Tamil Leader News
முக்கியம்
பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●மெர்லின் மன்றோ; உண்மையான அன்பைத் தேடிய சோகமான வாழ்க்கைப் பயணம்!●59 மில்லியன் ரூபாய் பண மோசடி வழக்கிலிருந்து டேசி ஃபொரெஸ்ட் விடுவிப்பு!●பெண்களின் இதயத்தைப் பாதுகாக்கும் புதிய மருத்துவப் பாதை!●அடக்குமுறைச் சட்டங்களைத் திரும்பப் பெறுக: நாளை (04) பாராளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம்!●16 வயது சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடை!●கிரிஷ் வழக்கில் பிணை கிடைத்தாலும் நாமல் தொடர்ந்தும் சிறையில்!●
செய்திகள்

மைத்திரிக்கு ஆப்படிக்கத் தயாராகும் மகிந்த அமரவீர! புதிய கட்சி குறித்து பேச்சு!!

T

The Leader Desk

செப்டம்பர் 8, 2022 • 3:21 PM

மைத்திரிக்கு ஆப்படிக்கத் தயாராகும் மகிந்த அமரவீர! புதிய கட்சி குறித்து பேச்சு!!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தற்போது கட்சித் தலைவர் மைத்திரிபால சிறிசேனவுடன் ஷான் விஜேலால், தயாசிறி ஜயசேகர, துஷ்மந்த மித்ரபால, அங்கஜன் ராமநாதன், துமிந்த திஸாநாயக்க ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்களே எஞ்சியுள்ளனர்.
  • இதனால் அந்தக் கட்சியின் சிரேஸ் உறுப்பினர்கள் பலர் அதிருப்தியடைந்திருந்தனர்.
  • அடுத்த அமைச்சரவை மாற்றத்தில் துமிந்த திஸாநாயக்கவும் அமைச்சரவை அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொள்வார் என அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எழுத்து அளவு:

தற்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிமல் சிறிபால டி சில்வா மற்றும் மஹிந்த அமரவீர ஆகியோர் அமைச்சரவை அமைச்சர்களாக பதவி வகித்து வருவதுடன், ரஞ்சித் சியம்பலாபிட்டிய, ஜகத் புஷ்ப குமார, லசந்த அழகியவன்ன, சாமர சம்பத் தசநாயக்க, சுரேஷ் ராகவன், சாந்த பண்டார ஆகியோர் இராஜாங்க அமைச்சர்களாக இன்று திங்கட்கிழமை (08) பதவியேற்றுள்ளனர்.

தற்போது கட்சித் தலைவர் மைத்திரிபால சிறிசேனவுடன் ஷான் விஜேலால், தயாசிறி ஜயசேகர, துஷ்மந்த மித்ரபால, அங்கஜன் ராமநாதன், துமிந்த திஸாநாயக்க ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்களே எஞ்சியுள்ளனர்.

அடுத்த அமைச்சரவை மாற்றத்தில் துமிந்த திஸாநாயக்கவும் அமைச்சரவை அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொள்வார் என அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கட்சியின் தீர்மானத்தை மீறி அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளைப் பெற்ற ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) உறுப்பினர்கள் அனைவரையும் வெளியேற்ற அக்கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தற்போது தீர்மானித்துள்ளதாக அந்தக் கட்சியின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவித்தனர்.

கடந்த வாரம், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கட்சியின் யாப்பின் மூலம் தனது அதிகாரங்களைப் பலப்படுத்த யாப்பில் திருத்தம் செய்திருந்தார். கட்சியின் நிலைப்பாட்டில் இருந்து விலகிச் செல்லும் எம்.பி.க்கள் தொடர்பில் கடுமையான தீர்மானங்களை எடுக்கும் வகையில் மைத்திரிபால சிறிசேன அதிகாரங்களை தன்வசம் சேர்த்துக் கொண்டார். இதனால் அந்தக் கட்சியின் சிரேஸ் உறுப்பினர்கள் பலர் அதிருப்தியடைந்திருந்தனர்.

அமரவீரவிடமிருந்து புதிய கட்சி!

இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து வெளியேறும் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களையும் மொட்டுக் கட்சியைச் சேர்ந்த சில பாராளுமன்ற உறுப்பினர்களையும் ஒன்றிணைத்து புதிய அரசியல் கட்சியொன்றை உருவாக்க அமைச்சர் மஹிந்த அமரவீர தீர்மானித்துள்ளதாகவும் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன் தலைவராக மஹிந்த அமரவீர செயற்படுவார் எனவும் தெரியவருகிறது.

புதிதாக உதயமாகும் இந்த அரசியல் கட்சி, தேர்தல் ஆணையாளர் அலுவலகத்தில் ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக வர்த்தமானியில் வெளியிடப்பட்ட உத்தியோகபூர்வ அரசியல் கட்சி என்றும் கூறப்படுகிறது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

மைத்திரிக்கு ஆப்படிக்கத் தயாராகும் மகிந்த அமரவீர! புதிய கட்சி குறித்து பேச்சு!! | Tamil Leader | We Lead the Nation