Tamil Leader News
முக்கியம்
பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●மெர்லின் மன்றோ; உண்மையான அன்பைத் தேடிய சோகமான வாழ்க்கைப் பயணம்!●59 மில்லியன் ரூபாய் பண மோசடி வழக்கிலிருந்து டேசி ஃபொரெஸ்ட் விடுவிப்பு!●பெண்களின் இதயத்தைப் பாதுகாக்கும் புதிய மருத்துவப் பாதை!●அடக்குமுறைச் சட்டங்களைத் திரும்பப் பெறுக: நாளை (04) பாராளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம்!●16 வயது சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடை!●கிரிஷ் வழக்கில் பிணை கிடைத்தாலும் நாமல் தொடர்ந்தும் சிறையில்!●
செய்திகள்

தமிழ் கைதிகளின் உண்ணாப் போராட்டம் : யாழில் ஆர்ப்பாட்டம்

T

The Leader Desk

செப்டம்பர் 13, 2022 • 5:19 AM

தமிழ் கைதிகளின் உண்ணாப் போராட்டம் : யாழில் ஆர்ப்பாட்டம்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கடந்த செப்டெம்பர் மாதம் 12ஆம் திகதி வடமாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக போராட்டத்தை முன்னெடுத்த கைதிகளின் உறவினர்கள் குழு ஒருநாள் உண்ணா போராட்டத்தில் ஈடுபட்டதாக யாழில் செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
  • ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது கூட்டத் தொடர் ஜெனிவாவில் ஆரம்பமாகியுள்ள நிலையில், யாழில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.
  • டட்லி மற்றும் எல்.அஜந்தன் ஆகிய 13 அரசியல் கைதிகள் கொழும்பு மகசின் சிறைச்சாலையில் ஏழாவது நாளாகவும் உண்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
  • எனது சகோதரன் 27 வருடங்களாக அரசியல் கைதியாக இருக்கின்றார்.
எழுத்து அளவு:

 

கடந்த செப்டெம்பர் மாதம் 12ஆம் திகதி வடமாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக போராட்டத்தை முன்னெடுத்த கைதிகளின் உறவினர்கள் குழு ஒருநாள் உண்ணா போராட்டத்தில் ஈடுபட்டதாக யாழில் செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது கூட்டத் தொடர் ஜெனிவாவில் ஆரம்பமாகியுள்ள நிலையில், யாழில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.

பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது அன்புக்குரியவர்களை உடனடியாக விடுவிக்க தலையிடுமாறு வடமாகாண ஆளுநரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஜனாதிபதியின் பிரதிநிதிகள் ஆளுநர் அலுவலகத்தில் இல்லாத காரணத்தினால், ஆர்ப்பாட்டக்காரர்கள் தமது கோரிக்கைகள் அடங்கிய வாசகத்தை ஆளுநர் அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரி ஒருவரிடம் கையளித்ததாக வடக்கிலுள்ள செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

எஸ். உதயசிவம், யு. உமாசுதன், எம். பார்த்திபன், எல். இம்பராஜ், ஒய். ராபின்சன், ஆர். சயந்தன், பி. நகுலேஸ்வரன், எஸ். சுதாஹரன், யு. சதீஷ்குமார், எஸ். சசீதன், ஆர். விவேகானந்தன், ஒய். டட்லி மற்றும் எல்.அஜந்தன் ஆகிய 13 அரசியல் கைதிகள் கொழும்பு மகசின் சிறைச்சாலையில் ஏழாவது நாளாகவும் உண்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

உண்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் உறவினர்கள், 'கைதிகளுக்கான நீதிக்கான சர்வதேச தினத்தில்' அவர்களைச் சந்திக்க அனுமதிக்கப்பட்டனர், அவர்களின் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததாகக் கூறினர்.

எனது சகோதரன் 27 வருடங்களாக அரசியல் கைதியாக இருக்கின்றார். தனது சகோதரனைச் சந்தித்துவிட்டு வெலிக்கடை சிறைச்சாலை வளாகத்திற்கு வந்த பெண் ஒருவர் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.

உண்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்களில், 2019-2020 காலப்பகுதியில் கைது செய்யப்பட்ட இருவர், யுத்தத்தின் போது எட்டு வயதுடையவர்கள் எனவும், அவர்களுக்கு யுத்தம் தொடர்பில் சரியான புரிதல் இல்லை எனவும் தமிழ் தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

WhatsApp_Image_2022-09-13_at_10.26.03_1.jpeg

 

 

WhatsApp_Image_2022-09-13_at_10.28.08.jpeg

 

WhatsApp_Image_2022-09-13_at_10.28.08_1.jpeg

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...