Tamil Leader News
முக்கியம்
பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●மெர்லின் மன்றோ; உண்மையான அன்பைத் தேடிய சோகமான வாழ்க்கைப் பயணம்!●59 மில்லியன் ரூபாய் பண மோசடி வழக்கிலிருந்து டேசி ஃபொரெஸ்ட் விடுவிப்பு!●பெண்களின் இதயத்தைப் பாதுகாக்கும் புதிய மருத்துவப் பாதை!●அடக்குமுறைச் சட்டங்களைத் திரும்பப் பெறுக: நாளை (04) பாராளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம்!●16 வயது சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடை!●கிரிஷ் வழக்கில் பிணை கிடைத்தாலும் நாமல் தொடர்ந்தும் சிறையில்!●
செய்திகள்

போதியளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளது

T

The Leader Desk

ஆகஸ்ட் 28, 2022 • 11:31 AM

போதியளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளது

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
  • சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் பெற்றோல், டீசல் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றை உற்பத்தி செய்வதாக கூட்டுத்தாபனம் சுட்டிக்காட்டியுள்ளது.
  • எதிர்கால பெற்றோலிய விநியோகத்துக்கான கொள்வனவு தற்போது நடைபெற்று வருவதாகவும் உள்ளூர் சந்தையில் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் எரிபொருள் விநியோகிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
எழுத்து அளவு:

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எதிர்கால பெற்றோலிய விநியோகத்துக்கான கொள்வனவு தற்போது நடைபெற்று வருவதாகவும் உள்ளூர் சந்தையில் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் எரிபொருள் விநியோகிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீண்டும் செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளதுடன், உள்ளூர் சந்தைக்கு தேவையான அனைத்து எரிபொருட்களையும் உற்பத்தி செய்யும் திறனை நிலையம் கொண்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் பெற்றோல், டீசல் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றை உற்பத்தி செய்வதாக கூட்டுத்தாபனம் சுட்டிக்காட்டியுள்ளது.

இறக்குமதி செய்யப்பட்ட எரிபொருட்கள், சிலோன் பெற்றோலியம் சேமிப்பு முனையத்தின் கொலன்னாவ மற்றும் முத்துராஜவெல முனையங்களில் கையிருப்பில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் காணப்படும் நெரிசலைக் குறைப்பதற்காக எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகத்தை துரிதப்படுத்தவுள்ளதாக கூட்டுத்தாபனம் மேலும் தெரிவித்துள்ளது. 

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...