Tamil Leader News
முக்கியம்
பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●மெர்லின் மன்றோ; உண்மையான அன்பைத் தேடிய சோகமான வாழ்க்கைப் பயணம்!●59 மில்லியன் ரூபாய் பண மோசடி வழக்கிலிருந்து டேசி ஃபொரெஸ்ட் விடுவிப்பு!●பெண்களின் இதயத்தைப் பாதுகாக்கும் புதிய மருத்துவப் பாதை!●அடக்குமுறைச் சட்டங்களைத் திரும்பப் பெறுக: நாளை (04) பாராளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம்!●16 வயது சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடை!●கிரிஷ் வழக்கில் பிணை கிடைத்தாலும் நாமல் தொடர்ந்தும் சிறையில்!●
செய்திகள்

காலிமுகத்திடல் போராட்டத்தில் கலந்துகொண்ட பொலிஸ் சார்ஜன் பணிநீக்கம்!

T

The Leader Desk

ஏப்ரல் 21, 2022 • 5:21 PM

காலிமுகத்திடல் போராட்டத்தில் கலந்துகொண்ட பொலிஸ் சார்ஜன் பணிநீக்கம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கடந்த ஏப்ரல் 14 ஆம் திகதி முதல் அமுலாகும் வண்ணம் அவர் இவ்வாறு பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
  • குறித்த பொலிஸ் சார்ஜன், ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக காலி முகத்திடல் ' கோட்டா கோ கம ' என பெயரிடப்பட்டுள்ள போராட்ட களத்துக்கு கடந்த 14 ஆம் திகதி பொலிஸ் சீருடையில் சென்றதோடு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்திருந்தார்.
  • அமரதாச (30158) கைது செய்யப்பட்டார்.
  • தண்டனை சட்டக் கோவையின் 162 ஆம் அத்தியாயத்தின் கீழும் பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் 82 ஆவது அத்தியாயத்தின் கீழும் குறித்த சார்ஜன் குற்றங்களை புரிந்துள்ளதாக கூறியே அவரை பொலிஸார் கைது செய்தனர்.
எழுத்து அளவு:


கடந்த ஏப்ரல் 14 ஆம் திகதி முதல் அமுலாகும் வண்ணம் அவர் இவ்வாறு பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

குறித்த பொலிஸ் சார்ஜன், ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக காலி முகத்திடல் ' கோட்டா கோ கம ' என பெயரிடப்பட்டுள்ள போராட்ட களத்துக்கு கடந்த 14 ஆம் திகதி பொலிஸ் சீருடையில் சென்றதோடு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்திருந்தார்.

இதன் போது நாட்டில் தற்போது உள்ள நெருக்கடி நிலைமையால் ஏற்பட்டுள்ள அழுத்தங்களை சகிக்க முடியாது எனவும், நாளை இதனால் தனது தொழில் இல்லாமல் போனாலும் தான் மாணிக்கக்கல் சுரங்கங்களில் பணியாற்றியேனும் பிழைப்பை நடத்த எண்ணியுள்ளதாக பொலிஸ் உத்தியோகத்தர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு மத்தியில் தெரிவித்தார்.

இது தொடர்பான காணொளிகள் சமூக பரவியதோடு குட்டிகல பொலிஸ் நிலையத்துக்கு உட்பட்டு சேவையாற்றும் பொலிஸ் சார்ஜன் டப்ளியூ.எம். அமரதாச (30158) கைது செய்யப்பட்டார்.

தண்டனை சட்டக் கோவையின் 162 ஆம் அத்தியாயத்தின் கீழும் பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் 82 ஆவது அத்தியாயத்தின் கீழும் குறித்த சார்ஜன் குற்றங்களை புரிந்துள்ளதாக கூறியே அவரை பொலிஸார் கைது செய்தனர்.
இதனையடுத்து பொலிஸ் விஷேட விசாரணைப் பிரிவினர், சார்ஜனுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணைகளை ஆரம்பித்தனர்.

அத்தோடு அவரை மன்றில் ஆஜர் செய்ய பொலிஸாரை் நடவடிக்கை மேற்கொண்ட நிலையில் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

எனினும் தற்போது பொலிஸ் சார்ஜன் டப்ளியூ.எம். அமரதாச பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...