அந்தக் கூட்டத்தில் மத்திய வங்கியின் ஆளுநர் இந்த கோரிக்கை விடுத்தார்.
பொது நிதி தொடர்பான நாடாளுமன்றக் குழு நாடாளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்ஷன யாப்பா தலைமையில் நேற்றுக் காலை நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் கூடியது.
இதேவேளைஇ நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை தீர்த்துஇ நாட்டில் ஸ்திரமான பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு எடுக்கப்படவுள்ள கொள்கை தீர்மானங்கள் மற்றும் அதற்கான முன்னோக்கி செல்லும் வழிகள் குறித்து உடனடியாக முழுமையான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு இலங்கை மத்திய வங்கியின் ஆளுநரிடம் குழு கோரிக்கை விடுத்துள்ளது.
கடன் வரம்பை ரூ.1 ரில்லியனாக உயர்த்துவதற்கான முன்மொழிவுக்கும் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
தற்போதைய இக்கட்டான பொருளாதார சூழ்நிலையின் யதார்த்தங்களை மறைக்க வேண்டாம் என்றும் குறுகிய அரசியல் நலன்களுக்கு அப்பாற்பட்டு கட்சி பேதமின்றி நீண்டகால பொருளாதார ஸ்திரத்தன்மைக்காக எடுக்கப்படும் கொள்கை முடிவுகளுக்கு ஆதரவளிக்குமாறும் ஆளுநர் மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
முன்னதாக எரிபொருள் விலை சூத்திரமொன்று அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும் எதிர்ப்பின் மத்தியில் அதனை செயற்படுத்த முடியாத நிலையில் இன்று மீண்டும் அதனை அறிமுகப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக வீரசிங்க சுட்டிக்காட்டினார்.
தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து விளக்கமளித்த மத்திய வங்கியின் ஆளுநர், உலக வங்கியின் உதவியுடன் செயற்பாட்டுத் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள 600 மில்லியன் அமெரிக்க டொலர்கள், எரிபொருள் மற்றும் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளை கொள்வனவு செய்வதற்கு பயன்படுத்துவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இலங்கை மின்சார சபை, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம், லிட்ரோ கேஸ் போன்ற நிறுவனங்களுக்கு பாரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளமையினால் டொலர்களை கொள்வனவு செய்வதற்கான ரூபா பணம் இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாகவும், முதலாவது தொழில்நுட்பப் பிரிவு தொடர்பான கலந்துரையாடலுக்கான கடைசி நாள் நேற்றைய தினம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அடுத்த 3-4 மாதங்களில் பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடிவடைவதற்கும் கடனை மறுசீரமைப்பதற்கும் தொடர்புடைய IMF உடன்படிக்கைகளை முடிப்பது சவாலானதாக இருக்கும் என்றார்.
மத்திய வங்கியின் ஆளுநராக மீண்டும் குமாரசாமி?
T
The Leader Desk
மே 25, 2022 • 8:10 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- அந்தக் கூட்டத்தில் மத்திய வங்கியின் ஆளுநர் இந்த கோரிக்கை விடுத்தார்.
- கடன் வரம்பை ரூ.1 ரில்லியனாக உயர்த்துவதற்கான முன்மொழிவுக்கும் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
- முன்னதாக எரிபொருள் விலை சூத்திரமொன்று அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும் எதிர்ப்பின் மத்தியில் அதனை செயற்படுத்த முடியாத நிலையில் இன்று மீண்டும் அதனை அறிமுகப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக வீரசிங்க சுட்டிக்காட்டினார்.
- அடுத்த 3-4 மாதங்களில் பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடிவடைவதற்கும் கடனை மறுசீரமைப்பதற்கும் தொடர்புடைய IMF உடன்படிக்கைகளை முடிப்பது சவாலானதாக இருக்கும் என்றார்.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

