Tamil Leader News
முக்கியம்
பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●மெர்லின் மன்றோ; உண்மையான அன்பைத் தேடிய சோகமான வாழ்க்கைப் பயணம்!●59 மில்லியன் ரூபாய் பண மோசடி வழக்கிலிருந்து டேசி ஃபொரெஸ்ட் விடுவிப்பு!●பெண்களின் இதயத்தைப் பாதுகாக்கும் புதிய மருத்துவப் பாதை!●அடக்குமுறைச் சட்டங்களைத் திரும்பப் பெறுக: நாளை (04) பாராளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம்!●16 வயது சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடை!●கிரிஷ் வழக்கில் பிணை கிடைத்தாலும் நாமல் தொடர்ந்தும் சிறையில்!●
செய்திகள்

போராட்டம் நடத்தி வந்த பிரபல சிங்கள நடிகை கைது!

T

The Leader Desk

செப்டம்பர் 8, 2022 • 3:12 PM

போராட்டம் நடத்தி வந்த பிரபல சிங்கள நடிகை கைது!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கைதுசெய்யப்பட்ட தமிதா அபேரத்னவை எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே இன்று (08) உத்தரவிட்டுள்ளார்.
  • சந்தேகநபர் ஜூலை 14ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்திற்குள் பிரவேசித்து குற்றமிழைத்துள்ளதாகக் கூறி கொம்பனித்தெரு பொலிஸார் கைதுசெய்து இன்று (08) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தினர்.
  • சந்தேகநபர் சார்பில் நீதிமன்றில் ஆஜராகியிருந்த ஜனாதிபதியின் சட்டத்தரணி றியென்சி அர்சகுலரத்ன, தனது கட்சிக்காரருக்கு நிபந்தனையில் பிணை வழங்குமாறு நீதவானிடம் கோரினார்.
  • நேற்று (07) பத்தரமுல்லை நாடாளுமன்ற வளாகத்திற்கு அருகில் தியத்த உயனேயில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு திரும்பிய போதே கொழும்பு வடக்கு குற்றத்தடுப்பு பிரிவின் விசாரணைப் பிரிவினரால் தமிதா அபேரத்ன கைது செய்யப்பட்டார்.
எழுத்து அளவு:

கைதுசெய்யப்பட்ட தமிதா அபேரத்னவை எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே இன்று (08) உத்தரவிட்டுள்ளார்.

நீதிமன்றத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்திய சம்பவம் தொடர்பில் பிணையில் இருக்கும் போதே சந்தேகநபர் மீண்டும் கைதுசெய்யப்பட்ட நிலையில், விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

சந்தேகநபர் ஜூலை 14ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்திற்குள் பிரவேசித்து குற்றமிழைத்துள்ளதாகக் கூறி கொம்பனித்தெரு பொலிஸார் கைதுசெய்து இன்று (08) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தினர்.

சந்தேகநபர் சார்பில் நீதிமன்றில் ஆஜராகியிருந்த ஜனாதிபதியின் சட்டத்தரணி றியென்சி அர்சகுலரத்ன, தனது கட்சிக்காரருக்கு நிபந்தனையில் பிணை வழங்குமாறு நீதவானிடம் கோரினார்.

சந்தேகநபர் ஒரு சம்பவத்திற்காக பிணையில் இருந்த போது இதேபோன்ற குற்றத்தை செய்து பிணை சட்டத்தை மீறியுள்ளதாக தெரிவித்த நீதவான், பிணை கோரிக்கையை நிராகரித்து சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

நேற்று (07) பத்தரமுல்லை நாடாளுமன்ற வளாகத்திற்கு அருகில் தியத்த உயனேயில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு திரும்பிய போதே கொழும்பு வடக்கு குற்றத்தடுப்பு பிரிவின் விசாரணைப் பிரிவினரால் தமிதா அபேரத்ன கைது செய்யப்பட்டார்.

நடிகை தமிதா அபேரத்ன போராட்டக் களத்தில் தீவிர செயற்பாட்டாளராக பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...