Tamil Leader News
முக்கியம்
பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●மெர்லின் மன்றோ; உண்மையான அன்பைத் தேடிய சோகமான வாழ்க்கைப் பயணம்!●59 மில்லியன் ரூபாய் பண மோசடி வழக்கிலிருந்து டேசி ஃபொரெஸ்ட் விடுவிப்பு!●பெண்களின் இதயத்தைப் பாதுகாக்கும் புதிய மருத்துவப் பாதை!●அடக்குமுறைச் சட்டங்களைத் திரும்பப் பெறுக: நாளை (04) பாராளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம்!●16 வயது சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடை!●கிரிஷ் வழக்கில் பிணை கிடைத்தாலும் நாமல் தொடர்ந்தும் சிறையில்!●
செய்திகள்

இலங்கைக்கு எதிர்வரும் மாதம் இன்னும் கடினமானது - முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க

T

The Leader Desk

ஏப்ரல் 29, 2022 • 11:26 AM

இலங்கைக்கு எதிர்வரும் மாதம் இன்னும் கடினமானது - முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து நேற்று கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இடம்பெற்ற இளம் தொழில் வல்லுநர்கள் குழுவுடனான கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
  • இதேவேளை இலங்கை மின்சாரசபை இவ்வருடம் 100 பில்லியன் ரூபா நட்டத்தை சந்திக்க நேரிடும் எனவும், தற்போது மின் அலகு ஒன்றுக்கு 17 ரூபா அறவிடப்படுவதாகவும் ஆனால் அதற்கான செலவு 53 ரூபாவாகும் எனவும் இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளமையை முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.
  • “2020 மற்றும் 2021 இல் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் இழப்பு 83 பில்லியன் ரூபாயாகும்.
  • எனினும் ஒரு நாளில் ஒரு பில்லியன் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாக அமைச்சர் இப்போது கூறுகிறார். தற்போது விலை உயர்த்தப்பட்ட போதும், நாளொன்றுக்கு 327 மில்லியன் ரூபாய் நட்டம் ஏற்படும் என கூறப்படுகின்றது.
எழுத்து அளவு:


நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து நேற்று கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இடம்பெற்ற இளம் தொழில் வல்லுநர்கள் குழுவுடனான கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த விவகாரங்கள் அனைத்தும் சில காலமாக இணைக்கப்பட்டுவிட்டதாகத் தெரிவித்த முன்னாள் பிரதமர், டொலர் பற்றாக்குறை, வருமானம் குறைதல், செலவு அதிகரிப்பு மற்றும் தாங்க முடியாத கடன் சுமையே பிரதான பிரச்சினைகளாகும் என்றார்.

2021ஆம் ஆண்டளவில் இலங்கை மின்சார சபைக்கு 79 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் கடந்த வாரம் பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்த நிலையில் இந்த நட்டம் இன்னும் அதிகமாக இருப்பதாகவும் இந்த பொருளாதார நெருக்கடிக்கு காரணமான பல முக்கிய காரணிகளில் இதுவும் ஒன்று எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை இலங்கை மின்சாரசபை இவ்வருடம் 100 பில்லியன் ரூபா நட்டத்தை சந்திக்க நேரிடும் எனவும், தற்போது மின் அலகு ஒன்றுக்கு 17 ரூபா அறவிடப்படுவதாகவும் ஆனால் அதற்கான செலவு 53 ரூபாவாகும் எனவும் இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளமையை முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.

“2020 மற்றும் 2021 இல் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் இழப்பு 83 பில்லியன் ரூபாயாகும். எனினும் ஒரு நாளில் ஒரு பில்லியன் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாக அமைச்சர் இப்போது கூறுகிறார். 

தற்போது விலை உயர்த்தப்பட்ட போதும், நாளொன்றுக்கு 327 மில்லியன் ரூபாய் நட்டம் ஏற்படும் என கூறப்படுகின்றது. இதன்படி ஆண்டு இறுதிக்குள் நாட்டுக்கு மேலும் 80 பில்லியன் டாலர் இழப்பு ஏற்படும்.

இந்தக் கடன்கள் இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கியினால் வழங்கப்படுகின்றன. "இலங்கை வங்கி, மக்கள் வங்கி மற்றும் தேசிய சேமிப்பு வங்கி ஆகியவையும் இலங்கை அரசுக்கு ஆயிரம் கோடி ரூபாய் கடனாக வழங்கியுள்ளன."

“நஷ்டத்தைக் குறைக்க மின்சாரம் மற்றும் எரிபொருள் கட்டணங்கள் அதிகரிக்கப்பட வேண்டும். இதையெல்லாம் தாங்கிக் கொள்ள வேண்டுடிய நிலை இன்று நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

 

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...