Tamil Leader News
முக்கியம்
பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●மெர்லின் மன்றோ; உண்மையான அன்பைத் தேடிய சோகமான வாழ்க்கைப் பயணம்!●59 மில்லியன் ரூபாய் பண மோசடி வழக்கிலிருந்து டேசி ஃபொரெஸ்ட் விடுவிப்பு!●பெண்களின் இதயத்தைப் பாதுகாக்கும் புதிய மருத்துவப் பாதை!●அடக்குமுறைச் சட்டங்களைத் திரும்பப் பெறுக: நாளை (04) பாராளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம்!●16 வயது சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடை!●கிரிஷ் வழக்கில் பிணை கிடைத்தாலும் நாமல் தொடர்ந்தும் சிறையில்!●
செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதலுக்கு நீதி வேண்டி பேராயர் ரோமுக்கு பயணம் - நீர்கொழும்பில் பேரணி!

T

The Leader Desk

ஏப்ரல் 21, 2022 • 6:30 PM

உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதலுக்கு நீதி வேண்டி பேராயர் ரோமுக்கு பயணம் - நீர்கொழும்பில் பேரணி!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • குறித்த பேரணியானது 5 மணியளவில் நீர்கொழும்பு பஸ்தரிப்பிடத்திற்கு அருகிலுள்ள புனித ஜோசப்பாஸ் திருச்சொரூபத்தை வந்தடைந்த நிலையில் அங்கு சிறப்பு ஆராதனைகளும் மதத்தலைவர்களின் உரைகளும் நிகழ்த்தப்பட்டன.
  • உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல் தொடர்பில் நீதி கிடைக்காததன் காரணமாக பாப்பரசர் அறிவுறுத்தலுக்கு அமைய, தாக்குதலில் பாதிக்கப்பட்ட 35 பேருடன் சர்வதேச உதவியை பெற்றுக்கொள்ளம் நோக்கில் தாம் இன்று இரவு ரோம் நகருக்கு பயணிக்க உள்ளதாகவும் அவர் இதன் போது தெரிவித்தார்.
  • அரசுக்கு எதிராக காலிமுகத்திடலில் முன்னெடுக்கப்பட்டுவரும் இளைஞர்களின் போராட்டத்திற்கு இந்த போராட்டத்தின் ஊடாக ஆதரவு வழங்குவதாகவும் பேராயர் போது மேலும் தெரிவித்தார்.
எழுத்து அளவு:

இதன்படி, குறித்த தாக்குதல் தினத்தில் முதலாவது குண்டு வெடிப்பு இடம்பெற்ற நீர்கொழும்பு - கட்டுவாப்பிட்டி புனித செபஸ்தியார் தேவாலயத்திலும் விசேட ஆராதனைகள் இடம்பெற்றன. 

பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகையின் தலைமையில் மாலை 3.30 முதல் 4 மணி வரை பிரார்த்தனைகளும், மாலை 4 மணிக்கு கட்டுவாப்பிட்டி தேவாலயத்திலிருந்து அமைதிப்பேரணி முன்னெடுக்கப்பட்டது.

20220421 161753

 குறித்த பேரணியானது 5 மணியளவில் நீர்கொழும்பு பஸ்தரிப்பிடத்திற்கு அருகிலுள்ள புனித ஜோசப்பாஸ் திருச்சொரூபத்தை வந்தடைந்த நிலையில் அங்கு சிறப்பு ஆராதனைகளும் மதத்தலைவர்களின் உரைகளும் நிகழ்த்தப்பட்டன.

இதன் போத உரையாற்றிய பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை, உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுதாக்குதல் ஆட்சியாளர்களின் திட்டமிட்ட சதி என தெரிவித்தார்.உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இது தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

20220421 161715

உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல் தொடர்பில் நீதி கிடைக்காததன் காரணமாக பாப்பரசர் அறிவுறுத்தலுக்கு அமைய, தாக்குதலில் பாதிக்கப்பட்ட 35 பேருடன் சர்வதேச உதவியை பெற்றுக்கொள்ளம் நோக்கில் தாம் இன்று இரவு ரோம் நகருக்கு பயணிக்க உள்ளதாகவும் அவர் இதன் போது தெரிவித்தார்.

அரசுக்கு எதிராக காலிமுகத்திடலில் முன்னெடுக்கப்பட்டுவரும் இளைஞர்களின் போராட்டத்திற்கு இந்த போராட்டத்தின் ஊடாக ஆதரவு வழங்குவதாகவும் பேராயர் போது மேலும் தெரிவித்தார்.

20220421 175024

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு எதிரான பேரணியில் பெரும் திரளான மக்கள் பங்குபற்றினர், நாட்டின் தற்போதைய நிலைக்கு அரசாங்கமே காரணம் என கூறியதோடு அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரினர்.

 

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதலுக்கு நீதி வேண்டி பேராயர் ரோமுக்கு பயணம் - நீர்கொழும்பில் பேரணி! | Tamil Leader | We Lead the Nation