Tamil Leader News
முக்கியம்
பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●மெர்லின் மன்றோ; உண்மையான அன்பைத் தேடிய சோகமான வாழ்க்கைப் பயணம்!●59 மில்லியன் ரூபாய் பண மோசடி வழக்கிலிருந்து டேசி ஃபொரெஸ்ட் விடுவிப்பு!●பெண்களின் இதயத்தைப் பாதுகாக்கும் புதிய மருத்துவப் பாதை!●அடக்குமுறைச் சட்டங்களைத் திரும்பப் பெறுக: நாளை (04) பாராளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம்!●16 வயது சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடை!●கிரிஷ் வழக்கில் பிணை கிடைத்தாலும் நாமல் தொடர்ந்தும் சிறையில்!●
செய்திகள்

காலிமுகத்திடல் போராட்டத்தால் எமக்கு என்ன தீர்வு கிடைக்கும் - காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கேள்வி!

T

The Leader Desk

ஏப்ரல் 18, 2022 • 3:08 PM

காலிமுகத்திடல் போராட்டத்தால் எமக்கு என்ன தீர்வு கிடைக்கும் - காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கேள்வி!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • போராட்டத்தின் பின்னர் வவுனியாவில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயு அவர்கள் இதனைத் தெரிவித்தனர்.
  • "நிதி நெருக்கடி மற்றும் உணவுப் பற்றாக்குறையால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக வெளிநாட்டுக் கடனை செலுத்த முடியாமல் இலங்கை திவாலாகியுள்ளதாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
  • தமது கோரிக்கைகள் வலுப்பெறாத வரையில் தமிழ் மற்றும் சிங்கள இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டாலும் தமிழ் மக்களுக்கு எந்தவித நன்மையும் ஏற்படப்போவதில்லை என இராணுவத்தினரால் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
எழுத்து அளவு:

புத்தாண்டு தினத்திலும் கிழக்கு தமிழ் தாய்மார்கள் தமது போராட்டத்தை கைவிடாது முன்னெடுத்துள்ளனர்.போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு 1881 நாட்கள் பூர்த்தியான புத்தாண்டு தினத்தில்  தமது தொடர் போராட்டத்தை முன்னெடுத்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்,  தமக்கு நீதி கிடைக்க வேண்டுமாயின் அரசாங்கம் தமிழ் மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

போராட்டத்தின் பின்னர் வவுனியாவில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயு அவர்கள் இதனைத் தெரிவித்தனர்.

தமது கோரிக்கைகள் வலுப்பெறாத வரையில் தமிழ் மற்றும் சிங்கள இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டாலும் தமிழ் மக்களுக்கு எந்தவித நன்மையும் ஏற்படப்போவதில்லை என இராணுவத்தினரால் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

“கொழும்பில் சிங்கள இளைஞர்களின் போராட்டங்களில் தமிழ் இளைஞர்களும் இணைந்து கொள்வதால் தமிழ் மக்களுக்கு எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லை. 

இதன் மூலம் ஒற்றையாட்சி மேலும் பலப்படுத்தப்படும்” என வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் செயலாளர் எம்.ராஜ்குமார் தெரிவித்தார்.

"கொழும்பில் உள்ள சிங்கள, தமிழ் மக்கள் ஒற்றுமையாக உள்ளனர், இதனை காரணம் காட்டி இலங்கைக்கு எதிரான போர்க்குற்றங்களில் இருந்து விடுபடவே முயற்சிக்கப்படும்.

"நிதி நெருக்கடி மற்றும் உணவுப் பற்றாக்குறையால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக வெளிநாட்டுக் கடனை செலுத்த முடியாமல் இலங்கை திவாலாகியுள்ளதாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இலங்கையின் எதிர்காலம் சர்வதேச நாணய நிதியம், அமெரிக்கா, இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தினால் தீர்மானிக்கப்படுகிறது. 

இலங்கையின் எதிர்காலம் அவர்களின் கைகளில் உள்ளது. தமிழ் மக்களுக்கான இலவச நிர்வாக அலகுக்காக தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த நாடுகளுடனும் அமைப்புகளுடனும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். என்றார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...