தமிதா அபேரத்ன சார்பில் தாக்கல் செய்யப்பட்ட நகர்த்தல் பத்திரத்தை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட நீதவான் திலின கமகே, தலா 500,000 ரூபா அடங்கலான இரண்டு சரீரப் பிணைகளில் அவரை விடுதலை செய்ய உத்தரவிட்டார். அத்துடன், அவருக்கு வெளிநாடு செல்வதற்கும் நீதிமன்றினால் தடை விதிக்கப்பட்டுள்ளது.
காவல்துறை உத்தியோகத்தர்களின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் ஜனாதிபதி செயலகத்திற்கு வலுக்கட்டாயமாக நுழைந்து ஆர்ப்பாட்டத்தின்போது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில், தமிதா அபேரத்னவை எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கடந்த 8 ஆம் திகதி நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதேபோன்ற மற்றொரு சம்பவம் தொடர்பாக அவர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் சந்தேகநபர் குற்றங்கள் எதனையும் மேற்கொள்ளவில்லை என நீதிமன்றில் பிரதிவாதியின் சட்டத்தரணியினால் நகர்த்தல் பத்திரமொன்று முன்வைக்கப்பட்டது.
காவல்துறை உத்தியோகத்தர்களின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் ஜனாதிபதி செயலகத்திற்கு வலுக்கட்டாயமாக நுழைந்து ஆர்ப்பாட்டத்தின் போது அதன் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை ஆகிய குற்றச்சாட்டில் கொழும்பு வடக்கு பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினால் அவர் கைது செய்யப்பட்டார்.
நடிகை தமிதா அபேரத்ன பிணையில் செல்ல அனுமதி!
T
The Leader Desk
செப்டம்பர் 12, 2022 • 8:18 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- தமிதா அபேரத்ன சார்பில் தாக்கல் செய்யப்பட்ட நகர்த்தல் பத்திரத்தை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட நீதவான் திலின கமகே, தலா 500,000 ரூபா அடங்கலான இரண்டு சரீரப் பிணைகளில் அவரை விடுதலை செய்ய உத்தரவிட்டார்.
- இதேபோன்ற மற்றொரு சம்பவம் தொடர்பாக அவர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் சந்தேகநபர் குற்றங்கள் எதனையும் மேற்கொள்ளவில்லை என நீதிமன்றில் பிரதிவாதியின் சட்டத்தரணியினால் நகர்த்தல் பத்திரமொன்று முன்வைக்கப்பட்டது.
- அத்துடன், அவருக்கு வெளிநாடு செல்வதற்கும் நீதிமன்றினால் தடை விதிக்கப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

