Tamil Leader News
முக்கியம்
பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●மெர்லின் மன்றோ; உண்மையான அன்பைத் தேடிய சோகமான வாழ்க்கைப் பயணம்!●59 மில்லியன் ரூபாய் பண மோசடி வழக்கிலிருந்து டேசி ஃபொரெஸ்ட் விடுவிப்பு!●பெண்களின் இதயத்தைப் பாதுகாக்கும் புதிய மருத்துவப் பாதை!●அடக்குமுறைச் சட்டங்களைத் திரும்பப் பெறுக: நாளை (04) பாராளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம்!●16 வயது சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடை!●கிரிஷ் வழக்கில் பிணை கிடைத்தாலும் நாமல் தொடர்ந்தும் சிறையில்!●
செய்திகள்

காலிமுகத்திடல் போராட்டத்திற்கு ஆதரவாக யாழில் மாபெரும் போராட்டம்!

T

The Leader Desk

ஏப்ரல் 16, 2022 • 4:15 AM

காலிமுகத்திடல் போராட்டத்திற்கு ஆதரவாக யாழில் மாபெரும் போராட்டம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஜனநாயகத்திற்காக ஒன்றிணைந்த இளையோர்களின் அமைப்பினால் இந்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  • கடந்த சனிக்கிழமை (9) கொழும்பு - காலிமுகத்திடலில் ஆரம்பிக்கப்பட்ட மக்கள் போராட்டம் 8 ஆவது நாளாக இன்றும் தொடர்கின்றது.
  • அதுமாத்திரமன்றி கோட்டா கோ கம என பெயரிடப்பட்டுள்ள போராட்டப்பகுதியில், மருத்துவ நிலையம், நூலகம், ஓவியங்கள் வரைவதற்கான நிலையம், சட்ட உதவி வழங்கல் நிலையம், கையடக்கத்தொலைபேசி இலத்திரனியல் உபகரணங்களுக்கான மின்னேற்ற நிலையம் ஆகியவற்றுக்கென பிரத்தியேக கூடாரங்கள் நிறுவப்பட்டுள்ளன.
எழுத்து அளவு:


ஜனநாயகத்திற்காக ஒன்றிணைந்த இளையோர்களின் அமைப்பினால் இந்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
காலிமுகத்திடலில் கடந்த ஏழு நாட்களாக தற்போதைய அரசை வீட்டுக்குச்செல்லுமாறு கோரி கோட்டாபய வீட்டுக்கு போ என கோசமெழுப்பியவாறு மக்கள் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகிறது.

இந்த போராட்டத்தில் யாழ் மாவட்டத்தில் உள்ள அனைத்து இளைஞர்களும் பங்குபற்றி காலிமுகத்திடலில் போராட்டத்தில் ஈடுபடுவோருக்கு தமது ஆதரவினை அளிக்க முன்வருமாறு ஜனநாயகத்திற்காக ஒன்றிணைந்த இளையோர்களின் அமைப்பினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

கடந்த சனிக்கிழமை (9) கொழும்பு - காலிமுகத்திடலில் ஆரம்பிக்கப்பட்ட மக்கள் போராட்டம் 8 ஆவது நாளாக இன்றும் தொடர்கின்றது.

ஜனாதிபதி வீடு செல்லும் வரை தாம் வீடு செல்ல போவதில்லை என்ற உறுதிப்பாட்டில் உள்ள மக்கள் சித்திரை புத்தாண்டையும் இன மத பேதங்கள் இன்றி கொண்டாடினர்.

அதுமாத்திரமன்றி கோட்டா கோ கம என பெயரிடப்பட்டுள்ள போராட்டப்பகுதியில், மருத்துவ நிலையம், நூலகம், ஓவியங்கள் வரைவதற்கான நிலையம், சட்ட உதவி வழங்கல் நிலையம், கையடக்கத்தொலைபேசி இலத்திரனியல் உபகரணங்களுக்கான மின்னேற்ற நிலையம் ஆகியவற்றுக்கென பிரத்தியேக கூடாரங்கள் நிறுவப்பட்டுள்ளன.

அத்தோடு துரித இணைய வலையமைப்பு வசதியைப் பெறுவதற்கு ஏற்றவாறு இணையக்கோபுரமும் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இதுவரையில் அமைதியாக முன்னெடுக்கப்பட்டுவரும் இளைஞர்களின் இந்த போராட்டம் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.
எனினும் ஆர்ப்பாட்டப்பகுதியை அன்மித்து பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளமை மக்களை கொச்சம் அச்சப்படுத்தும் வகையிலிலேயே உள்ளது.

 

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...