Tamil Leader News
முக்கியம்
பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●மெர்லின் மன்றோ; உண்மையான அன்பைத் தேடிய சோகமான வாழ்க்கைப் பயணம்!●59 மில்லியன் ரூபாய் பண மோசடி வழக்கிலிருந்து டேசி ஃபொரெஸ்ட் விடுவிப்பு!●பெண்களின் இதயத்தைப் பாதுகாக்கும் புதிய மருத்துவப் பாதை!●அடக்குமுறைச் சட்டங்களைத் திரும்பப் பெறுக: நாளை (04) பாராளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம்!●16 வயது சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடை!●கிரிஷ் வழக்கில் பிணை கிடைத்தாலும் நாமல் தொடர்ந்தும் சிறையில்!●
செய்திகள்

ஆசியக் கிண்ணம்: இந்தியாவை வென்ற இலங்கை

T

The Leader Desk

செப்டம்பர் 7, 2022 • 2:47 AM

ஆசியக் கிண்ணம்: இந்தியாவை வென்ற இலங்கை

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற இலங்கையணியின் தலைவர் தசுன் ஷானக, தமதணி முதலில் களத்தடுப்பிலீடுபடும் என அறிவித்தார்.
  • இந்நிலையில் சிறப்பாகத் துடுப்பெடுத்தாடிய இந்திய அணியின் தலைவர் றோஹித் ஷர்மா, 72 (41) ஓட்டங்களுடன் சாமிக கருணாரத்னவிடம் வீழ்ந்திருந்தார்.
  • தொடர்ந்து சூரியகுமார் யாதவ்வும் 34 (29) ஓட்டங்களுடன் ஷானகவிடம் வீழ்ந்தார்.
  • இறுதி ஓவரில் புவ்னேஷ்வர் குமாரும் கருணாரத்னவிடம் வீழ்ந்த நிலையில், இரவிச்சந்திரன் அஷ்வினின் ஆட்டமிழக்காத 15 (07) ஓட்டங்களோடு 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 173 ஓட்டங்களை இந்தியா பெற்றது.
எழுத்து அளவு:

இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற இலங்கையணியின் தலைவர் தசுன் ஷானக, தமதணி முதலில் களத்தடுப்பிலீடுபடும் என அறிவித்தார்.

முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா ஆரம்பத்திலேயே லோகேஷ் ராகுலை மகேஷ் தீக்‌ஷனவிடம் இழந்தது. அடுத்த ஓவரிலேயே விராட் கோலியையும் டில்ஷான் மதுஷங்கவிடம் இந்தியா இழந்தது.

இந்நிலையில் சிறப்பாகத் துடுப்பெடுத்தாடிய இந்திய அணியின் தலைவர் றோஹித் ஷர்மா, 72 (41) ஓட்டங்களுடன் சாமிக கருணாரத்னவிடம் வீழ்ந்திருந்தார். தொடர்ந்து சூரியகுமார் யாதவ்வும் 34 (29) ஓட்டங்களுடன் ஷானகவிடம் வீழ்ந்தார்.

சிறிது நேரத்தில் ஹர்டிக் பாண்டியாவும் ஷானகவிடம் வீழ்ந்ததோடு, தீபக் ஹூடா, றிஷப் பண்ட் ஆகியோர் மதுஷங்கவிடம் அடுத்த ஓவரில் வீழ்ந்தனர். இறுதி ஓவரில் புவ்னேஷ்வர் குமாரும் கருணாரத்னவிடம் வீழ்ந்த நிலையில், இரவிச்சந்திரன் அஷ்வினின் ஆட்டமிழக்காத 15 (07) ஓட்டங்களோடு 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 173 ஓட்டங்களை இந்தியா பெற்றது.

பதிலுக்கு 174 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இலங்கை, பதும் நிஸங்க, குசல் மென்டிஸ் மூலம் சிறப்பான் ஆரம்பத்தைப் பெற்றது.

இந்நிலையில், 52 (37) ஓட்டங்களுடன் யுஸ்வேந்திர சஹாலிடம் நிஸங்க வீழ்ந்ததுடன், அதே ஓவரில் சரித் அஸலங்கவும் வந்த வேகத்தில் பவிலியன் திரும்பினார். தொடர்ந்து வந்த தனுஷ்க குணதிலக, இரவிச்சந்திரன் அஷ்வினிடம் வீழ்ந்ததோடு, உடனேயே மென்டிஸும் 57 (37) ஓட்டங்களுடன் சஹலிடம் வீழ்ந்திருந்தார்.

எனினும், அணித்தலைவர் ஷானகவின் ஆட்டமிழக்காத 33 (18), பானுக ராஜபக்‌ஷவின் ஆட்டமிழக்காத 25 (17) ஓட்டங்களோடு 19.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில் இலங்கை வெற்றியிலக்கையடைந்தது.

இப்போட்டியின் நாயகனாக ஷானக தெரிவானார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...