Tamil Leader News
முக்கியம்
பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●மெர்லின் மன்றோ; உண்மையான அன்பைத் தேடிய சோகமான வாழ்க்கைப் பயணம்!●59 மில்லியன் ரூபாய் பண மோசடி வழக்கிலிருந்து டேசி ஃபொரெஸ்ட் விடுவிப்பு!●பெண்களின் இதயத்தைப் பாதுகாக்கும் புதிய மருத்துவப் பாதை!●அடக்குமுறைச் சட்டங்களைத் திரும்பப் பெறுக: நாளை (04) பாராளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம்!●16 வயது சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடை!●கிரிஷ் வழக்கில் பிணை கிடைத்தாலும் நாமல் தொடர்ந்தும் சிறையில்!●
செய்திகள்

மார்பகங்கள் குறித்து ஹிருணிகா பெருமை

T

The Leader Desk

ஜூன் 23, 2022 • 6:33 AM

மார்பகங்கள் குறித்து ஹிருணிகா பெருமை

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஐக்கிய மக்கள் பெண்கள் சக்தியினால் ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டம்.
  • பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்துக்கு முன்பாக நேற்று (22) முன்னெடுக்கப்பட்டது.
  • அதனையடுத்தே மேற்கண்டவாறு தெரிவித்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அரசியல் காரணங்களுக்காக ஹிருணிக்கா எனது வீட்டிற்கு அருகில் வந்து ஆர்ப்பாட்டம் செய்தார்.
எழுத்து அளவு:

ஐக்கிய மக்கள் பெண்கள் சக்தியினால் ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டம். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்துக்கு முன்பாக நேற்று (22) முன்னெடுக்கப்பட்டது. இதன்போது அங்கு கடமையிலிருந்த பெண் பொலிஸாரை. ஹிருணிகா பிரேமசந்திர கட்டியணைத்தார்.

அதன்பின்னர், அவரது மார்பகங்களை அவமதிக்கும் வகையிலான பதிவுகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டன.

அதனையடுத்தே மேற்கண்டவாறு தெரிவித்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அரசியல் காரணங்களுக்காக ஹிருணிக்கா எனது வீட்டிற்கு அருகில் வந்து ஆர்ப்பாட்டம் செய்தார். அதனை நாகரீகமாக கருதி, அரசியல் ரீதியில் அணுகி தீர்க்கவேண்டும் அத்துடன், பெண்மையை ,தாய்மையை கொச்சைப்படுத்தும் வகையில் எவரும் அநாகரீகமாக நடந்துகொள்ளக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.

தன் மார்பகங்கள் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பதிவிடப்பட்ட கேலி, கிண்டல் மற்றும் கொச்சப்படுதியமை தொடர்பில், தனது பேஸ்புக்கில் பதிவிட்டுள்ள ஹிருணிகா பிரேமசந்திர.

”எனது மார்பகங்கள் குறித்து நான் பெருமிதம் அடைகிறேன் அதனூடாக மூன்று அழகிய குழந்தைகளுக்கு நான் தாய்ப்பால் ஊட்டியுள்ளேன். நான் அவர்களை வளர்த்துள்ளேன்.  எனது ஒட்டுமொத்த உடலையும் அவர்களுக்காக அர்ப்பணித்தேன். 

​ஆர்ப்பாட்டத்தின் போது  வெளித்தோன்றிய எனது மார்பகங்களை வைத்து கிண்டலும், கேலியும் செய்பவர்கள், தாம் குழந்தைகளாக இருக்கும் போது தமது தாய்மார்களின் மார்பகக் காம்புகளிலிருந்து தாய்ப்பால் அருந்தியவராகவே இருப்பர் என நான் உறுதியாக நம்புகின்றேன்.

எப்படியென்றாலும், எனது மார்பகங்களைப் பற்றி நீங்கள் கதைத்து, மீம்ஸ்களை உருவாக்கி, நகைத்து இருக்கும் போது, எங்கோ ஒரு வரிசையில் இந்த தேசத்தின் ஒரு குடிமகன் இறந்திருப்பான் என்ற செய்தியை அறிந்திருப்பீர்கள் என்றும் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...