Tamil Leader News
முக்கியம்
பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●மெர்லின் மன்றோ; உண்மையான அன்பைத் தேடிய சோகமான வாழ்க்கைப் பயணம்!●59 மில்லியன் ரூபாய் பண மோசடி வழக்கிலிருந்து டேசி ஃபொரெஸ்ட் விடுவிப்பு!●பெண்களின் இதயத்தைப் பாதுகாக்கும் புதிய மருத்துவப் பாதை!●அடக்குமுறைச் சட்டங்களைத் திரும்பப் பெறுக: நாளை (04) பாராளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம்!●16 வயது சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடை!●கிரிஷ் வழக்கில் பிணை கிடைத்தாலும் நாமல் தொடர்ந்தும் சிறையில்!●
செய்திகள்

நான் வன்முறையை தூண்டக்கூடிய சிந்தனைகளிற்கு ஆதரவளித்ததில்லை - சாணக்கியன்

T

The Leader Desk

ஜூன் 13, 2022 • 10:23 AM

நான் வன்முறையை தூண்டக்கூடிய சிந்தனைகளிற்கு ஆதரவளித்ததில்லை - சாணக்கியன்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனால் அண்மையில் பாராளுமன்றத்தில் ஆற்றப்பட்ட உரை தொடர்பில் பிரதமர் தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் இந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
  • வன்முறையைத் தூண்டக்கூடிய எந்தவொரு நடவடிக்கையிலும் தாம் ஒருபோதும் ஈடுபடவோ, ஆதரிக்கவோ, ஊக்குவிக்கவோ இல்லை என்பதை பிரதமர் அவதானித்திருப்பாரென பாராளுமன்ற உறுப்பினர் தமது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
எழுத்து அளவு:

பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனால் அண்மையில் பாராளுமன்றத்தில் ஆற்றப்பட்ட உரை தொடர்பில் பிரதமர் தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் இந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

வன்முறையைத் தூண்டக்கூடிய எந்தவொரு நடவடிக்கையிலும் தாம் ஒருபோதும் ஈடுபடவோ, ஆதரிக்கவோ, ஊக்குவிக்கவோ இல்லை என்பதை பிரதமர் அவதானித்திருப்பாரென பாராளுமன்ற உறுப்பினர் தமது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

3 தசாப்தங்களுக்கு மேல் பலவிதமான பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ள ஓர் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற போதிலும் சமாதானம், நல்லிணக்கம் மற்றும் அனைத்து சமூகத்தினரையும் உள்ளடக்கியதாக அனைத்து இலங்கையர்களின் தேவைகள் மற்றும் அபிலாஷைகளுக்காகவும் தாம் குரல் கொடுத்துவருவதாக அவர் கூறியுள்ளார்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மக்களின் குறைகள், தேவைகள் மற்றும் அபிலாஷைகளை நிறைவேற்றத் தவறிவிட்டதாக உணர்ந்தமையினாலேயே மக்கள் வன்முறையான முறையில் எதிர்வினையாற்றியதாக மே 09ஆம் திகதி தமது பாராளுமன்ற உரையில் குறிப்பிட்டதாக பாராளுமன்ற உறுப்பினர், பிரதமருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டு மக்களுக்கு ஆறுதலளிக்கும் உடனடி மற்றும் நிலையான நிவாரணம் வழங்கும் திட்டங்களுக்கும் அவர்களின் தற்போதைய குறைகள் மற்றும் எதிர்கால நல்வாழ்விற்காக எடுக்கப்படும் எந்தவொரு நடவடிக்கைக்கும் தமது ஆதரவை வழங்குவதாக பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் பிரதமருக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...