Tamil Leader News
முக்கியம்
பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●மெர்லின் மன்றோ; உண்மையான அன்பைத் தேடிய சோகமான வாழ்க்கைப் பயணம்!●59 மில்லியன் ரூபாய் பண மோசடி வழக்கிலிருந்து டேசி ஃபொரெஸ்ட் விடுவிப்பு!●பெண்களின் இதயத்தைப் பாதுகாக்கும் புதிய மருத்துவப் பாதை!●அடக்குமுறைச் சட்டங்களைத் திரும்பப் பெறுக: நாளை (04) பாராளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம்!●16 வயது சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடை!●கிரிஷ் வழக்கில் பிணை கிடைத்தாலும் நாமல் தொடர்ந்தும் சிறையில்!●
செய்திகள்

கடனை திருப்பிச்செலுத்த தவறும் அபாயமுள்ள நாடாக இலங்கை!

T

The Leader Desk

ஏப்ரல் 27, 2022 • 3:30 AM

கடனை திருப்பிச்செலுத்த தவறும் அபாயமுள்ள நாடாக இலங்கை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • D மட்டம் என்பது கடனை செலுத்தத் தவறும் அபாயமுள்ள நாடு என்பதையே குறிக்கின்றது. குறித்த காலப்பகுதிக்குள் இலங்கை அந்த வட்டியை செலுத்தும் என எதிர்ப்பார்க்க முடியாது என Standard and poor’s நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
  • இலங்கைக்கு இப்போது 51 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கடன் இருக்கிறது.
  • இதில் சுமார் 35 பில்லியன் டாலர்கள் வரை கடன்களைத் திருப்பிச் செலுத்துவதைத் தள்ளி வைத்திருக்கிறது. இலங்கை இந்த ஆண்டிலேயே சுமார் 7 பில்லியன் அமெரிக்க டாலர் கடன்களை இலங்கை திருப்பிச் செலுத்த வேண்டியிருக்கிறது.
  • ஆனால் இலங்கையிடம் இப்போது 1.93 பில்லியனுக்கும் குறைவான அமெரிக்க டாலர்கள் மட்டுமே கையிருப்பில் உள்ளது.
எழுத்து அளவு:

2023 ஆண்டு முதல் 2028ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் முதிர்ச்சியடையவுள்ள இறையாண்மை முறிகளுக்கான ஏப்ரல் 18 அன்று செலுத்த வேண்டிய வட்டியை செலுத்துவதற்கு வழங்கப்பட்ட 30 நாள் கால அவகாசம் முடிவடைந்த பின்னரும் அதனை செலுத்தத் தவறினால் தரப்படுத்தரில் D மட்டம் வரை இலங்கை தரமிறக்கப்படலாம் என ரொய்ட்டர்ஸ் செய்தி வௌியிட்டுள்ளது.

D மட்டம் என்பது கடனை செலுத்தத் தவறும் அபாயமுள்ள நாடு என்பதையே குறிக்கின்றது. குறித்த காலப்பகுதிக்குள் இலங்கை அந்த வட்டியை செலுத்தும் என எதிர்ப்பார்க்க முடியாது என Standard and poor’s நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

அண்மைக் காலமாக முடீஸ், பிட்ச், Standard and poor’s ஆகிய நிறுவனங்கள் தொடர்ச்சியாக கடன் தரப்படுத்தலில் இலங்கையை தரமிறக்கி வருகின்றன.

சர்வதேச செலாவணி நிதியத்தின் விளக்கப்படி, ஒரு கடனின் தவணை அல்லது வட்டியை உறுதியளித்தபடி குறிப்பிட்ட கெடுவுக்குள் செலுத்தத் தவறுவதே கடன் தவணை தவறுவதாகும்.

கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலையில், அல்லது கடனைத் திருப்பிச் செலுத்த விரும்பாத நிலையில் இது நடக்கும். 

1960களுக்குப் பிறகு 140-க்கும் மேற்பட்ட நாடுகள் கடன் தவணைகளைத் திருப்பிச் செலுத்தத் தவறியிருக்கின்றன. அர்ஜென்டீனா, லெபனான், எக்வடோர், ஜாம்பியா ஆகிய நாடுகள் இந்தப் பட்டியலில் அண்மையில் இணைந்தன.

இலங்கைக்கு இப்போது 51 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கடன் இருக்கிறது. இதில் சுமார் 35 பில்லியன் டாலர்கள் வரை கடன்களைத் திருப்பிச் செலுத்துவதைத் தள்ளி வைத்திருக்கிறது. 

இலங்கை இந்த ஆண்டிலேயே சுமார் 7 பில்லியன் அமெரிக்க டாலர் கடன்களை இலங்கை திருப்பிச் செலுத்த வேண்டியிருக்கிறது. ஆனால் இலங்கையிடம் இப்போது 1.93 பில்லியனுக்கும் குறைவான அமெரிக்க டாலர்கள் மட்டுமே கையிருப்பில் உள்ளது.

இவ்வாறு கடன்களைத் திருப்பிச் செலுத்தாதபோது 'கடன் தர மதிப்பீடு' வழங்கும் அமைப்புகள் இலங்கையின் தரமதிப்பைக் குறைக்கின்றன. 

இதனால் புதிய கடன்கள் வாங்குவது பாதிக்கப்படும் அல்லது கூடுதல் வட்டி செலுத்த நேரிடலாம். நாட்டுக்குள் முதலீடு வருவது பாதிக்கப்படும். ஏற்கெனவே இருக்கும் முதலீட்டாளர்கள் வெளியேறவும் வாய்ப்பு உண்டு.

இந்நிலையில் "இலங்கையின் கடன் மறுசீரமைப்பு செயல்முறை சிக்கலானதாக இருக்கக்கூடும் மற்றும் அதை முடிக்க நீண்ட கால அவகாசம் எடுக்கலாம்" என்று தரமதிப்பீட்டு நிறுவனம் கூறியுள்ளது.

"இலங்கையின் கடன் மறுசீரமைப்பு செயல்முறை சிக்கலானதாக இருக்கக்கூடும் மற்றும் அதை நிறைவு செய்ய நீண்ட கால அவகாசம் எடுக்கலாம்" என்று தரமதிப்பீட்டு நிறுவனம் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. 


“நாட்டிற்கான சீர்திருத்தம் மற்றும் நிதியுதவி திட்டத்தை நிறுவ IMF உடனான பேச்சுவார்த்தைகள் ஆரம்ப கட்டத்தில் உள்ளன. "அத்தோடு நாடு சமீப வாரங்களாக  அரசியல் நிச்சயமற்ற தன்மையை அனுபவித்து வருகிறது, தற்போதைய அரசாங்கம் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை தக்க வைத்துக் கொள்ள முடியுமா என்பதும் தெளிவாக தெரியவில்லை.

"ஒரு நிலையான அரசாங்கத்தை ஸ்தாபிப்பதில் ஏற்படும் தோல்வியானது IMF உடனான விவாதங்களில் மேலும் சிக்கலாகி முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும். இது இறுதியில் ஒரு விரிவான சீர்திருத்தத் திட்டத்தை தாமதப்படுத்தலாம். என Standard and poor’s (S&P) நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.  

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...