போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவின் கையொப்பத்துடன் இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, பயணிகள், சரக்கு போக்குவரத்து போன்றவற்றுக்கான ரயில் கட்டணத்தில் திருத்தத்தை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ரயில் கட்டண திருத்தத்தின்படி, ரயில் கட்டணம் பஸ் கட்டணத்தில் பாதியாக இருக்கும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த கட்டண திருத்தம் நடைமுறைப்படுத்தப்படும் திகதி பின்னர் அறிவிக்கப்படும் என ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்தார்.
இதேவேளை, வெளிநாட்டு தபால் கட்டணங்களை அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் திருத்தியமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கேற்ப வெளிநாட்டு விமான தபால் கட்டணங்கள் மற்றும் கடல் தபால் கட்டணங்கள் மற்றும் அதிவேக தபால் கட்டணங்களை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தபால் திணைக்கள கட்டளைச் சட்டத்தின் கீழ், வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன, தபால் கட்டணங்களை திருத்தியமைத்துள்ளதுடன், அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளது.
ரயில் கட்டண திருத்தம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல்
T
The Leader Desk
ஜூலை 21, 2022 • 5:11 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவின் கையொப்பத்துடன் இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
- குறித்த கட்டண திருத்தம் நடைமுறைப்படுத்தப்படும் திகதி பின்னர் அறிவிக்கப்படும் என ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்தார்.
- அதன்படி, பயணிகள், சரக்கு போக்குவரத்து போன்றவற்றுக்கான ரயில் கட்டணத்தில் திருத்தத்தை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

