Tamil Leader News
முக்கியம்
பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●மெர்லின் மன்றோ; உண்மையான அன்பைத் தேடிய சோகமான வாழ்க்கைப் பயணம்!●59 மில்லியன் ரூபாய் பண மோசடி வழக்கிலிருந்து டேசி ஃபொரெஸ்ட் விடுவிப்பு!●பெண்களின் இதயத்தைப் பாதுகாக்கும் புதிய மருத்துவப் பாதை!●அடக்குமுறைச் சட்டங்களைத் திரும்பப் பெறுக: நாளை (04) பாராளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம்!●16 வயது சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடை!●கிரிஷ் வழக்கில் பிணை கிடைத்தாலும் நாமல் தொடர்ந்தும் சிறையில்!●
செய்திகள்

ஆறுகளின் நீர் மட்டம் உயர்வால் வெள்ள அபாயம்!

T

The Leader Desk

செப்டம்பர் 6, 2022 • 3:16 AM

ஆறுகளின் நீர் மட்டம் உயர்வால் வெள்ள அபாயம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அதன்படி, மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் ஒரு வான் கதவும், லக்ஷபான மற்றும் கனியன் நீர்த்தேக்கங்களில் தலா 2 வான் கதவுகளும் நேற்று (5) இரவு முதல் திறக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
  • அவ்வாறே களு கங்கையின் நீர்மட்டம் மகுர, மில்லகந்த பகுதிகளில் அதிகரித்து வருவதால் சிறிய வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
  • நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழை பெய்துள்ளதுடன், களனி கங்கை, களு கங்கை, நில்வளா கங்கை, மஹா ஓயா மற்றும் அத்தனகலு ஓயா ஆகியவற்றின் பல அளவீடு நிலையங்களில் நீர் மட்டம் அதிகரித்துள்ளதால் சிறியளவில் வெள்ளம் ஏற்படக்கூடும் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் எச்சரித்துள்ளது.
எழுத்து அளவு:



அதன்படி, மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் ஒரு வான் கதவும், லக்ஷபான மற்றும் கனியன் நீர்த்தேக்கங்களில் தலா 2 வான் கதவுகளும் நேற்று (5) இரவு முதல் திறக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழை பெய்துள்ளதுடன், களனி கங்கை, களு கங்கை, நில்வளா கங்கை, மஹா ஓயா மற்றும் அத்தனகலு ஓயா ஆகியவற்றின் பல அளவீடு நிலையங்களில் நீர் மட்டம் அதிகரித்துள்ளதால் சிறியளவில் வெள்ளம் ஏற்படக்கூடும் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் எச்சரித்துள்ளது.

இதனால் களனி கங்கையின்  நீர்மட்டம், நாகலகம் வீதி, ஹங்வெல்ல மற்றும் க்ளென்கோர்ஸ் பகுதியில் அதிகரித்துள்ளதால் சிறிதளவு வெள்ள நிலைமையாக மாறிவருகிறது.

அவ்வாறே களு கங்கையின் நீர்மட்டம் மகுர, மில்லகந்த பகுதிகளில் அதிகரித்து வருவதால் சிறிய வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நில்வளா கங்கையின் நீர் மட்டம் பாணடுகம அளவீட்டு நிலையத்தில் அதிகளவில் பதிவாகியுள்ளதால் அப்பகுதியில் சிறியளவு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அவ்வாறே படல்கம, கிரியுல்ல ஆகிய பகுதிகளில் மஹா ஓயாவின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதுடன், அத்தனகலு ஓயாவின் நீர்மட்டம்  தூனமலே பகுதியில் அதிகரித்து காணப்படுவதுடன் சிறிய வெள்ளம் குறித்து எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...