Tamil Leader News
முக்கியம்
பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●மெர்லின் மன்றோ; உண்மையான அன்பைத் தேடிய சோகமான வாழ்க்கைப் பயணம்!●59 மில்லியன் ரூபாய் பண மோசடி வழக்கிலிருந்து டேசி ஃபொரெஸ்ட் விடுவிப்பு!●பெண்களின் இதயத்தைப் பாதுகாக்கும் புதிய மருத்துவப் பாதை!●அடக்குமுறைச் சட்டங்களைத் திரும்பப் பெறுக: நாளை (04) பாராளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம்!●16 வயது சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடை!●கிரிஷ் வழக்கில் பிணை கிடைத்தாலும் நாமல் தொடர்ந்தும் சிறையில்!●
செய்திகள்

மின்துறை நிபுணர்களிடம் ஜனாதிபதி கோரிக்கை

T

The Leader Desk

மே 27, 2022 • 4:15 AM

மின்துறை நிபுணர்களிடம் ஜனாதிபதி கோரிக்கை

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மொத்த மின் தேவையில் 70% புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்களில் இருந்து உற்பத்தி செய்வது அரசாங்கத்தின் இலக்கு ஆகும்.
  • இதுவரை சூரிய சக்தியில் இருந்து கிட்டத்தட்ட 700 மெகாவொட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறன் உள்ளது.
  • பிரதான மின் கட்டமைப்பில் தற்போது உள்ள கொள்ளளவின் அடிப்படையில் சுமார் ஆயிரம் மெகாவொட் புதிய மின் உற்பத்தி சேர்க்க முடியும் என்று மின்சார சபையின் மேலதிக பொது முகாமையாளர் (பரிமாற்றம்) பி.டப்ளியு.
  • கனிய எண்ணையை பயன்படுத்தி ஒரு யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய 100 ரூபாயும், நிலக்கரியைப் பயன்படுத்தி ஒரு யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய ஐம்பது ரூபாவை விடவும் கூடுதலாக செலவிடப்படுகிறது.
எழுத்து அளவு:



மொத்த மின் தேவையில் 70% புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்களில் இருந்து உற்பத்தி செய்வது அரசாங்கத்தின் இலக்கு ஆகும். இதுவரை சூரிய சக்தியில் இருந்து கிட்டத்தட்ட 700 மெகாவொட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறன் உள்ளது. ஆனால், இலங்கை மின்சார சபை பொறியாளர்களின் எதிர்ப்பினால் அது சாத்தியமாகவில்லை என்பது பொதுமக்களின் கருத்து ஆகும். அதனை சரிசெய்து நிலவும் மின்சார நெருக்கடிக்கு தீர்வு காண நடைமுறை ரீதியாக உதவ முடியும் என ஜனாதிபதி தெரிவித்தார்.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்களை மின் உற்பத்திக்கு பங்களிப்பதில் நிலவும் பிரச்சினைகள் குறித்து ஆராயும் வகையில் நேற்று (26) பிற்பகல், கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

உலகின் பல நாடுகளில் சூரிய மின் உற்பத்தி முக்கிய உத்தியாக மாறியுள்ளது. அதனைப் பின்பற்றி தற்போது நிலவும் மின் நெருக்கடிக்கு விரைவான தீர்வாக கூரையில் பொருத்தப்பட்ட சூர்ய பேனல் அமைப்புகளைப் பயன்படுத்த வேண்டும் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

பிரதான மின் கட்டமைப்பில் தற்போது உள்ள கொள்ளளவின் அடிப்படையில் சுமார் ஆயிரம் மெகாவொட் புதிய மின் உற்பத்தி சேர்க்க முடியும் என்று மின்சார சபையின் மேலதிக பொது முகாமையாளர் (பரிமாற்றம்) பி.டப்ளியு. ஹெந்தஹேவா சுட்டிக் காட்டினார்.

கனிய எண்ணையை பயன்படுத்தி ஒரு யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய 100 ரூபாயும், நிலக்கரியைப் பயன்படுத்தி ஒரு யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய ஐம்பது ரூபாவை விடவும் கூடுதலாக செலவிடப்படுகிறது. மாறாக, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலத்தை பயன்படுத்தி வருடாந்தம் 300 பில்லியன் டொலர்களை சேமிக்க முடியும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தமித குமாரசிங்க தெரிவித்தார்.

அனல் மின் உற்பத்திக்கு மாதம் 100 மில்லியன் டொலருக்கும் அதிகமாக செலவாகும். இதன்படி, தற்போதைய விலையில் மின்சாரம் வழங்குவது கடினமான பணியாக இருக்கும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர சுட்டிக் காட்டினார்.

பாடசாலைகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட அரச கட்டிடங்களின் கூரைகளை சூரிய சக்தி மூலம் மின்சாரம் தயாரிப்பதற்கு பயன்படுத்துவதன் மூலம் பெருமளவிலான நிலத்தை சேமிக்க முடியும் என சுற்றாடல் அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத், ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி அநுர திஸாநாயக்க, அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் துறைசார் நிறுவனங்களின் தலைவர்களும் இச்சந்தர்ப்பத்தில் கலந்துகொண்டனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...