Tamil Leader News
முக்கியம்
பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●மெர்லின் மன்றோ; உண்மையான அன்பைத் தேடிய சோகமான வாழ்க்கைப் பயணம்!●59 மில்லியன் ரூபாய் பண மோசடி வழக்கிலிருந்து டேசி ஃபொரெஸ்ட் விடுவிப்பு!●பெண்களின் இதயத்தைப் பாதுகாக்கும் புதிய மருத்துவப் பாதை!●அடக்குமுறைச் சட்டங்களைத் திரும்பப் பெறுக: நாளை (04) பாராளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம்!●16 வயது சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடை!●கிரிஷ் வழக்கில் பிணை கிடைத்தாலும் நாமல் தொடர்ந்தும் சிறையில்!●
செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு இன்றுடன் மூன்று வருடங்கள் - நீதிக்காக தொடரும் மக்கள் போராட்டம்!

T

The Leader Desk

ஏப்ரல் 21, 2022 • 3:55 AM

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு இன்றுடன் மூன்று வருடங்கள் - நீதிக்காக தொடரும் மக்கள் போராட்டம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • குறித்த தினத்தில் மூன்று கத்தோலிக்க தேவாலயங்கள், கொழும்பில் உள்ள மூன்று ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள், சுற்றுலா விடுதிகள் மற்றும் தெமட்டகொடையில் உள்ள குடியிருப்பு ஒன்றில் தற்கொலை குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
  • இந்த தாக்குதலில் 269 பேர் கொல்லப்பட்டனர், 400க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர், பலர் இன்னமும் அவயவங்களை இழந்த நிலையில் இன்று வரை உள்ளனர்.
  • நீர்கொழும்பு, கட்டானாவில் உள்ள புனித செபஸ்தியன் தேவாலயத்தை குறிவைத்து காலை 8:45 மணிக்கு பயங்கரவாத குழு முதலாவது தாக்குதலை நடத்தியது.
  • இதனைத் தொடர்ந்து தெஹிவளையில் உள்ள சுற்றுலா விடுதியில் அன்று பிற்பகல் 1:30 மணியளவில் குண்டு வெடித்தது.
எழுத்து அளவு:


குறித்த தினத்தில் மூன்று கத்தோலிக்க தேவாலயங்கள், கொழும்பில் உள்ள மூன்று ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள், சுற்றுலா விடுதிகள் மற்றும் தெமட்டகொடையில் உள்ள குடியிருப்பு ஒன்றில் தற்கொலை குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

இந்த தாக்குதலில் 269 பேர் கொல்லப்பட்டனர், 400க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர், பலர் இன்னமும் அவயவங்களை இழந்த நிலையில் இன்று வரை உள்ளனர்.

நீர்கொழும்பு, கட்டானாவில் உள்ள புனித செபஸ்தியன் தேவாலயத்தை குறிவைத்து காலை 8:45 மணிக்கு பயங்கரவாத குழு முதலாவது தாக்குதலை நடத்தியது.

இந்த குண்டுவெடிப்பைத் தொடர்ந்து கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயம், கிங்ஸ்பரி ஹோட்டல், ஷங்ரிலா கொழும்பு, சியோன் தேவாலயம் ஆகியவற்றில் குண்டுவெடிப்பு நடத்தப்பட்டது.

30 நிமிடங்களுக்குள் மட்டக்களப்பு மற்றும் சினமன் கிராண்ட், கொழும்பு ஆகிய ஹோட்டல்கள் தாக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து தெஹிவளையில் உள்ள சுற்றுலா விடுதியில் அன்று பிற்பகல் 1:30 மணியளவில் குண்டு வெடித்தது.
இந்த தாக்குதல்களில் பலியானவர்களில் 45 குழந்தைகளும், 40 வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் அடங்குவர்.

பாதுகாப்புப் படையினரால் தேடுதல்கள் மற்றும் எதிர் தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, தெமட்டகொடையில் உள்ள வீடொன்றில் மேலும் இரண்டு தற்கொலைத் தாக்குதல்கள் பதிவாகின.

தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவரும் தற்கொலைப் படை தீவிரவாதிகளில் ஒருவருமான சஹ்ரான் ஹாஷிம்தான் இந்தத் தாக்குதலுக்கு சூத்திரதாரியாக செயல்பட்டது பின்னர் தெரியவந்தது.

சஹ்ரான் ஹாஷிம் மற்றும் பல அடையாளம் தெரியாத நபர்கள் அதன் பின்னணியில் ISIS கொடியுடன் உறுதிமொழி எடுப்பது போன்ற வீடியோவும் பரப்பப்பட்டது.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவும் விசாரணைகளை முடித்து அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளது.

இன்றுவரை தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் நடந்து வருகின்றன, ஆனால் இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பில் இதுவரை 735 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 196 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன அண்மையில் தெரிவித்தார்.

81 நபர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன் 493 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், இலங்கை மக்கள் ஒன்றினைந்து தற்போது ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுக்கு நீதி வேண்டி வீதியில் இறங்கியுள்ளனர்.

இன்றும் நாடளாவிய ரீதியில் தேவாலங்களில் விசேட ஆராதனைகள் முன்னெடுக்கப்படுவதோடு மக்கள் பாரிய போராட்டங்களையும் முன்னெடுக்க உள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு எதிரான அனைவரையும் சட்டத்தின் முன் கைது செய்து தண்டிப்பதாக ஆட்சி பீடம் ஏறிய அரசு நிலை குழைந்து உள்ளது.

எந்த அரசு வந்தாலும்  நீதி கிடைக்கும் வரை மக்கள் போராட்டம் ஓயப்போவதில்லை!

 

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு இன்றுடன் மூன்று வருடங்கள் - நீதிக்காக தொடரும் மக்கள் போராட்டம்! | Tamil Leader | We Lead the Nation