Tamil Leader News
முக்கியம்
பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●மெர்லின் மன்றோ; உண்மையான அன்பைத் தேடிய சோகமான வாழ்க்கைப் பயணம்!●59 மில்லியன் ரூபாய் பண மோசடி வழக்கிலிருந்து டேசி ஃபொரெஸ்ட் விடுவிப்பு!●பெண்களின் இதயத்தைப் பாதுகாக்கும் புதிய மருத்துவப் பாதை!●அடக்குமுறைச் சட்டங்களைத் திரும்பப் பெறுக: நாளை (04) பாராளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம்!●16 வயது சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடை!●கிரிஷ் வழக்கில் பிணை கிடைத்தாலும் நாமல் தொடர்ந்தும் சிறையில்!●
செய்திகள்

புதிய அமைச்சரவை திங்கட்கிழமை பதவிப்பிரமாணம் செய்யும் என தகவல்!

T

The Leader Desk

ஏப்ரல் 16, 2022 • 4:34 AM

புதிய அமைச்சரவை திங்கட்கிழமை பதவிப்பிரமாணம் செய்யும் என தகவல்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அரசாங்கத்தின் புதிய அமைச்சுப் பதவிகளை ஏற்குமாறு பல தரப்பினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள போதிலும் அவர்கள் முன்வராத பட்சத்தில் முன்னாள் அமைச்சர்களைக் கொண்ட புதிய அமைச்சரவையை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகத் தெரியவருகிறது.
  • 'சுயேட்சை நாடாளுமன்றக் குழு'வும் இது தொடர்பில் ஜனாதிபதிக்கு தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்து வருகின்றது.
  • மகிந்த ராஜபக்ச பிரதமராக தொடரும் போதிலும், முன்னாள் அமைச்சர்களான பசில் ராஜபக்ஷ, சமல் ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ மற்றும் ஷசீந்திர ராஜபக்ஷ ஆகியோர் புதிய அமைச்சரவையில் இடம்பெறமாட்டார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
எழுத்து அளவு:

அரசாங்கத்தின் புதிய அமைச்சுப் பதவிகளை ஏற்குமாறு பல தரப்பினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள போதிலும் அவர்கள் முன்வராத பட்சத்தில் முன்னாள் அமைச்சர்களைக் கொண்ட புதிய அமைச்சரவையை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகத் தெரியவருகிறது.

மகிந்த ராஜபக்ச பிரதமராக தொடரும் போதிலும், முன்னாள் அமைச்சர்களான பசில் ராஜபக்ஷ, சமல் ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ மற்றும் ஷசீந்திர ராஜபக்ஷ ஆகியோர் புதிய அமைச்சரவையில் இடம்பெறமாட்டார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும், தற்போதைய அரசியல் நெருக்கடியை உணர்ந்து, பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவையை உடனடியாக கலைக்குமாறு ஜனாதிபதியிடம் அமைச்சர்கள் ஏற்கனவே கோரிக்கை விடுத்துள்ளனர். 'சுயேட்சை நாடாளுமன்றக் குழு'வும் இது தொடர்பில் ஜனாதிபதிக்கு தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்து வருகின்றது.

சுயாதீன நாடாளுமன்ற குழு சமர்ப்பித்த பிரேரணை தொடர்பில் ஜனாதிபதி விசேட கவனம் செலுத்தியதாகவும், அந்த யோசனைகளுக்கு அமைவாக புதிய அமைச்சரவையை நியமிக்க ஜனாதிபதி மேற்கொண்ட முயற்சியினால் அமைச்சரவை மாற்றம் பிற்போடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஜனாதிபதி பதவி விலகினால், நாடு மேலும் குழப்பமடைந்துவிடும் எனவும், இடைக்கால அரசாங்கத்திற்குச் சென்று புதிய பிரதமரையும் சர்வகட்சி அமைச்சரவையையும் நியமிப்பதே சிறந்த தீர்வாக அமையும் எனவும் 'சுயேட்சை நாடாளுமன்றக் குழு' வலியுறுத்துகிறது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...