Tamil Leader News
முக்கியம்
பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●மெர்லின் மன்றோ; உண்மையான அன்பைத் தேடிய சோகமான வாழ்க்கைப் பயணம்!●59 மில்லியன் ரூபாய் பண மோசடி வழக்கிலிருந்து டேசி ஃபொரெஸ்ட் விடுவிப்பு!●பெண்களின் இதயத்தைப் பாதுகாக்கும் புதிய மருத்துவப் பாதை!●அடக்குமுறைச் சட்டங்களைத் திரும்பப் பெறுக: நாளை (04) பாராளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம்!●16 வயது சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடை!●கிரிஷ் வழக்கில் பிணை கிடைத்தாலும் நாமல் தொடர்ந்தும் சிறையில்!●
செய்திகள்

ஐரோப்பிய வலய நாடுகளின் தூதுவர்கள் ஜனாதிபதியிடம் தெரிவிப்பு

T

The Leader Desk

ஜூன் 24, 2022 • 5:15 PM

ஐரோப்பிய வலய நாடுகளின் தூதுவர்கள் ஜனாதிபதியிடம் தெரிவிப்பு

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஐரோப்பிய வலய நாடுகள் இலங்கையை நண்பராக கருதுவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
  • பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான எதிர்கால திட்டங்கள் தொடர்பில், நிலையான தரவுகளூடாக சர்வதேச சமூகம் இலங்கைக்கு துரிதமாக ஒத்துழைப்புகளை வழங்க முடியும் எனவும் ஐரோப்பிய வலய நாடுகளின் தூதுவர்கள் கூறியுள்ளனர்.
  • நாட்டில் 75 வீதமானவர்கள் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், அவர்களுக்கு தேவையான உரம் மற்றும் எரிபொருளை பெற்றுக்கொடுப்பதனூடாக பல பிரச்சினைகளுக்கும் உணவு விநியோகத்திற்கும் தீர்வுகளை பெற்றுக்கொடுக்க முடியும் என இதன்போது ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
எழுத்து அளவு:

ஐரோப்பிய வலய நாடுகள் இலங்கையை நண்பராக கருதுவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இன்று முற்பகல் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான எதிர்கால திட்டங்கள் தொடர்பில், நிலையான தரவுகளூடாக சர்வதேச சமூகம் இலங்கைக்கு துரிதமாக ஒத்துழைப்புகளை வழங்க முடியும் எனவும் ஐரோப்பிய வலய நாடுகளின் தூதுவர்கள் கூறியுள்ளனர்.

நாட்டில் 75 வீதமானவர்கள் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், அவர்களுக்கு தேவையான உரம் மற்றும் எரிபொருளை பெற்றுக்கொடுப்பதனூடாக பல பிரச்சினைகளுக்கும் உணவு விநியோகத்திற்கும் தீர்வுகளை பெற்றுக்கொடுக்க முடியும் என இதன்போது ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

யுத்தத்தின் பின்னரான மனிதாபிமான விடயங்களை கருத்திற்கொண்டு, நீண்டகால தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கும் சட்டத்தை அமுல்படுத்தும் போது, எவ்வித பேதங்களும் இன்றி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், ஐரோப்பிய வலய நாடுகளின் தூதுவர்களிடம் ஜனாதிபதி தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முதலீடு, சுற்றுலாத்துறை, கல்வி உள்ளிட்ட பல துறைகள் தொடர்பில் இதன்போது மிக விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

 
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...