Tamil Leader News
முக்கியம்
பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●மெர்லின் மன்றோ; உண்மையான அன்பைத் தேடிய சோகமான வாழ்க்கைப் பயணம்!●59 மில்லியன் ரூபாய் பண மோசடி வழக்கிலிருந்து டேசி ஃபொரெஸ்ட் விடுவிப்பு!●பெண்களின் இதயத்தைப் பாதுகாக்கும் புதிய மருத்துவப் பாதை!●அடக்குமுறைச் சட்டங்களைத் திரும்பப் பெறுக: நாளை (04) பாராளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம்!●16 வயது சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடை!●கிரிஷ் வழக்கில் பிணை கிடைத்தாலும் நாமல் தொடர்ந்தும் சிறையில்!●
செய்திகள்

சாணக்கியனுக்கு மக்கள் வங்கியின் தலைவாரால் அனுப்பப்பட்ட முக்கிய கடிதம்!

T

The Leader Desk

மே 26, 2022 • 6:57 AM

சாணக்கியனுக்கு மக்கள் வங்கியின் தலைவாரால் அனுப்பப்பட்ட முக்கிய கடிதம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இது தொடர்பில் பாராளுமன்றில் தான் பேசியதற்காக மக்கள் வங்கியின் தலைவரினால் தனக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
  • இதில் முன்னாள் அமைச்சர் தயாகமகே என்னும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் கட்சியை சேர்ந்த முக்கியஸ்தர் 2019ஆம்ஆண்டு தொடக்கம் 2022ஆம்ஆண்டு வரையில் 5000மில்லியனுக்கும் அதிகமான தொகையினை கடனாக பெற்றுள்ளார்.
  • அதிகமான கடனைப்பெற்று இதுவரையில் ஒரு ரூபா கூட மீள செலுத்தாதவர்களில் முதல் பத்துப்பேரில் ஆறாவது இடத்தில் அவர் உள்ளார்.
  • லீசிங் கட்டமுடியாத சாதாரண மக்களின் வாகனங்களை பறித்துச்செல்கின்றீர்கள்,சிறு வர்த்தகளின் கடன்கள் கட்டாவிட்டால் வர்த்தக நிலையத்தினை ஏலத்தில் விடுகின்றீர்கள்.தனிநபர் 3000இதுவரை கட்டவில்லையென்றதுடன் எனக்கு கடிதம் அனுப்புகின்றார்கள்.ஏனென்னால் அவர் ரணிலின் சகா என்பதனாலாகும்.
எழுத்து அளவு:

இது தொடர்பில் பாராளுமன்றில் தான் பேசியதற்காக மக்கள் வங்கியின் தலைவரினால் தனக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்த கடிதத்தில் குறித்த கடன்களை மீளப் பெறுவதற்கான சட்ட ஆலோசனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக சாணக்கியன் கூறியுள்ளார்.

இந்த தகவல்களை வெளியிட்டதற்காக கோப் குழுவிலிருந்து என்னை நீக்கினாலும் அது தொடர்பில் கவலைகொள்ளப்போவதில்லையெனவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் உள்ள மட்டு.ஊடக அமையத்தில் நேற்று (25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் “இந்த நாடு மிக பாரதூரமான நெருக்கடிகளை கொண்டுள்ள நிலையில் பெரும்பாலானவர்கள் வாழ்வாதாரத்தினை இழந்துள்ள நிலையில் கடந்த ஐந்த வருடத்தில் மக்கள் வங்கியின் ஊடாக ஆக கூடுதலான கடன்களைப்பெற்றவர்கள் இதுவரையில் ஒரு ரூபா கூட செலுத்தாதவர்கள் உள்ளனர்.

இதில் முன்னாள் அமைச்சர் தயாகமகே என்னும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் கட்சியை சேர்ந்த முக்கியஸ்தர் 2019ஆம்ஆண்டு தொடக்கம் 2022ஆம்ஆண்டு வரையில் 5000மில்லியனுக்கும் அதிகமான தொகையினை கடனாக பெற்றுள்ளார்.

அதிகமான கடனைப்பெற்று இதுவரையில் ஒரு ரூபா கூட மீள செலுத்தாதவர்களில் முதல் பத்துப்பேரில் ஆறாவது இடத்தில் அவர் உள்ளார்.

இது ராஜபக்ஸ குடும்பத்தின் காசும் அல்ல தனியாரின் காசும் அல்ல.மக்களின் காசு.இது தொடர்பில்  நாடாளுமன்றத்தில் நான் பேசியதற்காக இன்று காலை மக்கள் வங்கியின் தலைவரினால் எனக்கு கடிதம் ஒன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது

.குறித்த கடன்களை மீளப்பெறுவதற்கான சட்ட ஆலோசனை செய்வதாக கூறப்பட்டுள்ளது.மூன்று பில்லியன் பணம் ஒரு தனி நபருக்கு வழங்கப்பட்டுள்ளது.ஆனால் நான்கு வருடத்திற்கு பின்னர் என்ன நடவடிக்கையெடுக்கலாம் என ஆராய்வதாக தெரிவிக்கின்றனர்.

லீசிங் கட்டமுடியாத சாதாரண மக்களின் வாகனங்களை பறித்துச்செல்கின்றீர்கள்,சிறு வர்த்தகளின் கடன்கள் கட்டாவிட்டால் வர்த்தக நிலையத்தினை ஏலத்தில் விடுகின்றீர்கள்.தனிநபர் 3000இதுவரை கட்டவில்லையென்றதுடன் எனக்கு கடிதம் அனுப்புகின்றார்கள்.ஏனென்னால் அவர் ரணிலின் சகா என்பதனாலாகும்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க புதிதாக நிதியமைச்சர் பதவியையேற்றதன் பின்னர் அந்த அமைச்சின் கீழ் வரும் மக்கள் வங்கி ஊடாக முதல்வேலையாக எனக்கு கடிதம் அனுப்பும் வேலையைதான் செய்துள்ளார்.

இனங்காணப்பட்ட முதல் பத்து பேருக்கு கடந்த ஐந்த வருடத்தில் 54பில்லியன் ரூபா கடன்கள் மக்கள் வங்கி ஊடாக வழங்கப்படடுள்ளது.இது கோப் குழுவினால் பெறப்பட்ட தகவல்.இதனை நான் பகிரங்கப்படுத்தியதற்காக என்னை இடைநிறுத்தினாலும் நான் கவலைப்படப்போவதில்லை.

கடன்பெறப்போகும்போத வங்கிகளில் ஏதாவது அடமானம் வைத்தே பணம் வழங்கப்படுகின்றதே.ஆனால் இவ்வளவு பெரிய நிதியானது எந்தவித ஆதனமும் இன்றி வழங்கப்பட்டுள்ளது.” என தெரிவித்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...