Tamil Leader News
முக்கியம்
பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●மெர்லின் மன்றோ; உண்மையான அன்பைத் தேடிய சோகமான வாழ்க்கைப் பயணம்!●59 மில்லியன் ரூபாய் பண மோசடி வழக்கிலிருந்து டேசி ஃபொரெஸ்ட் விடுவிப்பு!●பெண்களின் இதயத்தைப் பாதுகாக்கும் புதிய மருத்துவப் பாதை!●அடக்குமுறைச் சட்டங்களைத் திரும்பப் பெறுக: நாளை (04) பாராளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம்!●16 வயது சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடை!●கிரிஷ் வழக்கில் பிணை கிடைத்தாலும் நாமல் தொடர்ந்தும் சிறையில்!●
செய்திகள்

பொது நிதிக்குழுவின் தலைவராக ஹர்ஷ நியமனம்!

T

The Leader Desk

ஆகஸ்ட் 23, 2022 • 1:36 PM

பொது நிதிக்குழுவின் தலைவராக ஹர்ஷ நியமனம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடருக்கான அரசாங்க நிதி பற்றிய குழுவின் முதலாவது கூட்டம் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ த சில்வா தலைமையில் இன்று (23) நடைபெற்றது.
  • நிலையியற் கட்டளை இலக்கம் 121ற்கு அமைய அண்மையில் தெரிவுக் குழுவில் எடுக்கப்பட்ட ஏகோபித்த தீர்மானத்துக்கு அமைய பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ த சில்வா அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
  • இதற்கமைய 2021ஆம் ஆண்டின் 30ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்தை திருத்துவதற்கான ஒதுக்கீட்டுத் (திருத்தச்) சட்டமூலம் இக்குழுவில் ஆராயப்பட்டதுடன், இதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
எழுத்து அளவு:



ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடருக்கான அரசாங்க நிதி பற்றிய குழுவின் முதலாவது கூட்டம் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ த சில்வா தலைமையில் இன்று (23) நடைபெற்றது.

நிலையியற் கட்டளை இலக்கம் 121ற்கு அமைய அண்மையில் தெரிவுக் குழுவில் எடுக்கப்பட்ட ஏகோபித்த தீர்மானத்துக்கு அமைய பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ த சில்வா அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

இதற்கமைய 2021ஆம் ஆண்டின் 30ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்தை திருத்துவதற்கான ஒதுக்கீட்டுத் (திருத்தச்) சட்டமூலம் இக்குழுவில் ஆராயப்பட்டதுடன், இதற்கு அனுமதி வழங்கப்பட்டது. இதனைவிட சமூகப் பாதுகாப்பு உதவுத்தொகை அறவீட்டுச் சட்டமூலம் குறித்தும் குழு கவனம் செலுத்தியதுடன் இதற்கும் அனுமதி வழங்கியது.

அத்துடன், குழுவுக்கு முன்வைக்கப்பட்டிருந்த 2017ஆம் ஆண்டு 12ஆம் இலக்க வெளிநாட்டுச் செலாவணி சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதி மற்றும் 2007ஆம் ஆண்டு 48ஆம் இலக்க விசேட வியாபாரப் பண்டங்கள் அறவீடுச் சட்டத்தின் கீழான கட்டளை, சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழான (235வது அதிகாரம்) ஒழுங்குவிதி என்பவற்றுக்கும் இங்கு அனுமதி வழங்கப்பட்டது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...