Tamil Leader News
முக்கியம்
பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●மெர்லின் மன்றோ; உண்மையான அன்பைத் தேடிய சோகமான வாழ்க்கைப் பயணம்!●59 மில்லியன் ரூபாய் பண மோசடி வழக்கிலிருந்து டேசி ஃபொரெஸ்ட் விடுவிப்பு!●பெண்களின் இதயத்தைப் பாதுகாக்கும் புதிய மருத்துவப் பாதை!●அடக்குமுறைச் சட்டங்களைத் திரும்பப் பெறுக: நாளை (04) பாராளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம்!●16 வயது சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடை!●கிரிஷ் வழக்கில் பிணை கிடைத்தாலும் நாமல் தொடர்ந்தும் சிறையில்!●
செய்திகள்

வெற்றி நாயகர்கள் வாகன பேரணியில் கொழும்புக்கு

T

The Leader Desk

செப்டம்பர் 13, 2022 • 2:53 AM

வெற்றி நாயகர்கள் வாகன பேரணியில் கொழும்புக்கு

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஆசிய வலைப்பந்தாட்டப் போட்டியில் 6 ஆவது தடவையாக சம்பியன் பட்டத்தை வென்ற இலங்கை வலைப்பந்தாட்ட அணி இன்று (13) அதிகாலை 12.50 மணியளவில் மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.
  • இதேவேளை, 6 ஆவது தடவையாக ஆசிய சம்பியன் பட்டத்தை வென்ற இலங்கை கிரிக்கெட் அணி இன்று காலை 05 மணியளவில் இலங்கையை வந்தடைந்தது.
  • நாட்டை வந்தடைந்த விளையாட்டு வீரர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து வாகன பேரணியில் கொழும்புக்கு அழைத்து வரப்படப்படுகின்றன.
எழுத்து அளவு:

ஆசிய வலைப்பந்தாட்டப் போட்டியில் 6 ஆவது தடவையாக சம்பியன் பட்டத்தை வென்ற இலங்கை வலைப்பந்தாட்ட அணி இன்று (13) அதிகாலை 12.50 மணியளவில் மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.

வலைப்பந்தாட்ட அணியை விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார இராஜாங்க அமைச்சர் ரோஹன திஸாநாயக்க வரவேற்றார்.

இதேவேளை, 6 ஆவது தடவையாக ஆசிய சம்பியன் பட்டத்தை வென்ற இலங்கை கிரிக்கெட் அணி இன்று காலை 05 மணியளவில் இலங்கையை வந்தடைந்தது.

அவர்களை வரவேற்கும் வகையில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட வைபவமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

நாட்டை வந்தடைந்த விளையாட்டு வீரர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து வாகன பேரணியில் கொழும்புக்கு அழைத்து வரப்படப்படுகின்றன.

நாட்டை வந்தடைந்துள்ள விளையாட்டு வீரர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து வாகன பேரணியில் கொழும்புக்கு அழைத்து வரப்படுகின்றனர்.

இன்று காலை 06.30 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து புறப்படும் வாகன பேரணி கொழும்பு - நீர்கொழும்பு வீதி ஊடாக பேலியகொட சந்தி, மருதானை சந்தி, டாலி வீதி, யூனியன் பிளேஸ், அலெக்ஸாண்ட்ரா வீதி ஊடாக சுதந்திர மாவத்தையை சென்றடைவதுடன், அவ்விடத்தில் விசேட வரவேற்பு நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

சர்வதேச அளவில் புகழ் பெற்ற விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்த அனைத்து மக்களும் தங்கள் கைகளில் தேசியக் கொடிகளுடன் பாதையின் இருபுறமும் ஒன்று சேருமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.

கட்டுநாயக்கவில் ஆரம்பமான இந்த வாகன பேரணி  ஸ்ரீலங்கா கிரிக்கெட் மற்றும் வலைப்பந்து சம்மேளன தலைமையகத்தை வந்தடைய உள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...