Tamil Leader News
முக்கியம்
பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●மெர்லின் மன்றோ; உண்மையான அன்பைத் தேடிய சோகமான வாழ்க்கைப் பயணம்!●59 மில்லியன் ரூபாய் பண மோசடி வழக்கிலிருந்து டேசி ஃபொரெஸ்ட் விடுவிப்பு!●பெண்களின் இதயத்தைப் பாதுகாக்கும் புதிய மருத்துவப் பாதை!●அடக்குமுறைச் சட்டங்களைத் திரும்பப் பெறுக: நாளை (04) பாராளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம்!●16 வயது சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடை!●கிரிஷ் வழக்கில் பிணை கிடைத்தாலும் நாமல் தொடர்ந்தும் சிறையில்!●
செய்திகள்

சுயேச்சை குழுவிடம் அமைச்சரவையை ஒப்படைக்குமாறு கோரிக்கை! - மேலும் 13 எம்.பிகள் அரசை எதிர்க்கத் தயார்

T

The Leader Desk

ஏப்ரல் 21, 2022 • 4:31 AM

சுயேச்சை குழுவிடம் அமைச்சரவையை ஒப்படைக்குமாறு கோரிக்கை! - மேலும் 13 எம்.பிகள் அரசை எதிர்க்கத் தயார்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மகிந்த ராஜபக்ஷவை பிரதமர் பதவியில் இருந்து விலகுமாறு மகா சங்கத்தினரால் அழுத்தம் கொடுக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
  • இதனினையே, அனைத்து தரப்பினரையும் இணைத்து இடைக்கால அரசாங்கம் அமைக்குமாறு 13 அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
  • கடந்த 19ஆம் திகதி கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியை சந்தித்து இது தொடர்பான மகஜரை கையளித்துள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
  • இந்த 13 பாராளுமன்ற உறுப்பினர்களும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பின்வரிசை உறுப்பினர்கள் குழுவை பிரதிநிதித்துவப்படுத்துவதாக தெரியவருகிறது.
எழுத்து அளவு:

மகிந்த ராஜபக்ஷவை பிரதமர் பதவியில் இருந்து விலகுமாறு மகா சங்கத்தினரால் அழுத்தம் கொடுக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 இதேவேளை, அமைச்சரவையை பாராளுமன்றத்தில் சுயேச்சை குழுவிடம் ஒப்படைக்க வேண்டும் என சுயேச்சைக்குழுவை பிரதிநிதித்துவப்படுத்தும் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்சன யாப்பா இன்று (20) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். 

அரசாங்கம் உடனடியாக பதவி விலகி இடைக்கால அரசாங்கத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அங்கு மேலும் உரையாற்றிய அவர், இது ராஜபக்ஷக்களின் நாடு அல்ல என்றும், குடும்ப ஆட்சிக்கு நாட்டை ஒப்படைக்க வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். 

ஆளும் கட்சியை விட நாட்டை நடத்திச் செல்லக்கூடியவர்கள் எதிர்க்கட்சி தரப்பில் இருப்பதாக அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார். அதிகாரிகள் தவறான முறையில் செயல்படவிட்டு அரசு பார்த்துக் கொண்டிருப்பதாகவும் அதனால்தான் அனைத்து பிரச்சனைகளும் ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார். 

ஒளிந்திருந்து இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது எனவும், பிரச்சினை தீவிரமடைந்துள்ள நிலையில் இன்று பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் மீது கல் வீசி தாக்குதல் நடத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 அரசாங்கத்திற்கு ஞானம் கிடைக்க வேண்டும் என வாழ்த்துவதாகவும் யாப்பா மேலும் தெரிவித்தார்.

இதனினையே, அனைத்து தரப்பினரையும் இணைத்து இடைக்கால அரசாங்கம் அமைக்குமாறு 13 அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 19ஆம் திகதி கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியை சந்தித்து இது தொடர்பான மகஜரை கையளித்துள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய பிரதமரின் கீழ் அனைத்துக் கட்சி அமைச்சரவையை நியமிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த 13 பாராளுமன்ற உறுப்பினர்களும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பின்வரிசை உறுப்பினர்கள் குழுவை பிரதிநிதித்துவப்படுத்துவதாக தெரியவருகிறது.

வசந்த யாப்பா பண்டார, உதேனி கிரிடிகொட, குமாரசிறி ரத்நாயக்க, கேபிஎஸ் குமாரசிறி, ராஜிக விக்கிரமசிங்க, அகில எல்லாவல, லலித் எல்லாவல, அஜித் ராஜபக்ஷ, உபுல் கலப்பத்தி, சுதத் மஞ்சுள மற்றும் அரசாங்கத்தின் பதின்மூன்று பேர் இந்தக் கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளனர்.

இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்காவிட்டால் தாங்களும் மனசாட்சிக்கு ஏற்ப தீர்மானங்களை எடுக்க வேண்டும் என எம்.பி.க்கள் கடிதத்தில் தெரிவித்துள்ளதாக தெரியவருகிறது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

சுயேச்சை குழுவிடம் அமைச்சரவையை ஒப்படைக்குமாறு கோரிக்கை! - மேலும் 13 எம்.பிகள் அரசை எதிர்க்கத் தயார் | Tamil Leader | We Lead the Nation