Tamil Leader News
முக்கியம்
பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●மெர்லின் மன்றோ; உண்மையான அன்பைத் தேடிய சோகமான வாழ்க்கைப் பயணம்!●59 மில்லியன் ரூபாய் பண மோசடி வழக்கிலிருந்து டேசி ஃபொரெஸ்ட் விடுவிப்பு!●பெண்களின் இதயத்தைப் பாதுகாக்கும் புதிய மருத்துவப் பாதை!●அடக்குமுறைச் சட்டங்களைத் திரும்பப் பெறுக: நாளை (04) பாராளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம்!●16 வயது சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடை!●கிரிஷ் வழக்கில் பிணை கிடைத்தாலும் நாமல் தொடர்ந்தும் சிறையில்!●
செய்திகள்

கொழும்பு தேசிய வைத்தியசாலைக்குச் சென்ற ஜனாதிபதி

T

The Leader Desk

ஆகஸ்ட் 19, 2022 • 12:08 PM

கொழும்பு தேசிய வைத்தியசாலைக்குச் சென்ற ஜனாதிபதி

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அனுராதபுரத்தில் அண்மையில் நடந்த விபத்தில் படுகாயமடைந்த சிங்கள நடிகரும்.
  • ஒளிப்பதிவாளருமான ஜாக்சன் அன்டனியின் உடல்நிலை குறித்து விசாரிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (19) காலை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்குச் சென்றிருந்தார்.
  • மருந்துப் பற்றாக்குறையை உடனுக்குடன் நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், நாடு பூராகவும் உள்ள மருந்துப் பற்றாக்குறையினால் பாதிக்கப்பட்ட நோயாளர்களின் வாழ்வில் தமக்கு பெரும் பொறுப்பு இருப்பதாகவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
எழுத்து அளவு:

அனுராதபுரத்தில் அண்மையில் நடந்த விபத்தில் படுகாயமடைந்த சிங்கள நடிகரும். ஒளிப்பதிவாளருமான ஜாக்சன் அன்டனியின் உடல்நிலை குறித்து விசாரிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (19) காலை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்குச் சென்றிருந்தார்.

ஜக்சன் அன்டனியின் நலன் விசாரித்த பின்னர், வைத்தியசாலை பணிப்பாளரைச் சந்தித்து ஏனைய நோயாளிகளுக்குத் தேவையான மருந்துகள் மற்றும் தற்போது பற்றாக்குறையாக உள்ள மருந்துகள் தொடர்பில் கேட்டறிந்தார்.

மருந்துப் பற்றாக்குறையை உடனுக்குடன் நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், நாடு பூராகவும் உள்ள மருந்துப் பற்றாக்குறையினால் பாதிக்கப்பட்ட நோயாளர்களின் வாழ்வில் தமக்கு பெரும் பொறுப்பு இருப்பதாகவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

அதனையடுத்து ஜக்சன் அன்டனியின் மனைவியைச் சந்தித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அன்டனியின் உடல்நலம் குறித்து விசாரித்தார். எதிர்கால சிகிச்சை தொடர்பாக ஏதேனும் உதவிகள் இருப்பின் உடனடியாகத் தமக்குத் தெரிவிக்குமாறும் ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.

வைத்தியசாலையில் இருந்து வெளியே வந்த ஜனாதிபதி, சிகிச்சைக்காக வந்திருந்த நோயாளர்களிடம் நலன் விசாரித்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...