Tamil Leader News
முக்கியம்
பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●மெர்லின் மன்றோ; உண்மையான அன்பைத் தேடிய சோகமான வாழ்க்கைப் பயணம்!●59 மில்லியன் ரூபாய் பண மோசடி வழக்கிலிருந்து டேசி ஃபொரெஸ்ட் விடுவிப்பு!●பெண்களின் இதயத்தைப் பாதுகாக்கும் புதிய மருத்துவப் பாதை!●அடக்குமுறைச் சட்டங்களைத் திரும்பப் பெறுக: நாளை (04) பாராளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம்!●16 வயது சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடை!●கிரிஷ் வழக்கில் பிணை கிடைத்தாலும் நாமல் தொடர்ந்தும் சிறையில்!●
செய்திகள்

நாட்டின் நெறுக்கடிநிலைக்கு தீர்வு காண வடக்கில் பேச்சுவார்த்தை!

T

The Leader Desk

ஏப்ரல் 27, 2022 • 7:29 AM

நாட்டின் நெறுக்கடிநிலைக்கு தீர்வு காண வடக்கில் பேச்சுவார்த்தை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இது தொடர்பில் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் உணவகம் ஒன்றில் கடந்த 25 ஆம் திகதி வக்கின் மக்கள் பிரதிநிதிகள், மற்றும் கட்சி தலைவர்களுக்கு இடையேயான சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.
  • இதன் போது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழித்து, 20வது திருத்தத்தை நீக்கி, 19வது திருத்தத்தை 21வது திருத்தமாக மீண்டும் அமுல்படுத்தி, தேசிய பிரச்சினைக்கு தீர்வாக சமஷ்டி ஆட்சிக் கட்டமைப்பை ஏற்படுத்த தீர்மானிக்கப்பட்டதாக யாழ் ஊடகவியலாளர்கள் தெரிவித்தனர்.
  • இந்த பேச்சுவார்த்தையின் போது எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் விரிவான அறிக்கையை தயார் செய்யுமாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரனுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதுடன் அது எதிர்வரும் நாட்களில் வெளியிடப்படும்.
எழுத்து அளவு:

இது தொடர்பில்  யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் உணவகம் ஒன்றில் கடந்த 25 ஆம் திகதி வக்கின் மக்கள் பிரதிநிதிகள், மற்றும் கட்சி தலைவர்களுக்கு இடையேயான சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.

இதன் போது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழித்து, 20வது திருத்தத்தை நீக்கி, 19வது திருத்தத்தை 21வது திருத்தமாக மீண்டும் அமுல்படுத்தி, தேசிய பிரச்சினைக்கு தீர்வாக சமஷ்டி ஆட்சிக் கட்டமைப்பை ஏற்படுத்த தீர்மானிக்கப்பட்டதாக யாழ் ஊடகவியலாளர்கள் தெரிவித்தனர்.

 இந்த பேச்சுவார்த்தையின் போது எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் விரிவான அறிக்கையை தயார் செய்யுமாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரனுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதுடன் அது எதிர்வரும் நாட்களில் வெளியிடப்படும்.

வெகுஜன அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கு மேலதிகமாக தமிழ் மக்கள் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவர் வி.ஆனந்த சங்கரி, தமிழரசுக் கட்சியின் தலைவர் என்.ஸ்ரீகாந்தா, டெலோ அமைப்பின் பிரதிநிதி விந்தன் கனகரத்தினம், ஈ.பி.ஆர்.எல்.எப்., தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன். மற்றும் புளொட் தலைவர் சித்தாலி தர்மா ஆகியோர் கலந்து கொண்டனர்.எனினும் 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என தொடர்ந்து அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து வந்த இந்த அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அது குறித்து இந்த சந்திப்பின் போது அதிக கவனம் செலுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

நாட்டின் நெறுக்கடிநிலைக்கு தீர்வு காண வடக்கில் பேச்சுவார்த்தை! | Tamil Leader | We Lead the Nation