அதன்படி, 600 ரூபாவாக இருந்த பருப்பு மொத்த விலை 410 ரூபாவாகவும், 330 ரூபாவாக இருந்த சீனியின் மொத்த விலை 270 ரூபாவாகவும், 215 ரூபாவாக இருந்த உருளைக்கிழங்கு மொத்த விலை 150 ரூபாவாகவும், மிளகாய் விலை 1900 ரூபாவிலிருந்து 1300 ரூபாவாக குறைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
டொலரின் விலை ஸ்திரப்படுத்தப்பட்டதாலும் வங்கிகள் டொலரை வழங்குவதாலும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் வீழ்ச்சியடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.


