில மற்றும் குறித்த விகாரையினை நீதிமன்ற கட்டளைகளை மீறி அமைத்து வரும் வட மாகாண பிரதான சங்க நாயக்கர் கல்கமுவ சந்தபோதி தேரர் ஆகியோர் கருத்து தெரிவித்தனர்

குறித்த நிகழ்வுக்கு சென்ற தமிழ் ஊடகவியலாளர்கள் புலனாய்வாளர்கள் மற்றும் அங்கு வருகை தந்த தேரர்களால் புகைப்படம் வீடியோ எடுத்து அச்சுறுத்தப்பட்டதோடு குறித்த தமிழ் ஊடகவியலாளர்கள் சிலரை சுட்டிக்காட்டி இவர்கள் தான் இந்த விடயங்களை ஊடகங்களுக்கு கொண்டு சென்று பிரச்சினை ஆக்குவதாக வட மாகாண பிரதான சங்க நாயக்கர் கல்கமுவ சந்தபோதி தேரர் அங்கு வருகை தந்தவர்களுக்கு தெரிவித்திருந்தார்.

-முல்லைத்தீவு நிருபர் தவசீலன்-

 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...