Tamil Leader News
முக்கியம்
பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●மெர்லின் மன்றோ; உண்மையான அன்பைத் தேடிய சோகமான வாழ்க்கைப் பயணம்!●59 மில்லியன் ரூபாய் பண மோசடி வழக்கிலிருந்து டேசி ஃபொரெஸ்ட் விடுவிப்பு!●பெண்களின் இதயத்தைப் பாதுகாக்கும் புதிய மருத்துவப் பாதை!●அடக்குமுறைச் சட்டங்களைத் திரும்பப் பெறுக: நாளை (04) பாராளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம்!●16 வயது சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடை!●கிரிஷ் வழக்கில் பிணை கிடைத்தாலும் நாமல் தொடர்ந்தும் சிறையில்!●
செய்திகள்

"கோடா கோ கம" நீதிமன்றம் செல்லும் அரசு!

T

The Leader Desk

ஏப்ரல் 16, 2022 • 5:44 AM

"கோடா கோ கம" நீதிமன்றம் செல்லும் அரசு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஜனாதிபதி செயலகத்திற்கு அருகாமையில் உள்ள போராட்ட தளத்தில் அமைக்கப்பட்டுள்ள கூடாரங்கள் மற்றும் கட்டமைப்புகளை அகற்றுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு நகர அபிவிருத்தி அதிகார சபை பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
  • போராட்டக் களம் "கோடா கோ கம" என்ற பெயருடன் ஒரு சிறிய காலனி வடிவில் இயங்கி வருகிறது. அங்கு கூடாரங்களை அமைத்து இரவைக் கழித்துவரகின்றனர்.
  • ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் நெருங்கிய நண்பரான நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் பட்டய நகர கட்டிட நிபுணரான பிரசாத் ரணவீரவினால் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எழுத்து அளவு:

 ஜனாதிபதி செயலகத்திற்கு அருகாமையில் உள்ள போராட்ட தளத்தில் அமைக்கப்பட்டுள்ள கூடாரங்கள் மற்றும் கட்டமைப்புகளை அகற்றுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு நகர அபிவிருத்தி அதிகார சபை பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் நெருங்கிய நண்பரான நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் பட்டய நகர கட்டிட நிபுணரான பிரசாத் ரணவீரவினால் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. போராட்டக் களம் "கோடா கோ கம" என்ற பெயருடன் ஒரு சிறிய காலனி வடிவில் இயங்கி வருகிறது. 

அங்கு கூடாரங்களை அமைத்து இரவைக் கழித்துவரகின்றனர். போராட்ட இடத்திற்கு நடமாடும் கழிப்பறைகளும் கொண்டு வரப்பட்டன. இதற்கிடையில், அப்பகுதியில் உள்ள நடமாடும் கழிவறைகளை அரசு அகற்றும் என்று சமீபத்தில் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர். 

நாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய நிலைமைக்கு எதிராக அரசியல் தலையீடுகள் இன்றி இளைஞர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் இன்றும் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகுவதும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் பதவி விலகுவதுமே அவர்களின் பிரதான கோரிக்கையாகும். 

ராஜபக்ச குடும்பத்தாலும் அரசியல்வாதிகளாலும் சூறையாடப்பட்ட நாட்டின் வளத்தை மீளப் பெற வேண்டும் என்பதும்அரச சொத்துக்கள் மற்றும் நிதி மோசடிகளில் ஈடுபட்ட அரசியல்வாதிகள் உட்பட தனிநபர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுக்க வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாகும்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...