Tamil Leader News
முக்கியம்
பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●மெர்லின் மன்றோ; உண்மையான அன்பைத் தேடிய சோகமான வாழ்க்கைப் பயணம்!●59 மில்லியன் ரூபாய் பண மோசடி வழக்கிலிருந்து டேசி ஃபொரெஸ்ட் விடுவிப்பு!●பெண்களின் இதயத்தைப் பாதுகாக்கும் புதிய மருத்துவப் பாதை!●அடக்குமுறைச் சட்டங்களைத் திரும்பப் பெறுக: நாளை (04) பாராளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம்!●16 வயது சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடை!●கிரிஷ் வழக்கில் பிணை கிடைத்தாலும் நாமல் தொடர்ந்தும் சிறையில்!●
செய்திகள்

அரசாங்கம் பதவி விலகுவதே தீர்வு - சுமந்திரன்

T

The Leader Desk

ஏப்ரல் 15, 2022 • 5:35 AM

அரசாங்கம் பதவி விலகுவதே தீர்வு - சுமந்திரன்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பின் பேரில் கடந்த ஏப்ரல் 11ஆம் திகதி அலரிமாளிகைக்கு வருகை தந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் இதனைத் தெரிவித்தார்.
  • அதன் பின்னரே நாடாளுமன்றத் தேர்தலின் மூலம் யார் ஆட்சியை பிடிப்பது என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள்” என சுமந்திரன் விளக்கமளித்துள்ளார். இது தொடர்பில் ஜனாதிபதியுடன் மேலும் கலந்துரையாடி தீர்வு எட்டப்படும் என பிரதமர் உறுதியளித்துள்ளார்.
  • ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது பதவிக்காலம் முடியும் வரை நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிக்க எண்ணவில்லை என பிரதமரின் இணைப்பாளரும் யாழ்.மாவட்ட அபிவிருத்திக் குழுவின் பிரதமரின் பிரதிநிதியுமான கீதாநாத் காசிலிங்கம் தெரிவித்துள்ளார்.
எழுத்து அளவு:

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பின் பேரில் கடந்த ஏப்ரல் 11ஆம் திகதி அலரிமாளிகைக்கு வருகை தந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் இதனைத் தெரிவித்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது பதவிக்காலம் முடியும் வரை நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிக்க எண்ணவில்லை என பிரதமரின் இணைப்பாளரும் யாழ்.மாவட்ட அபிவிருத்திக் குழுவின் பிரதமரின் பிரதிநிதியுமான கீதாநாத் காசிலிங்கம் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மகிந்த ராஜபக்சவின் கூற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், தற்போதைய நெருக்கடிக்கு ஆணையே காரணம் என சுட்டிக்காட்டினார்.“அந்த ஆணையை வழங்கிய மக்கள்தான் இன்று வீதியில் இறங்கி அரசாங்கம் பதவி விலக வேண்டும் என்று கூறுகின்றனர். 

இப்போது அந்த உத்தரவு பொருந்தாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒரே நாளில் ஒழிக்க முடியாது. அதற்கு சில மாதங்கள் ஆகும்.“ நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை சரியான நேரத்தில் முடிவுக்கு வரும் என்பதை மக்களுக்குச் சொல்ல வேண்டும்.

 அதன் பின்னரே நாடாளுமன்றத் தேர்தலின் மூலம் யார் ஆட்சியை பிடிப்பது என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள்” என சுமந்திரன் விளக்கமளித்துள்ளார். இது தொடர்பில் ஜனாதிபதியுடன் மேலும் கலந்துரையாடி தீர்வு எட்டப்படும் என பிரதமர் உறுதியளித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான பேச்சுவார்த்தை தொடர்வது குறித்து பிரதமர் ராஜபக்சவிடம் கேட்டதற்கு, தோழமைக் கட்சிகளுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும் தாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைந்ததாக சுமந்திரன் தெரிவித்தார்.

பேச்சுவார்த்தையின் போது எட்டப்பட்ட உடன்படிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டால் தமிழ் மக்கள் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை கொள்வர்.தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை தமிழ் சிங்கள புத்தாண்டுக்கு முன்னதாகவே செய்திருக்க வேண்டும். 

ஆனால் அது தவறவிட்டது. அதில் அதிக கவனம் செலுத்தி வெசாக் தினத்திலாவது அவர்களை விடுதலை செய்ய வேண்டும்” என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

 

 

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

அரசாங்கம் பதவி விலகுவதே தீர்வு - சுமந்திரன் | Tamil Leader | We Lead the Nation