Tamil Leader News
முக்கியம்
பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●மெர்லின் மன்றோ; உண்மையான அன்பைத் தேடிய சோகமான வாழ்க்கைப் பயணம்!●59 மில்லியன் ரூபாய் பண மோசடி வழக்கிலிருந்து டேசி ஃபொரெஸ்ட் விடுவிப்பு!●பெண்களின் இதயத்தைப் பாதுகாக்கும் புதிய மருத்துவப் பாதை!●அடக்குமுறைச் சட்டங்களைத் திரும்பப் பெறுக: நாளை (04) பாராளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம்!●16 வயது சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடை!●கிரிஷ் வழக்கில் பிணை கிடைத்தாலும் நாமல் தொடர்ந்தும் சிறையில்!●
செய்திகள்

“கோரிக்கைகள் நிறைவேறும்வரை போராட்டம் தொடரும்” - பிரதமருக்கு மக்கள் பதில்!

T

The Leader Desk

ஏப்ரல் 14, 2022 • 5:35 AM

“கோரிக்கைகள் நிறைவேறும்வரை போராட்டம் தொடரும்” - பிரதமருக்கு மக்கள் பதில்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இதன்படி, நாடு எதிர்நோக்கும் தற்போதைய சவாலை முறியடிக்கும் வகையில் போராட்டக்காரர்கள் தெரிவித்த பெறுமதிமிக்க கருத்துக்கள் குறித்து கலந்துரையாட எதிர்பார்ப்பதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
  • அவரை, ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட ராஜபக்ஷ குடும்பத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆட்சியாளர்கள் பதவிகளை துறக்க வேண்டும். 19 ஆவது திருத்தத்தை மீண்டும் செயற்படுத்தல்.
  • இந்த கலந்துரையாடலுக்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் தயாராக இருந்தால் அவர்களின் பிரதிநிதிகளை கலந்துகொள்ளுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்தார். எவ்வாறாயினும், இந்த அழைப்பை ஏற்பதற்கு பிரதிநிதி ஒருவர் இல்லை என, சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்டுவருகின்றது.
எழுத்து அளவு:

இதன்படி, நாடு எதிர்நோக்கும் தற்போதைய சவாலை முறியடிக்கும் வகையில் போராட்டக்காரர்கள் தெரிவித்த பெறுமதிமிக்க கருத்துக்கள் குறித்து கலந்துரையாட எதிர்பார்ப்பதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

 இந்த கலந்துரையாடலுக்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் தயாராக இருந்தால் அவர்களின் பிரதிநிதிகளை கலந்துகொள்ளுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்தார். 

எவ்வாறாயினும், இந்த அழைப்பை ஏற்பதற்கு பிரதிநிதி ஒருவர் இல்லை என, சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்டுவருகின்றது. காலி முகத்திடலில் முன்னெடுக்கப்படுவது, இன, மத, மொழி மற்றும் கட்சிகள் கடந்து அரசியல்வாதிகளின் செயற்பாட்டால் பாதிக்கப்பட்ட மக்களின் போராட்டம்.

 இதனை தலைமை தாங்குபவர்கள் என்று எவரும் இல்லை, எனினும் மக்கள் ஒன்றாக முன்வைக்கும் கோரிக்கைகள் உள்ளன. அவரை, ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட ராஜபக்ஷ குடும்பத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆட்சியாளர்கள் பதவிகளை துறக்க வேண்டும். 

19 ஆவது திருத்தத்தை மீண்டும் செயற்படுத்தல். 6 மாத்துக்குள் பாராளுமன்ற தேர்தல் ஒன்றுக்கு செல்ல வேண்டும். ஆட்சிகாலத்தில் சூறையாடிய மக்களின் பணத்தை திருப்பி கொடுக்க வேண்டும். என்பனவாகும். 

இன்று (ஏப்ரல் 14) ஆறாவது நாளாகவும் மக்களின் போராட்டம் தொடரும் பின்னணியில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராகி வருகிறார். 

வெயிலையும் மழையையும் பொருட்படுத்தாமல் இளைஞர்கள் உட்பட பெருமளவான மக்கள் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக இன்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

மக்களின் அடிப்படைக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை “கோத்தகோகம” போராட்டம் இவ்வாறே தொடரும் என மக்கள் உறுதியக தெரிவித்துள்ளனர். மக்களின் பிரதிநிதிகள் என்று கூறி யாராவது பேச்சுவார்த்தைக்கு வந்தாலும் அவர்கள் எங்கள் பிரதிநிதிகள் அல்ல என்பதையும் மக்கள் சமூகவலைத்தளங்களின் ஊடாக வலியுறுத்தி வருகின்றனர்.

 எதிர் வரும் வாரங்களில் நாட்டின் நிலைமை மேலும் மோசம் அடையும், இன்னமும் தற்போதைய ஆட்சியாளர்கள் பின்னால் இருக்கும் மக்கள், அந்த சூழ்நிலையை எதிர்கொள்ளமுடியாது அரசுக்க எதிராக திரும்பும் காலம் வெகு தொலைவில் இல்லை. 

மக்கள் மீது அடக்குமுறைகளை பிரயோகித்தால், சர்வதேசத்தின் கோபத்திற்க ஆழகாக நேரிடும் இவ்வாறு நெருக்கடிக்குள் சிக்கியிருக்கும் அரசு நேரடியாக போரட்டத்தை எதிர்க்க முடியாமல் தடுமாறி நிற்கின்றது.

 

 

 

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...