Tamil Leader News
முக்கியம்
பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●மெர்லின் மன்றோ; உண்மையான அன்பைத் தேடிய சோகமான வாழ்க்கைப் பயணம்!●59 மில்லியன் ரூபாய் பண மோசடி வழக்கிலிருந்து டேசி ஃபொரெஸ்ட் விடுவிப்பு!●பெண்களின் இதயத்தைப் பாதுகாக்கும் புதிய மருத்துவப் பாதை!●அடக்குமுறைச் சட்டங்களைத் திரும்பப் பெறுக: நாளை (04) பாராளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம்!●16 வயது சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடை!●கிரிஷ் வழக்கில் பிணை கிடைத்தாலும் நாமல் தொடர்ந்தும் சிறையில்!●
செய்திகள்

அரசுக்கு எதிராக நாடளாவிய ரீதியில் போராட்டம்!

T

The Leader Desk

ஏப்ரல் 28, 2022 • 11:27 AM

அரசுக்கு எதிராக நாடளாவிய ரீதியில் போராட்டம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பல தொழிற்கங்கள் கொழும்பில் தமது ஆர்ப்பாட்ட பேரணியை முன்னெடுத்திருந்த நிலையில், கொழும்பின் பல பகுதிகளும் முடக்கப்பட்டன.
  • பத்தனை கிறேக்கிலி, மவுண்ட்வேர்ணன், இராணியப்பு, பொரஸ்கிறிக் ஆகிய தோட்டங்களை சேர்ந்த தோட்ட தொழிலாளர்கள், இளைஞர்கள், யுவதிகள், பத்தனை முச்சக்கரவண்டி சாரதிகள், வாகன சாரதிகள், நகர வர்த்தகர்கள் என சுமார் 500ற்கும் மேற்பட்டோர் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்தனர்.
  • அதேபோல், மன்னார் பொது வைத்தியசாலையைச் சேர்ந்த நான்கு சுகாதார சேவைகள் தொழிற்சங்க அமைப்புக்கள் நண்பகல் 12 மணி தொடக்கம் இரண்டு மணி வரை வைத்தியசாலைக்கு முன்பாக பதாதைகளை ஏந்தியவாறு தங்கள் போராட்டத்ததை முன்னெடுத்திருந்தனர்.
  • https://bit.ly/3uHGkH6 தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.
எழுத்து அளவு:


பல தொழிற்கங்கள் கொழும்பில் தமது ஆர்ப்பாட்ட பேரணியை முன்னெடுத்திருந்த நிலையில், கொழும்பின் பல பகுதிகளும் முடக்கப்பட்டன.

நாட்டின் பல பிரதான நகரங்கள் இன்று முன்னெடுக்கப்பட்ட போராட்டம் காரணமாக ஸ்தம்பிதமடைந்திருந்தன. பாடசாலைகள் மற்றும் வங்கி சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதோடு புகையிரத சேவை தபால் சேவைகள் என்பன முற்றாக செயலிழந்தன.

எனினும் தனியார் மற்றும் அரச பஸ் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இடம் பெறுகின்றன.
தற்போதைய அரசை பதவி விலகுமாறு கோரும் வகையிலான கோசங்களை எழுப்பியவாறும் பதாதைகளை ஏந்தியவாறும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தற்போது அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றம், தொடர் மின் துண்டிப்பு, எரிபொருள் விலையேற்றம், டீசல் தட்டு என்பவற்றை கண்டித்தும் மக்கள் கோசங்களை எழுப்பினர்.

கொட்டகலை பத்தனை சந்தியில் தோட்ட தொழிலாளர்கள், இளைஞர், யுவதிகள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களால் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

பத்தனை கிறேக்கிலி, மவுண்ட்வேர்ணன், இராணியப்பு, பொரஸ்கிறிக் ஆகிய தோட்டங்களை சேர்ந்த தோட்ட தொழிலாளர்கள், இளைஞர்கள், யுவதிகள், பத்தனை முச்சக்கரவண்டி சாரதிகள், வாகன சாரதிகள், நகர வர்த்தகர்கள் என சுமார் 500ற்கும் மேற்பட்டோர் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

ne

நீர்கொழும்பு வைத்தியசாலையின் வைத்தியர்கள், தாதியர்கள், ஊழியர்கள் ஒன்றிணைந்து இன்று நண்பகல் வைத்தியசாலை முன்பாக அரசாங்கத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதேபோல், மன்னார் பொது வைத்தியசாலையைச் சேர்ந்த நான்கு சுகாதார சேவைகள் தொழிற்சங்க அமைப்புக்கள் நண்பகல் 12 மணி தொடக்கம் இரண்டு மணி வரை வைத்தியசாலைக்கு முன்பாக பதாதைகளை ஏந்தியவாறு தங்கள் போராட்டத்ததை முன்னெடுத்திருந்தனர்.

nu

நுவரெலியாவில் இலங்கை ஆசிரியர் சங்கம், ஆசிரியர் விடுதலை முன்னணி ,மலையக ஆசிரியர் முனனணி,இலங்கை கல்வி சம்மேளனம், முற்போக்கு ஜனநாயக ஆசிரியர் சங்கம் ஆகியன ஏனைய ஆசிரியர் தொழிற்சங்கங்களுடன் இணைந்து நுவரெலியா மாநகரில் மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தன.

ban

பலாங்கொடையிலும் இது போன்று கல்வி வலயத்தின் அதிபர்கள், ஆசிரியர்கள் இணைந்து அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்தை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

அரசுக்கு எதிராக நாடளாவிய ரீதியில் போராட்டம்! | Tamil Leader | We Lead the Nation