Tamil Leader News
முக்கியம்
பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●மெர்லின் மன்றோ; உண்மையான அன்பைத் தேடிய சோகமான வாழ்க்கைப் பயணம்!●59 மில்லியன் ரூபாய் பண மோசடி வழக்கிலிருந்து டேசி ஃபொரெஸ்ட் விடுவிப்பு!●பெண்களின் இதயத்தைப் பாதுகாக்கும் புதிய மருத்துவப் பாதை!●அடக்குமுறைச் சட்டங்களைத் திரும்பப் பெறுக: நாளை (04) பாராளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம்!●16 வயது சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடை!●கிரிஷ் வழக்கில் பிணை கிடைத்தாலும் நாமல் தொடர்ந்தும் சிறையில்!●
செய்திகள்

நாடளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை

T

The Leader Desk

ஜூன் 17, 2022 • 5:38 PM

நாடளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நிதி அமைச்சு, மத்திய வங்கியுடன் இணைந்து அரச மற்றும் தனியார் வங்கிகளின் ஒத்துழைப்புடன் போதுமான எரிபொருளை முன்பதிவு செய்வதற்கான நாணய மாற்று பத்திரங்களை திறப்பதற்கும் திட்டங்களை வகுக்க வேண்டும் என ஜனாதிபதி கூறியுள்ளார்.
  • எரிபொருள் விநியோகத்தின் போது, பொது போக்குவரத்திற்கு முன்னுரிமை வழங்குமாறு ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
  • பெட்ரோல், டீசல், எரிவாயு விநியோகம் மற்றும் இறக்குமதி தொடர்பில் கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையில் இன்று முற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இந்த விடயங்களை தெரிவித்துள்ளார்.
எழுத்து அளவு:

நிதி அமைச்சு, மத்திய வங்கியுடன் இணைந்து அரச மற்றும் தனியார் வங்கிகளின் ஒத்துழைப்புடன் போதுமான எரிபொருளை முன்பதிவு செய்வதற்கான நாணய மாற்று பத்திரங்களை திறப்பதற்கும் திட்டங்களை வகுக்க வேண்டும் என ஜனாதிபதி கூறியுள்ளார்.

பெட்ரோல், டீசல், எரிவாயு விநியோகம் மற்றும் இறக்குமதி தொடர்பில் கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையில் இன்று முற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இந்த விடயங்களை தெரிவித்துள்ளார்.

நீண்ட காலத்திற்கு எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கு விநியோகத்தர்களுடன் உடன்படிக்கையை ஏற்படுத்திக்கொள்வதற்கான இயலுமை தொடர்பிலும் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

எரிபொருள் விநியோகத்தின் போது, பொது போக்குவரத்திற்கு முன்னுரிமை வழங்குமாறு ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

தேவையற்ற வகையில் எரிபொருளை சேமித்து வைப்போருக்கு எதிராக கடுமையாக சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு பாதுகாப்பு தரப்பினருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

தற்போது கையிருப்பில் உள்ள எரிவாயுவை உரிய முறையில் பகிர்ந்தளிப்பதற்கும், விரைவாக எரிவாயுவை முன்பதிவு செய்வது தொடர்பிலும் இன்றைய கூட்டத்தின் போது கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

நாடளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை | Tamil Leader | We Lead the Nation