Tamil Leader News
முக்கியம்
பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●மெர்லின் மன்றோ; உண்மையான அன்பைத் தேடிய சோகமான வாழ்க்கைப் பயணம்!●59 மில்லியன் ரூபாய் பண மோசடி வழக்கிலிருந்து டேசி ஃபொரெஸ்ட் விடுவிப்பு!●பெண்களின் இதயத்தைப் பாதுகாக்கும் புதிய மருத்துவப் பாதை!●அடக்குமுறைச் சட்டங்களைத் திரும்பப் பெறுக: நாளை (04) பாராளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம்!●16 வயது சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடை!●கிரிஷ் வழக்கில் பிணை கிடைத்தாலும் நாமல் தொடர்ந்தும் சிறையில்!●
செய்திகள்

ஜனாதிபதியின் இராஜினாமா கடிதம் கிடைக்காவிடின் மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கை என்ன – சபாநாயகர் கருத்து

T

The Leader Desk

ஜூலை 14, 2022 • 5:42 AM

ஜனாதிபதியின் இராஜினாமா கடிதம் கிடைக்காவிடின் மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கை என்ன – சபாநாயகர் கருத்து

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நேற்று(13) நள்ளிரவிற்கு முன்னர், இராஜினாமா கடிதத்தை அனுப்பி வைப்பதாக ஜனாதிபதி தமக்கு தொலைபேசியூடாக அறிவித்திருந்ததாக சபாநாயகர் கூறினார்.
  • இந்த விடயம் குறித்து, சபாநாயகரிடம் இன்று(14) மீண்டும் வினவியமைக்கு, இந்த தருணத்தில் தாம் மிகுந்த அழுத்தத்தில் உள்ளதாகவும் விரைவில் இராஜினாமா கடிதத்தை அனுப்பி வைப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்ததாக சபாநாயகர் கூறினார்.
  • இதுவரை ஜனாதிபதி தமது இராஜினாமா கடிதத்தை கையளிக்காத காரணத்தினால், நாளைய தினம்(15) பாராளுமன்றத்தை கூட்டுவதிலும் நிச்சயமற்ற தன்மை காணப்படுவதாக பாராளுமன்ற பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
  • இதேவேளை, சிங்கப்பூருக்கு சென்றதன் பின்னர் ஜனாதிபதி தமது இராஜினாமா கடிதத்தை சமர்ப்பிப்பார் என நேற்று(13) தெரிவிக்கப்பட்டது.
எழுத்து அளவு:

நேற்று(13) நள்ளிரவிற்கு முன்னர், இராஜினாமா கடிதத்தை அனுப்பி வைப்பதாக ஜனாதிபதி தமக்கு தொலைபேசியூடாக அறிவித்திருந்ததாக சபாநாயகர் கூறினார்.

இந்த விடயம் குறித்து,  சபாநாயகரிடம் இன்று(14) மீண்டும் வினவியமைக்கு, இந்த தருணத்தில் தாம் மிகுந்த அழுத்தத்தில் உள்ளதாகவும் விரைவில் இராஜினாமா கடிதத்தை அனுப்பி வைப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்ததாக சபாநாயகர் கூறினார்.

தற்போது பதில் ஜனாதிபதியொருவர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தமது இராஜினாமா கடிதத்தை கையளிக்காவிடின் அவர் பதவியை விட்டுச் சென்றதாகக் கருதி மேற்கொள்ளக்கூடிய சட்ட ஏற்பாடுகள் குறித்து ஆராய்வதாகவும் சபாநாயகர்  தெரிவித்தார்.

இதுவரை ஜனாதிபதி தமது இராஜினாமா கடிதத்தை கையளிக்காத காரணத்தினால், நாளைய தினம்(15) பாராளுமன்றத்தை கூட்டுவதிலும் நிச்சயமற்ற தன்மை காணப்படுவதாக பாராளுமன்ற பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

ஆளும் மற்றும் எதிர்க்கட்சியினரால் ஏற்றுக்கொள்ளக்கூடிய பிரதமர் ஒருவரை நியமிக்குமாறு பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகருக்கு அறிவித்துள்ளார்.

இதேவேளை, சிங்கப்பூருக்கு சென்றதன் பின்னர் ஜனாதிபதி தமது இராஜினாமா கடிதத்தை சமர்ப்பிப்பார் என  நேற்று(13) தெரிவிக்கப்பட்டது.

எவ்வாறாயினும், ஜனாதிபதி இன்னமும் மாலைதீவுகளில் தங்கியிருப்பதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...