Tamil Leader News
முக்கியம்
பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●மெர்லின் மன்றோ; உண்மையான அன்பைத் தேடிய சோகமான வாழ்க்கைப் பயணம்!●59 மில்லியன் ரூபாய் பண மோசடி வழக்கிலிருந்து டேசி ஃபொரெஸ்ட் விடுவிப்பு!●பெண்களின் இதயத்தைப் பாதுகாக்கும் புதிய மருத்துவப் பாதை!●அடக்குமுறைச் சட்டங்களைத் திரும்பப் பெறுக: நாளை (04) பாராளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம்!●16 வயது சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடை!●கிரிஷ் வழக்கில் பிணை கிடைத்தாலும் நாமல் தொடர்ந்தும் சிறையில்!●
செய்திகள்

அரசாங்கத்துடன் இனி எவ்வித பேச்சுவார்த்தையும் கிடையாது - உறவை முறித்துக்கொண்டார் மைத்ரி!

T

The Leader Desk

ஏப்ரல் 13, 2022 • 6:18 AM

அரசாங்கத்துடன் இனி எவ்வித பேச்சுவார்த்தையும் கிடையாது  - உறவை முறித்துக்கொண்டார் மைத்ரி!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மக்களால் வெறுக்கப்படும் ராஜபக்ஷர்களின் அரசாங்கத்தை பாதுகாக்க வேண்டிய தேவை எமக்கு கிடையாது, சந்திப்பும், பேச்சுவார்த்தையும் கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டார்.
  • நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைமை குறித்து கடந்த 3 நாட்களாக பாராளுமன்றில் இடம்பெற்ற விவாதத்தின் போது ஆளும் தரப்பின் உறுப்பினர்கள் பொறுப்பற்ற வகையில் நடந்துக்கொண்டார்கள்.
  • மக்களின் பிரச்சினைகளுக்கும்,முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கும் அரசாங்கம் முன்னுரிமை வழங்காத காரணத்தினால் அரசாங்கத்திலிருந்து வெளியேறி பாராளுமன்றில் சுயாதீனமாக செயற்படுகிறோம்.
எழுத்து அளவு:

மக்களால் வெறுக்கப்படும் ராஜபக்ஷர்களின் அரசாங்கத்தை பாதுகாக்க வேண்டிய தேவை எமக்கு கிடையாது, சந்திப்பும், பேச்சுவார்த்தையும் கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

 நல்லாட்சி அரசாங்கத்தின் ஒரு சில தவறான தீர்மானங்களின் பிரதிபலனே ராஜபக்ஷர்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு வழியேற்படுத்திக்கொடுத்தது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். 

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண ஆட்சியில் உள்ள அரசாங்கம் சர்வதேசத்துடன் இணக்கமாக செயற்பட வேண்டும். மக்களின் பிரச்சினைகளுக்கும்,முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கும் அரசாங்கம் முன்னுரிமை வழங்காத காரணத்தினால் அரசாங்கத்திலிருந்து வெளியேறி பாராளுமன்றில் சுயாதீனமாக செயற்படுகிறோம்.

 எங்களால் முன்வைக்கப்பட்ட யோசனைகள் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தாததன் விளைவை தற்போது முழு நாடும் எதிர்க்கொள்கிறது. பாராளுமன்றில் பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் செயற்படும் விதம் வெறுக்கத்தக்கது.

 நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைமை குறித்து கடந்த 3 நாட்களாக பாராளுமன்றில் இடம்பெற்ற விவாதத்தின் போது ஆளும் தரப்பின் உறுப்பினர்கள் பொறுப்பற்ற வகையில் நடந்துக்கொண்டார்கள்.

 மக்களாள் புறக்கணிக்க்கப்படும் ராஜபக்ஷர்கள் தலைமையிலான அரசாங்கத்துடன் இனி எவ்வித பேச்சுவார்த்தையும் கிடையாது,சந்திப்பும் கிடையாது. நாட்டு மக்களுடன் ஒன்றினைந்து ஒரு உறுதியான தீர்வை பெற்றுக்கொள்வோம். தற்போதைய அரச தலைவரின் தலைமையிலான அரசாங்கம் தொடர்பில் சர்வதேசத்தின் மத்தியில் நல்ல நிலைப்பாடு கிடையாது. 

ஜனநாயகம் ஸ்தாபிக்கப்பட்டு,நாட்டு மக்கள் மகிழ்வுடன் இருந்தால் மாத்திரமே சர்வதேசம் நிபந்தனையற்ற ஒத்துழைப்பு வழங்கும் எனவும் குறிப்பிட்டார். 

கொழும்பில் இடம்பெற்ற சுதந்திர கட்சியின் மாவட்ட குழு கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...