Tamil Leader News
முக்கியம்
பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●மெர்லின் மன்றோ; உண்மையான அன்பைத் தேடிய சோகமான வாழ்க்கைப் பயணம்!●59 மில்லியன் ரூபாய் பண மோசடி வழக்கிலிருந்து டேசி ஃபொரெஸ்ட் விடுவிப்பு!●பெண்களின் இதயத்தைப் பாதுகாக்கும் புதிய மருத்துவப் பாதை!●அடக்குமுறைச் சட்டங்களைத் திரும்பப் பெறுக: நாளை (04) பாராளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம்!●16 வயது சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடை!●கிரிஷ் வழக்கில் பிணை கிடைத்தாலும் நாமல் தொடர்ந்தும் சிறையில்!●
செய்திகள்

புதிய பிரதமரின் கீழ் இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு ஜனாதிபதி இணக்கம் - மைத்ரி

T

The Leader Desk

ஏப்ரல் 30, 2022 • 2:31 AM

புதிய பிரதமரின் கீழ் இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு ஜனாதிபதி இணக்கம் - மைத்ரி

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அரசாங்கத்தில் இருந்து விலகி சுதந்திரமாக செயற்பட்ட ஜனாதிபதிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் நேற்று (29) பாராளுமன்றத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
  • புதிய பிரதமர் உட்பட 15 தொடக்கம் 20 வரையிலான அமைச்சர்களை உள்ளடக்கிய வகையில் அமைச்சரவையை ஸ்தாபிக்க ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார்.
  • அரசாங்கத்தை பாதுகாக்கும் நோக்கம் எமக்கு கிடையாது.
  • இடைக்கால அரசாங்கத்தின் ஊடாக அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் முழுமையாக இரத்து செய்யப்பட்டு 21ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்படும் என்றார்.
எழுத்து அளவு:


அரசாங்கத்தில் இருந்து விலகி சுதந்திரமாக செயற்பட்ட ஜனாதிபதிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் நேற்று (29) பாராளுமன்றத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

புதிய அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்குவதற்காக தேசிய சபையொன்றை நியமிக்க குறித்த சந்திப்பின் போது ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

புதிய பிரதமர் உட்பட 15 தொடக்கம் 20 வரையிலான அமைச்சர்களை உள்ளடக்கிய வகையில் அமைச்சரவையை ஸ்தாபிக்க ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

இடைக்கால அரசாங்கம் தொடர்பில் ஜனாதிபதி எதிர்வரும் நாட்களில் ஐக்கிய மக்கள் சக்தியினருடனும்,மக்கள் விடுதலை முன்னணியினருடனும் பேச்சுவார்த்தையினை முன்னெடுக்கவுள்ளார்.

அதேபோல் சுதந்திர கட்சியும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கும். அரசாங்கத்தை பாதுகாக்கும் நோக்கம் எமக்கு கிடையாது.

தற்போதைய நிலையில் ஜனாதிபதியை பதவி நீக்கவும் முடியாது. பொதுத்தேர்தல் ஒன்றை நடத்தும் சாதகமான சூழல் நாட்டில் கிடையாது.

சமூக கட்டமைப்பில் தோற்றம் பெற்றுள்ள நெருக்கடிக்கு இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபித்து அதனூடாக குறுகிய காலதீர்வை கண்டு பெற்றுக்கொள்வது அவசியமாகும்.

இடைக்கால அரசாங்கத்தின் ஊடாக அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் முழுமையாக இரத்து செய்யப்பட்டு 21ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்படும் என்றார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...