Tamil Leader News
முக்கியம்
பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●மெர்லின் மன்றோ; உண்மையான அன்பைத் தேடிய சோகமான வாழ்க்கைப் பயணம்!●59 மில்லியன் ரூபாய் பண மோசடி வழக்கிலிருந்து டேசி ஃபொரெஸ்ட் விடுவிப்பு!●பெண்களின் இதயத்தைப் பாதுகாக்கும் புதிய மருத்துவப் பாதை!●அடக்குமுறைச் சட்டங்களைத் திரும்பப் பெறுக: நாளை (04) பாராளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம்!●16 வயது சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடை!●கிரிஷ் வழக்கில் பிணை கிடைத்தாலும் நாமல் தொடர்ந்தும் சிறையில்!●
செய்திகள்

அடுத்த இரண்டு வாரங்களில் முட்டைக்கான கட்டுப்பாட்டு விலையில் திருத்தம்

T

The Leader Desk

ஆகஸ்ட் 29, 2022 • 5:35 AM

அடுத்த இரண்டு வாரங்களில் முட்டைக்கான கட்டுப்பாட்டு விலையில் திருத்தம்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பல்பொருள் அங்காடிகளில் விற்கப்படும் பொதி செய்யப்பட்ட முட்டைகளுக்கான தற்போதைய கட்டுப்பாட்டு விலை நியாயமற்றது என்பதால், பொதியிடல் செலவு உட்பட புதிய கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்க அமைச்சு தீர்மானித்துள்ளது.
  • எவ்வாறாயினும், வெள்ளை மற்றும் சிவப்பு நிற முட்டைகளுக்கு தனித்தனியாக 50 ரூபாவாக விலையை உயர்த்த வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ இணங்கியுள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் அண்மையில் அமைச்சருடன் நடத்திய கலந்துரையாடலின் பின்னர் தெரிவித்திருந்தது.
  • எனினும், நுகர்வோர் அதிகாரசபை அண்மையில் வெள்ளை முட்டை ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 43 ரூபாவாகவும் சிவப்பு நிற முட்டையின் அதிகபட்ச சில்லறை விலை 45 ரூபாவாகவும் நிர்ணயித்திருந்த நிலையில், அதில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படமாட்டாது என அரசாங்கம் அறிவித்தது.
எழுத்து அளவு:


பல்பொருள் அங்காடிகளில் விற்கப்படும் பொதி செய்யப்பட்ட முட்டைகளுக்கான தற்போதைய கட்டுப்பாட்டு விலை நியாயமற்றது என்பதால், பொதியிடல் செலவு உட்பட புதிய கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்க அமைச்சு தீர்மானித்துள்ளது.

அதன்படி, பொதிசெய்யப்பட்ட வெள்ளை மற்றும் சிவப்பு நிற முட்டைகளுக்கு தனித்தனியாக கட்டுப்பாட்டு விலைகள் நிர்ணயிக்கப்பட உள்ளன.

பொதியிடல் தொடர்பான தீர்மானங்கள் தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகாரசபையின் ஊடாகத் தேவையான பரிசீலனைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக வர்த்தகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், வெள்ளை மற்றும் சிவப்பு நிற முட்டைகளுக்கு தனித்தனியாக 50 ரூபாவாக விலையை உயர்த்த வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ இணங்கியுள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் அண்மையில் அமைச்சருடன் நடத்திய கலந்துரையாடலின் பின்னர் தெரிவித்திருந்தது.

எனினும், நுகர்வோர் அதிகாரசபை அண்மையில் வெள்ளை முட்டை ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 43 ரூபாவாகவும் சிவப்பு நிற முட்டையின் அதிகபட்ச சில்லறை விலை 45 ரூபாவாகவும் நிர்ணயித்திருந்த நிலையில், அதில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படமாட்டாது என அரசாங்கம் அறிவித்தது.

இதற்கு முட்டை உற்பத்தியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தற்போது சந்தையில் முட்டைக்கான தட்டுப்பாடு நிலவுகின்றது.

எவ்வாறாயினும், இன்று முதல் முட்டைகளை தட்டுப்பாடு இன்றி சந்தைக்கு விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

50 ரூபாவிற்கும் குறைவான விலையில் முட்டைகளை விற்பனை செய்ய விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் இணக்கம் ஏற்பட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

அடுத்த இரண்டு வாரங்களில் முட்டைக்கான கட்டுப்பாட்டு விலையில் திருத்தம் | Tamil Leader | We Lead the Nation