Tamil Leader News
முக்கியம்
பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●மெர்லின் மன்றோ; உண்மையான அன்பைத் தேடிய சோகமான வாழ்க்கைப் பயணம்!●59 மில்லியன் ரூபாய் பண மோசடி வழக்கிலிருந்து டேசி ஃபொரெஸ்ட் விடுவிப்பு!●பெண்களின் இதயத்தைப் பாதுகாக்கும் புதிய மருத்துவப் பாதை!●அடக்குமுறைச் சட்டங்களைத் திரும்பப் பெறுக: நாளை (04) பாராளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம்!●16 வயது சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடை!●கிரிஷ் வழக்கில் பிணை கிடைத்தாலும் நாமல் தொடர்ந்தும் சிறையில்!●
செய்திகள்

“வெளிநாடுகளில் இருந்து உதவிகள் கிடைத்ததும் கிளர்ச்சிகள் அனைத்தும் மறைந்துவிடும்” - மனோவிடம் பிரதமர்!

T

The Leader Desk

ஏப்ரல் 29, 2022 • 4:56 PM

“வெளிநாடுகளில் இருந்து உதவிகள் கிடைத்ததும் கிளர்ச்சிகள் அனைத்தும் மறைந்துவிடும்” - மனோவிடம் பிரதமர்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இதையடுத்து எம்.பி மனோ கணேசன், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இவ்விடயம் தொடர்பில் கேட்டறிந்தார்.
  • அப்போது அந்த கிளர்ச்சிகள் அனைத்தும் மறைந்துவிடும்.
  • பயப்படாதீங்க தம்பி..'' என்று கூறி தொலைபேசி உரையாடலை பிரமர் முடித்ததாக மனோ தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 2/2: நேற்றிரவு, சபாநாயகர் மகிந்தயாபாவிடம் @ParliamentLK , இதுபற்றி கேட்ட போது, தனக்கு இதுபற்றி ஒன்றும் தெரியாது என்றார்.
எழுத்து அளவு:

அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்ட அரசியலமைப்பு திருத்தங்கள் அடங்கிய சட்டமூலம் அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதா என பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் நேற்றிரவு (28) சபாநாயகரை தொடர்பு கொண்டு வினவியபோது அவ்வாறான சட்டமூலம் தமக்கு இதுவரை கிடைக்கவில்லை என அவர் பதிலளித்துள்ளார்.

 இதையடுத்து எம்.பி மனோ கணேசன், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இவ்விடயம் தொடர்பில் கேட்டறிந்தார். ''அந்த அரசியல் சாசனக் கதைகளை விட பொருளாதாரம்தான் முக்கியம் தம்பி. மக்களின் பொருளாதார பிரச்சினைகளுக்கு நாங்கள் தீர்வுகளை வழங்குகிறோம். 

நாளை, நாளை மறுநாள் வெளிநாடுகளில் இருந்து உதவிகள் கிடைக்கும். அப்போது அந்த கிளர்ச்சிகள் அனைத்தும் மறைந்துவிடும். பயப்படாதீங்க தம்பி..'' என்று கூறி தொலைபேசி உரையாடலை பிரமர் முடித்ததாக மனோ தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

எவ்வாறாயினும் 19ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை தேவையான மற்றும் உரிய காலத் திருத்தங்களுடன் அமுல்படுத்துவதற்கான பிரேரணையை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஏப்ரல் 25ஆம் திகதி மாலை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பித்துள்ளதையடுத்து அதற்கு ஒப்புதல் பெறப்பட்டதாக அரசாங்கப் பேச்சாளர்கள் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தனர். 

அத்தோடு, நாடு எதிர்நோக்கும் சவாலை முறியடிக்க எடுக்க வேண்டிய குறுகிய கால மற்றும் நீண்ட கால தீர்வுகள் குறித்து கடந்த 19ஆம் திகதி பாராளுமன்றத்தில் கருத்து தெரிவித்த பிரதமர், புதிய அரசியலமைப்பு திருத்தம் குறித்தும் உரையாற்றினார். 

நாட்டின் பொருளாதார, அரசியல் மற்றும் சமூக ஸ்திரத்தன்மைக்கு விரைவான மற்றும் நடைமுறைத் தீர்வாக அரசியலமைப்புத் திருத்தம் தேவை என்று தான் நம்புவதாக அவர் கூறினார். 

அரசியலமைப்பின் 19வது திருத்தத்தை தேவையான மற்றும் சரியான நேரத்தில் திருத்தங்களுடன் ஜனநாயக ரீதியாக அமுல்படுத்துவதே மிக உடனடி மற்றும் குறுகிய கால தீர்வாகும் என்று பிரதமர் வலியுறுத்தியிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...