Tamil Leader News
முக்கியம்
பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●மெர்லின் மன்றோ; உண்மையான அன்பைத் தேடிய சோகமான வாழ்க்கைப் பயணம்!●59 மில்லியன் ரூபாய் பண மோசடி வழக்கிலிருந்து டேசி ஃபொரெஸ்ட் விடுவிப்பு!●பெண்களின் இதயத்தைப் பாதுகாக்கும் புதிய மருத்துவப் பாதை!●அடக்குமுறைச் சட்டங்களைத் திரும்பப் பெறுக: நாளை (04) பாராளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம்!●16 வயது சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடை!●கிரிஷ் வழக்கில் பிணை கிடைத்தாலும் நாமல் தொடர்ந்தும் சிறையில்!●
செய்திகள்

மனித உரிமை பேரவையின் முக்கிய குழு செப்டம்பரில் இலங்கை விஜயம்

T

The Leader Desk

ஆகஸ்ட் 7, 2022 • 4:35 AM

மனித உரிமை பேரவையின் முக்கிய குழு செப்டம்பரில் இலங்கை விஜயம்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தின் ஆசிய பசுபிக் பிரிவிற்கான தலைவர் ரொனி முங்கொவன் தலைமையிலான குழுவினர் இலங்கை விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளனர்.
  • இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் குழுவினரின் அறிக்கையை ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவின் 51வது அமர்வில் புதிய மனித உரிமை ஆணையாளர் அல்லது இடைக்கால ஆணையாளர் சமர்ப்பிப்பார்.
  • ஜெனீவாவில் இலங்கை தொடர்பான பிரேரணைக்கு அனுசரனை இணை அனுசரணை வழங்கிய நாடுகள் கொழும்பிலும் ஜெனீவாவிலும் சந்தித்து இலங்கை குறித்த புதிய தீர்மானம் ஆராய்ந்துள்ளன.
  • மனித உரிமை பேரவையின் அமர்வு செப்டம்பர் 12ம் திகதி ஆரம்பமாகி ஒக்டோபர் ஏழுவரை இடம்பெறும்.
எழுத்து அளவு:

ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தின் ஆசிய பசுபிக் பிரிவிற்கான தலைவர் ரொனி முங்கொவன் தலைமையிலான  குழுவினர் இலங்கை விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளனர்.

நீதியமைச்சர் மற்றும் கர்தினால் மல்கம் ரஞ்சித்தையும் அவர்கள் சந்திக்கவுள்ளனர்

ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணைக்குழு இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவேண்டும் என  கர்தினால் தொடர்ச்சியாக வேண்டுகோள் விடுத்துவந்துள்ளார்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் குழுவினரின் அறிக்கையை ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவின் 51வது அமர்வில் புதிய மனித உரிமை ஆணையாளர் அல்லது இடைக்கால ஆணையாளர் சமர்ப்பிப்பார்.

இந்த அறிக்கையை தயாரிப்பதில் முக்கிய நபராக ரொனிமுங்கொவன் காணப்படுவார் என தெரிவித்துள்ள இராஜதந்திர வட்டாரங்கள் அவர் முக்கிய விடயங்கள் குறித்து ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வார் என தெரிவித்துள்ளன.

ஜெனீவாவில் இலங்கை தொடர்பான பிரேரணைக்கு அனுசரனை இணை அனுசரணை வழங்கிய நாடுகள் கொழும்பிலும் ஜெனீவாவிலும் சந்தித்து  இலங்கை குறித்த புதிய தீர்மானம்  ஆராய்ந்துள்ளன.

மனித உரிமை பேரவையின் அமர்வு செப்டம்பர் 12ம் திகதி ஆரம்பமாகி  ஒக்டோபர் ஏழுவரை இடம்பெறும்.

இந்த வருட மே மாதம் வரை இலங்கை தொடர்பான முகன்மை குழு முன்னைய தீர்மானத்திற்கு மேலும் இரண்டுவருடக கால அவகாசம் வழங்குவது குறித்து ஆராய்ந்து வந்தது.(2022 செப்டம்பர்  முதல் 2024 வரை)

எனினும் காலிமுகத்திடலில் - அலரிமாளிகைக்கு வெளியே ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதல் அமைதியான ஆர்ப்பாட்டங்கள் ஈவிரக்கமற்ற முறையில் ஒடுக்கப்பட்டமை போன்றவை இலங்கை தொடர்பான குழுவினரின் மனமாற்றத்திற்கு காரணமாக அமைந்துள்ளன.

மனித உரிமை மீறல்கள் குறித்த குற்றச்சாட்டுகள் காரணமாக அவர்கள் இலங்கை தொடர்பான கடுமையான தீர்மானமொன்றை தயாரிக்கவேண்டிய நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ள இந்த நாடுகள்  மனித உரிமை மீறல்களை கவலையளிக்கும்போக்கு என தெரிவித்துள்ளனர்.

எனினும் முன்னைய தீர்மானத்தின் பல விடயங்கள் புதிய தீர்மானத்தில் இடம்பெறும் என இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...