Tamil Leader News
முக்கியம்
பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●மெர்லின் மன்றோ; உண்மையான அன்பைத் தேடிய சோகமான வாழ்க்கைப் பயணம்!●59 மில்லியன் ரூபாய் பண மோசடி வழக்கிலிருந்து டேசி ஃபொரெஸ்ட் விடுவிப்பு!●பெண்களின் இதயத்தைப் பாதுகாக்கும் புதிய மருத்துவப் பாதை!●அடக்குமுறைச் சட்டங்களைத் திரும்பப் பெறுக: நாளை (04) பாராளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம்!●16 வயது சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடை!●கிரிஷ் வழக்கில் பிணை கிடைத்தாலும் நாமல் தொடர்ந்தும் சிறையில்!●
செய்திகள்

மீனவர் சமூகத்திற்கு முன்னுரிமை வழங்குமாறு பிரதமர் ஆலோசனை

T

The Leader Desk

ஜூன் 17, 2022 • 5:34 PM

மீனவர் சமூகத்திற்கு முன்னுரிமை வழங்குமாறு பிரதமர் ஆலோசனை

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பிரதமர் அலுவலகத்தில் இன்று (17) நடைபெற்ற உணவு பாதுகாப்பு தொடர்பான குழுவின் கூட்டத்தில் பிரதமர் இதனை கூறியுள்ளார்.
  • சுரேன் பட்டகொடவின் தலைமையிலான குழுவினூடாக உணவு பாதுகாப்பு தொடர்பில் தேவையான வேலைத்திட்டம் தயாரிக்கப்படுவதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
  • உணவு நெருக்கடியானது எதிர்காலத்தில் 4 மில்லியன் முதல் 5 மில்லியன் இலங்கையர்களை நேரடியாக பாதிக்கக்கூடியதாக இருந்தாலும், அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.
எழுத்து அளவு:

பிரதமர் அலுவலகத்தில் இன்று (17) நடைபெற்ற உணவு பாதுகாப்பு தொடர்பான குழுவின் கூட்டத்தில் பிரதமர் இதனை கூறியுள்ளார்.

ஆளும் மற்றும் எதிர்க்கட்சியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பிரதேச செயலாளர்களூடாக குழுக்களை அமைத்து, உணவு பாதுகாப்பை ஏற்படுத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்குமாறு பிரதமர் இதன்போது ஆலோசனை வழங்கியுள்ளார்.

சுரேன் பட்டகொடவின் தலைமையிலான குழுவினூடாக உணவு பாதுகாப்பு தொடர்பில் தேவையான வேலைத்திட்டம் தயாரிக்கப்படுவதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

உணவு நெருக்கடியினால் எவரும் பசியோடு வாடக்கூடாது என்பதே தமது கொள்கை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

உணவு நெருக்கடியானது எதிர்காலத்தில் 4 மில்லியன் முதல் 5 மில்லியன் இலங்கையர்களை நேரடியாக பாதிக்கக்கூடியதாக இருந்தாலும், அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.

மீனவர் சமூகத்திற்கு உணவு, எரிவாயு மற்றும் எரிபொருள் வழங்குவதற்கு முன்னுரிமை வழங்குமாறு அதிகாரிகளுக்கு பிரதமர் பணிப்புரை விடுத்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

மீனவர் சமூகத்திற்கு முன்னுரிமை வழங்குமாறு பிரதமர் ஆலோசனை | Tamil Leader | We Lead the Nation