Tamil Leader News
முக்கியம்
பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●மெர்லின் மன்றோ; உண்மையான அன்பைத் தேடிய சோகமான வாழ்க்கைப் பயணம்!●59 மில்லியன் ரூபாய் பண மோசடி வழக்கிலிருந்து டேசி ஃபொரெஸ்ட் விடுவிப்பு!●பெண்களின் இதயத்தைப் பாதுகாக்கும் புதிய மருத்துவப் பாதை!●அடக்குமுறைச் சட்டங்களைத் திரும்பப் பெறுக: நாளை (04) பாராளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம்!●16 வயது சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடை!●கிரிஷ் வழக்கில் பிணை கிடைத்தாலும் நாமல் தொடர்ந்தும் சிறையில்!●
செய்திகள்

இளைஞர்களின் பரிந்துரைகளுக்கு செவிசாய்ப்பது எமது கடமை - கரு ஜயசூரிய

T

The Leader Desk

ஏப்ரல் 12, 2022 • 4:29 PM

இளைஞர்களின் பரிந்துரைகளுக்கு செவிசாய்ப்பது எமது கடமை - கரு ஜயசூரிய

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அதனால் இளைஞர்களால் மேற்கொள்ளப்படும் இந்த மாபெரும் சமூகப் புரட்சியை எந்த காரணம் கொண்டும் குறைத்து மதிப்பிட வேண்டாம் என சமூக நீதிக்கான தேசிய அமைப்பின் தலைவரும் முன்னாள் சபாநாயகருமான கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
  • அதேபோன்று இளைஞர்களால் மேற்கொள்ளப்படும் இந்த மாபெரும் சமூகப் புரட்சியை எந்த காரணம் கொண்டும் குறைத்து மதிப்பிட வேண்டாம்.
  • நாடளாவிய ரீதியில் அரசாங்கத்துக்கு எதிராக முன்னெடுக்கப்படும் மக்கள் போராட்டம் தொடர்பாக அவர் விடுத்திருக்கும் அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
எழுத்து அளவு:


அதனால் இளைஞர்களால் மேற்கொள்ளப்படும் இந்த மாபெரும் சமூகப் புரட்சியை எந்த காரணம் கொண்டும் குறைத்து மதிப்பிட வேண்டாம் என சமூக நீதிக்கான தேசிய அமைப்பின் தலைவரும் முன்னாள் சபாநாயகருமான கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் அரசாங்கத்துக்கு எதிராக முன்னெடுக்கப்படும் மக்கள் போராட்டம் தொடர்பாக அவர் விடுத்திருக்கும் அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இலங்கையில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடியின் காரணத்தினால் நாட்டின் இளம் தலைமுறையினருடன் இணைந்து, சிவில் மக்கள் தமது எண்ணங்களை நேரடியாக வெளிப்படுத்துகின்றனர்.

கடந்த சில நாட்களாக நாட்டின் பல்வேறு பிரதேசங்களை மையமாகக்கொண்டு அவர்கள் மேற்கொண்ட போராட்டங்கள் தற்போது தலை நகரை மையமாகக் கொண்டு தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன.

இந்த போராட்டங்களின் போது அவர்கள் கடைப்பிடிக்கும் உறுதிப்பாட்டையும் ஒழுக்கத்தையும் பாராட்ட வேண்டும். அதேபோன்று நாட்டின் அரசியலமைப்பு குறித்து அவர்கள் முன்வைக்கும் திருத்தங்கள் தொடர்பிலான பரிந்துரைகளையும் நாட்டு மக்கள் கவனத்தில் கொள்ளவேண்டும்.

ஆனால் இதுவரை நாட்டின் பிரதான அரசியல் கட்சிகள் அவர்களின் கோரிக்கைகள் தொடர்பிலான தமது நிலைப்பாட்டை தெளிவாக தெரிவித்து இல்லை.

அதன் காரணத்தினால் இளம் சமுதாயத்தினரின் குரலுக்கு தாமதமின்றி செவிசாய்த்து அவர்கள் எதிர்பார்க்கும் அரசியல் திருத்தங்கள் தொடர்பில் அவர்களுடன் முறையான கலந்துரையாடலுக்கு செல்லுமாறு அனைத்து அரசியல் கட்சிகளையும் வலியுறுத்துகின்றோம்.

அதற்கமைய நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளும் இவ்விடயம் தொடர்பில் தமது நிலைப்பாட்டை பகிரங்கமாக தெரிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கின்றோம்.

அதேபோன்று இளைஞர்களால் மேற்கொள்ளப்படும் இந்த மாபெரும் சமூகப் புரட்சியை எந்த காரணம் கொண்டும் குறைத்து மதிப்பிட வேண்டாம். இந்த நாட்டின் ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் அதிகாரத்தை அடைவதற்கான பிரத்தியேக கொள்கைகள் இருக்கலாம்.

ஆனாலும் நாட்டின் இளைஞர்கள் தானாக முன்வந்து பரிந்துரைகளை முன்வைக்கும்போது அதற்கு செவிசாய்ப்பது எமது கடமையாகும். அதேபோன்று இவர்களை தவறான வழிக்குத் திசை திருப்புவதற்கு சில தரப்புகள் முயற்சிக்கும் அபாயம் இருக்கின்றது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

மேலும் எந்தக் காரணத்திற்காகவும் நாட்டின் அமைதிக்கு பாதகம் ஏற்படுவதற்கு இடமளிக்கக்கூடாது. அதற்கான பிரதான கடமை தற்போதைய ஜனாதிபதிக்கும் அரசாங்கத்துக்கும் உள்ளது. அதேபோன்று ஏனைய அரசியல் கட்சிகளுக்கும் அந்த பொறுப்பு இருக்கின்றது என்பதை வலியுறுத்த விரும்புகின்றோம்.

அதற்கமைய இளம் சமுதாயத்தினரின் குரலுக்கு தாமதமின்றி செவிசாய்க்குமாறு அரசாங்கத்திடமும் நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளிடமும் கேட்டுக்கொள்கின்றோம். இளைஞர்கள் எதிர்பார்க்கும் அரசியல் திருத்தங்கள் மற்றும் பரிந்துரைகள் தொடர்பில் தமது நிலைப்பாட்டை அனைத்து அரசியல் கட்சிகளும் பகிரங்கமாக வெளிப்படுத்த வேண்டும். என்றார்.

 

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...