Tamil Leader News
முக்கியம்
பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●மெர்லின் மன்றோ; உண்மையான அன்பைத் தேடிய சோகமான வாழ்க்கைப் பயணம்!●59 மில்லியன் ரூபாய் பண மோசடி வழக்கிலிருந்து டேசி ஃபொரெஸ்ட் விடுவிப்பு!●பெண்களின் இதயத்தைப் பாதுகாக்கும் புதிய மருத்துவப் பாதை!●அடக்குமுறைச் சட்டங்களைத் திரும்பப் பெறுக: நாளை (04) பாராளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம்!●16 வயது சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடை!●கிரிஷ் வழக்கில் பிணை கிடைத்தாலும் நாமல் தொடர்ந்தும் சிறையில்!●
செய்திகள்

பொருளாதார நெருக்கடிக்கு நாடாளுமன்றமும் பொறுப்பேற்க வேண்டும் - ரவி குமுதேஷ்

T

The Leader Desk

செப்டம்பர் 13, 2022 • 6:23 AM

பொருளாதார நெருக்கடிக்கு நாடாளுமன்றமும் பொறுப்பேற்க வேண்டும் - ரவி குமுதேஷ்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நிதி அமைச்சகம் மற்ற நிறுவனங்களுக்கு எப்படி வேலை செய்ய வேண்டும் என்று போதிக்கின்றது.
  • நிதி அமைச்சின் செயலாளரின் தற்போதைய சம்பளம் சுமார் 15 இலட்சம்.
  • கொடுப்பனவுகளுடன் 25 லட்சம் வரை பெறுகின்றனர்.
  • மத்திய வங்கியின் ஆளுனர் சுமார் 25 இலட்சம் சம்பளம் பெறுகிறார்.
எழுத்து அளவு:

நிதி அமைச்சகம் மற்ற நிறுவனங்களுக்கு எப்படி வேலை செய்ய வேண்டும் என்று போதிக்கின்றது. ஆனால் கடனை மீள செலுத்த முடியாத தோல்வியடைந்த நாடாக மாறும் வரை நிதி அமைச்சும் மத்திய வங்கியும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தது ஏன். இதில் முழுமையான மாற்றம் தேவை.

நிதி அமைச்சின் செயலாளரின் தற்போதைய சம்பளம் சுமார் 15 இலட்சம். கொடுப்பனவுகளுடன் 25 லட்சம் வரை பெறுகின்றனர். மத்திய வங்கியின் ஆளுனர் சுமார் 25 இலட்சம் சம்பளம் பெறுகிறார். அவர் தனது ஓய்வூதியத்தையும் பெறுவார். சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து 10 லட்சம் பெறுகிறார். அப்படிப் பார்த்தால். நிறுவனங்களுக்கிடையில் இப்படிப்பட்ட இடத்தில் பணியாற்றிய ஒருவர். அப்படிப்பட்ட இடத்தில் பதவி வகிக்கும் போதுஇ ​​அது நாட்டைப் பல்வேறு விதங்களில் பாதிக்கலாம்.

உதாரணமாகஇ சர்வதேச சமூகத்துடன் எழும் சில பொருளாதார நிலைமைகள் இலங்கையை பாதிக்கிறது மற்றும் இறுதியில் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதற்குக் காரணம் வெளியுறவுக் கொள்கை சரியாகக் கையாளப்படவில்லை. இப்போது சீனா இலங்கையில் அதிக முதலீடு செய்ததால் இந்த சீன கடன்களை சீனா செலுத்தவில்லை என்று சிலர் நினைக்கிறார்கள். இது வெளிநாட்டு ஒப்பந்தம் என்று சிலர் கூறுகின்றனர். அது உண்மையா பொய்யா என்பது எங்களுக்குத் தெரியாது. இந்த நிலையில்தான் கடனை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை அறிவித்தது.

இது போன்ற நேரத்தில்இ முக்கிய பொறுப்பில் உள்ள பாராளுமன்றம் தூக்கத்தில் உள்ளதா?

மக்கள் பிரதிநிதிகளுக்கு அதுபற்றி எதுவும் தெரியாதது போல் நடந்துகொள்கிறார்கள். இதுகுறித்து பேசவில்லை. பொறுப்புகள் நிறைவேற்றப்படவில்லை. பாராளுமன்றத்தில் உள்ள பலருக்கு இப்படி ஒரு பொறுப்பு இருப்பது கூட அவர்களுக்குத் தெரியாது.

நாங்கள் பொறிமுறை மாற்றம் (சிஸ்டம் சேர்ஞ்) பற்றி பேசுகிறோம். முழுமையான இந்த மாற்றம் வரவேண்டும். இந்தக் கட்டமைப்பை மாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

உலகில் வளர்ந்த நாடுகள் தனிநபர்களால் ஆளப்படுவதில்லை. வழிமுறை மூலம். சிஸ்டம் மூலம் நிர்வகிக்கப்படுகிறது. சிஸ்டம் அப்ளை அவசியம். நமது நாடு தனி நபர்களால் ஆளப்படுவதை நிறுத்த வேண்டும். அவர்கள் முடிவெடுப்பதை நிறுத்த வேண்டும்.

குறிப்பாக இந்த நேரத்தில், மத்திய வங்கியின் முடிவெடுக்கும் முறை சரியானதா. அது அரசியலமைப்புக்கு உட்பட்டதா, சரியான அறிவு உள்ளதா என்பது குறித்து சிந்திக்க வேண்டும். இதற்கான சிறந்தவொரு பொறிமுறையை அறிமுகம் செய்ய வேண்டும். என்று தொழிற்சங்கத் தலைவர் ரவி குமுதேஷ் மேலும் தெரிவித்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...