Tamil Leader News
முக்கியம்
பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●மெர்லின் மன்றோ; உண்மையான அன்பைத் தேடிய சோகமான வாழ்க்கைப் பயணம்!●59 மில்லியன் ரூபாய் பண மோசடி வழக்கிலிருந்து டேசி ஃபொரெஸ்ட் விடுவிப்பு!●பெண்களின் இதயத்தைப் பாதுகாக்கும் புதிய மருத்துவப் பாதை!●அடக்குமுறைச் சட்டங்களைத் திரும்பப் பெறுக: நாளை (04) பாராளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம்!●16 வயது சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடை!●கிரிஷ் வழக்கில் பிணை கிடைத்தாலும் நாமல் தொடர்ந்தும் சிறையில்!●
செய்திகள்

பிரதமரின் விஷேட உரை

T

The Leader Desk

ஜூன் 22, 2022 • 7:11 AM

பிரதமரின் விஷேட உரை

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பாராளுமன்றில் இன்று உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
  • இந்தியக் கடன் திட்டத்தின் கீழ் 40 ஆயிரம் அரிசியை இறக்குமதி செய்து, குறைந்த விலையின் கீழ் மக்களுக்கு வழங்க நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம்.
  • அத்தோடு, சீனி, கோதுமை, பருப்பு, பெரிய வெங்காயம், கடலை, காய்ந்த மிளகு, கடுகு போன்ற 112 பொருட்களை இறக்குமதி செய்யவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.
  • தோட்டத்தொழிலாளர் குடும்பங்களுக்கு 15 கிலோ கோதுமை மாவை 80 ரூபா சலுகைத் தொகையில் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.
எழுத்து அளவு:

பாராளுமன்றில் இன்று உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், நாட்டிலுள்ள பிரச்சினைகளைத் தீர்க்க அனைத்துக் கட்சிகளின் ஆலோசனைகளையும் உள்ளடக்கிய கூட்டுத்திட்டமொன்றை உருவாக்க வேண்டும். இதற்கு அனைத்துக் கட்சிகளின் ஒத்துழைப்புக்களையும் நாம் எதிர்ப்பார்க்கிறோம்.

இந்தியக் கடன் திட்டத்தின் கீழ் 40 ஆயிரம் அரிசியை இறக்குமதி செய்து, குறைந்த விலையின் கீழ் மக்களுக்கு வழங்க நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

அத்தோடு, சீனி, கோதுமை, பருப்பு, பெரிய வெங்காயம், கடலை, காய்ந்த மிளகு, கடுகு போன்ற 112 பொருட்களை இறக்குமதி செய்யவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு போஷாக்கு உணவுத்திட்டமொன்றையும் நாம் ஆரம்பித்துள்ளோம்.

தோட்டத்தொழிலாளர் குடும்பங்களுக்கு 15 கிலோ கோதுமை மாவை 80 ரூபா சலுகைத் தொகையில் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.

புதிய வரவு- செலவுத்திட்டத்தின் ஊடாக மேலும் பல சலுகைகளை வழங்கவும் நாம் எதிர்ப்பார்த்துள்ளோம்.

எரிபொருள் வரிசை தொடர்பாகவும் நாம் கவனம் செலுத்தியுள்ளோம். அடுத்தவாரமளவில் உணவுப்பாதுகாப்புக்குழுவானது நாடாளுமன்றுக்கு அறிக்கையொன்றை சமர்ப்பிக்கவுள்ளது.

இந்த அறிக்கை கிடைத்தவுடன் அனைத்துக் கட்சித் தலைவர்கள் மற்றும் ஏனைய பிரதிநிதிகளுடன் கலந்துரையாடவுள்ளோம்.

ஆசிய அபிவிருத்தி வங்கி, சர்வதேச நாணய நிதியத்திடம் நாம் நிதியுதவிகளைப் பெற்றுக் கொள்ள எதிர்ப்பார்த்துள்ளோம்.

இவ்வாறு தீர்வினை எதிர்ப்பார்த்தே நாம் செயற்பட்டுக் கொண்டிருக்கிறோம். நாம் எந்தப் பக்கத்தில் இருந்தாலும் நாட்டுக்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.

இந்த நாட்டை கட்டியெழுப்ப வேண்டும். பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப டொலர் பிரச்சினையை தீர்க்க வேண்டும்.

தற்போது டொலர் கையிருப்பானது பூச்சியமாகவே காணப்படுகிறது. இதனைக்கட்டியெழுப்புவது சுலபமான விடயமல்ல.

எரிபொருள் கூட்டுத்தாபனமானது 800 மில்லியன் டொலர் கடன் சுமையில் உள்ளது. இதனை செலுத்தாவிட்டால் சர்வதேசத்திடமிருந்து எரிபொருளை பெற்றுக் கொள்ள முடியாது போய்விடும்.

இவற்றுக்கானத் தீர்வை அரசியல் கட்சிகள் முன்வைத்தால் நாடாளுமன்றில் விவாதிக்க நாம் தயாராகவே இருக்கிறோம். விமர்சனங்களைவிட தீர்வையே நாம் எதிர்ப்பார்க்கிறோம்.- எனத் தெரிவித்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...