Tamil Leader News
முக்கியம்
பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●மெர்லின் மன்றோ; உண்மையான அன்பைத் தேடிய சோகமான வாழ்க்கைப் பயணம்!●59 மில்லியன் ரூபாய் பண மோசடி வழக்கிலிருந்து டேசி ஃபொரெஸ்ட் விடுவிப்பு!●பெண்களின் இதயத்தைப் பாதுகாக்கும் புதிய மருத்துவப் பாதை!●அடக்குமுறைச் சட்டங்களைத் திரும்பப் பெறுக: நாளை (04) பாராளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம்!●16 வயது சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடை!●கிரிஷ் வழக்கில் பிணை கிடைத்தாலும் நாமல் தொடர்ந்தும் சிறையில்!●
செய்திகள்

ஜெனீவா: காணாமல் ஆக்கப்பட்டோரின் விவகாரத்தை மூடிமறைக்க முயற்சியெனக் குற்றச்சாட்டு

T

The Leader Desk

செப்டம்பர் 14, 2022 • 4:24 AM

ஜெனீவா: காணாமல் ஆக்கப்பட்டோரின் விவகாரத்தை மூடிமறைக்க முயற்சியெனக் குற்றச்சாட்டு

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது கூட்டத்தொடர் கடந்த 12ஆம் திகதி சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் ஆரம்பமானதுடன், அடுத்த மாதம் 7ஆம் திகதி கூட்டத் தொடர் நடைபெறவுள்ளது.
  • முல்லைத்தீவில் நேற்று (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலும் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது.
  • ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத் தொடரில் இலங்கை மீதான சர்வதேச விசாரணையின் அவசியத்தை வலியுறுத்த தவறியமைக்கு தமது கண்டனத்தையும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
எழுத்து அளவு:

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது கூட்டத்தொடர் கடந்த 12ஆம் திகதி சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் ஆரம்பமானதுடன், அடுத்த மாதம் 7ஆம் திகதி கூட்டத் தொடர் நடைபெறவுள்ளது.

இந்தக் கூட்டத்தொடரில் ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் முன்வைத்த அறிக்கைக்குப் பதிலாக, இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, இலங்கை சார்பான நிலைப்பாட்டை முன்வைத்தார்.

இதில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினைக்கு உள்ளக பொறிமுறை மூலம் தீர்வு எட்டப்படும் என்று வெளிவிவகார அமைச்சர் கூறியிருப்பதாகவும், இதில் எவ்வித நம்பிக்கையும் இல்லை என்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையின் பொருளாதார நெருக்கடியுடன் தொடர்புடைய அரசியல்வாதிகளின் ஊழல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையின் அவசியத்தை வலியுறுத்தியுள்ள என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

முல்லைத்தீவில் நேற்று (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலும் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத் தொடரில் இலங்கை மீதான சர்வதேச விசாரணையின் அவசியத்தை வலியுறுத்த தவறியமைக்கு தமது கண்டனத்தையும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் சங்கத்தின் தலைவர் மரியசுரேஷ் ஈஸ்வரி மற்றும் செயலாளர் பிரபாகரன் ரஞ்சனா ஆகியோர் இந்தச் செய்தியாளர் சந்திப்பில் கடும் அதிருப்தி தெரிவித்தனர்.

“நாங்கள் ஐக்கிய நாடுகள் அமைப்பு மற்றும் சர்வதேச சமூகத்தின் மீது நம்பிக்கை வைத்து நீதிக்காக செயற்படுகிறோம் என்பதை அவர்கள் அறிவார்கள். இவ்வாறானதொரு பின்னணியில் இவர்கள் முக்கியமற்ற விடயங்களை பேசுவதும், காணாமல் போனவர்கள் மற்றும் அரசியல் கைதிகள் விடயத்தில் கவனம் செலுத்தாமல் இருப்பதும் எமக்கு வேதனையளிக்கின்றது. மனிதநேயம் மற்றும் மனித உரிமைகளை அடிப்படையாகக் கொண்டது." மரியசுரேஷ் ஈஸ்வரி ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

Missing person

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...