Tamil Leader News
முக்கியம்
பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●மெர்லின் மன்றோ; உண்மையான அன்பைத் தேடிய சோகமான வாழ்க்கைப் பயணம்!●59 மில்லியன் ரூபாய் பண மோசடி வழக்கிலிருந்து டேசி ஃபொரெஸ்ட் விடுவிப்பு!●பெண்களின் இதயத்தைப் பாதுகாக்கும் புதிய மருத்துவப் பாதை!●அடக்குமுறைச் சட்டங்களைத் திரும்பப் பெறுக: நாளை (04) பாராளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம்!●16 வயது சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடை!●கிரிஷ் வழக்கில் பிணை கிடைத்தாலும் நாமல் தொடர்ந்தும் சிறையில்!●
செய்திகள்

ஜனாதிபதியின் செயலாளரினால் நியமிக்கப்பட்டுள்ள குழு!

T

The Leader Desk

செப்டம்பர் 9, 2022 • 5:09 AM

ஜனாதிபதியின் செயலாளரினால் நியமிக்கப்பட்டுள்ள குழு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அரச சேவைகளை இலகுபடுத்துவதற்காக பல்வேறு அரச நிறுவனங்களால் தற்போது 98 பொதுப் படிவங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றமை கண்டறியப்பட்டுள்ளது.
  • இக்குழுவினால் முன்னெடுப்பதற்கு எதிர்பார்க்கப்படும் பணிகள் பின்வருமாறு : அ) அரசாங்க அச்சகத்தால் அண்மையில் அச்சிடப்பட்டுள்ள அனைத்து பொதுப் படிவங்களையும் மீளாய்வு செய்தல்.
  • இ) A4 காகித அளவுகளில் அச்சிடக்கூடியதாக இருந்தும் அதனைவிட பெரியளவிலான காகிதங்களில் அச்சிடப்பட்டுள்ள பொதுப் படிவங்களை அடையாளம் காணுதல்.
  • மேலும் அமைச்சரவையின் பரிசீலனைக்கு சமர்ப்பிப்பதற்கு ஏதுவாக 2022 ஆம் ஆண்டு நவம்பர் 15 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் குறித்த பரிந்துரைகளை தன்னிடம் கையளிக்குமாறும் ஜனாதிபதியின் செயலாளர் இக்குழுவுக்கு அறிவித்துள்ளார்.
எழுத்து அளவு:



அரச சேவைகளை இலகுபடுத்துவதற்காக பல்வேறு அரச நிறுவனங்களால் தற்போது 98 பொதுப் படிவங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றமை கண்டறியப்பட்டுள்ளது.

இருப்பினும், சில படிவங்கள் காலத்துக்குப் பொருந்தாமல் இருப்பதனால் அவற்றை தற்போதைய தேவைக்கு ஏற்ப திருத்தம் செய்ய வேண்டியுள்ளது.

அதற்கமைய, பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் நிறுவனப் பணிப்பாளர் நாயகம் எச்.ஏ. சந்தன குமாரசிங்க (தலைவர்), நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின் மேலதிக பணிப்பாளர் நாயகம் திருமதி டி.எச்.எஸ். புல்லேபெரும (உறுப்பினர்), பிரதமர் அலுவலகத்தின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் (அபிவிருத்தி) திரு.யு.ஐ.டபிள்யூ. செனவிரத்ன (உறுப்பினர்) ஆகியோர் அரசாங்க அச்சகத்தால் அண்மையில் அச்சிடப்பட்டுள்ள அனைத்து பொதுப் படிவங்களையும் மீளாய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இக்குழுவினால் முன்னெடுப்பதற்கு எதிர்பார்க்கப்படும் பணிகள் பின்வருமாறு :

அ) அரசாங்க அச்சகத்தால் அண்மையில் அச்சிடப்பட்டுள்ள அனைத்து பொதுப் படிவங்களையும் மீளாய்வு செய்தல்.

ஆ) குறைந்தபட்ச பயன்பாடுடைய பொதுப் படிவங்கள் மற்றும் அவற்றிலுள்ள தேவையற்ற பகுதிகளை அடையாளம் காணுதல்.

இ) A4 காகித அளவுகளில் அச்சிடக்கூடியதாக இருந்தும் அதனைவிட பெரியளவிலான காகிதங்களில் அச்சிடப்பட்டுள்ள பொதுப் படிவங்களை அடையாளம் காணுதல்.

ஈ) அச்சிடத் தேவையில்லாத பொதுப் படிவங்களைக் கண்டறிந்து பரிந்துரைத்தல், அதற்குப் பதிலாக இணையதளங்களில் பொதுப் படிவங்களை பதிவிறக்கம் செய்வதற்கான அணுகு முறையை ஏற்படுத்துதல்.

உ) வழக்கற்றுப்போன பொதுப் படிவங்களை கண்டறிதல், பரிந்துரைக்கப்பட்ட மாதிரியுடனான (உள்ளடக்கம் மற்றும் அளவு) திருத்தப்பட்ட பொதுப் படிவங்களை மீளாய்வு செய்தல் மற்றும் இணையதளங்களின் ஊடாக பொதுப் படிவங்களை பதிவிறக்கம் செய்வதற்கு வசதியளித்தல்.

மேலும் அமைச்சரவையின் பரிசீலனைக்கு சமர்ப்பிப்பதற்கு ஏதுவாக 2022 ஆம் ஆண்டு நவம்பர் 15 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் குறித்த பரிந்துரைகளை தன்னிடம் கையளிக்குமாறும் ஜனாதிபதியின் செயலாளர் இக்குழுவுக்கு அறிவித்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...