Tamil Leader News
முக்கியம்
பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●மெர்லின் மன்றோ; உண்மையான அன்பைத் தேடிய சோகமான வாழ்க்கைப் பயணம்!●59 மில்லியன் ரூபாய் பண மோசடி வழக்கிலிருந்து டேசி ஃபொரெஸ்ட் விடுவிப்பு!●பெண்களின் இதயத்தைப் பாதுகாக்கும் புதிய மருத்துவப் பாதை!●அடக்குமுறைச் சட்டங்களைத் திரும்பப் பெறுக: நாளை (04) பாராளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம்!●16 வயது சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடை!●கிரிஷ் வழக்கில் பிணை கிடைத்தாலும் நாமல் தொடர்ந்தும் சிறையில்!●
செய்திகள்

ஊழல் மோசடிகளை ஒழிப்பதற்கான ஸ்திரமான கட்டமைப்பு ஸ்தாபிக்கப்படும் - சஜித்

T

The Leader Desk

ஏப்ரல் 29, 2022 • 2:31 AM

ஊழல் மோசடிகளை ஒழிப்பதற்கான ஸ்திரமான கட்டமைப்பு ஸ்தாபிக்கப்படும் - சஜித்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அதனை எந்த வகையிலும் மாற்ற முடியாதவாறு நிரந்தர நிறுவனமாக அரசியலமைப்பின் ஊடாக ஸ்திரமானதாக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் அவர் கூறினார்.
  • ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டியிலிருந்து கொழும்பு நோக்கி வரும் பேரணியின் மூன்றாம் நாள் வியாழக்கிழமை (28) கலிகமுவையில் ஆரம்பமானது.
  • ராஜபக்ஷ குடும்பம் 30 மாதங்களுக்குள் நாட்டை வங்குரோத்தடையச் செய்துள்ளது.
  • ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் கொள்ளையர்களை இனங்கண்டு அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கே வழங்கப்படும்.
எழுத்து அளவு:


அதனை எந்த வகையிலும் மாற்ற முடியாதவாறு நிரந்தர நிறுவனமாக அரசியலமைப்பின் ஊடாக ஸ்திரமானதாக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் அவர் கூறினார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டியிலிருந்து கொழும்பு நோக்கி வரும் பேரணியின் மூன்றாம் நாள் வியாழக்கிழமை (28) கலிகமுவையில் ஆரம்பமானது.

இதன் போது இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

ராஜபக்ஷ குடும்பம் 30 மாதங்களுக்குள் நாட்டை வங்குரோத்தடையச் செய்துள்ளது. தேசிய வளங்கள், தேசிய சொத்துக்கள் மற்றும் நிதி என்பவற்றை கொள்ளையடித்ததன் காரணமாகவே நாடு இவ்வாறு வக்குரோத்தடைந்துள்ளது.

இவ்வாறு நாட்டை குறுகிய காலத்திற்குள் வங்குரோத்தடையச் செய்துள்ள ராஜபக்ஷக்கள் மக்களை ஆணையுடனேயே பதவியிலிருந்து விலக்கப்படுவார்கள் என்றார்.

ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் கொள்ளையர்களை இனங்கண்டு அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கே வழங்கப்படும்.

எக்காரணத்தைக் கொண்டும் இந்நிலைப்பாடு மாறாது. மக்களின் பணத்தை கொள்ளையடித்த குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வழங்கும் பொறுப்பு, முப்பது வருட யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த சரத் பொன்சேகாவிடம் கையளிக்கப்படும்.

வேறு எவருடனும் ஐக்கிய மக்கள் சக்திக்கு எந்த இரகசிய ஒப்பந்தமும் இல்லை. நாட்டில் உள்ள 220 இலட்சம் மக்களுடனயே எமது ஒப்பந்தம். என்றார்.

அரசுக்கு எதிரான இந்த பேரணி இன்று தனோவிடவிலிருந்து யக்கல வரையும் , நாளை சனிக்கிழமை யக்கலையிலிருந்து பேலியகொடையை வந்தடையவுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...