Tamil Leader News
முக்கியம்
பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●மெர்லின் மன்றோ; உண்மையான அன்பைத் தேடிய சோகமான வாழ்க்கைப் பயணம்!●59 மில்லியன் ரூபாய் பண மோசடி வழக்கிலிருந்து டேசி ஃபொரெஸ்ட் விடுவிப்பு!●பெண்களின் இதயத்தைப் பாதுகாக்கும் புதிய மருத்துவப் பாதை!●அடக்குமுறைச் சட்டங்களைத் திரும்பப் பெறுக: நாளை (04) பாராளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம்!●16 வயது சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடை!●கிரிஷ் வழக்கில் பிணை கிடைத்தாலும் நாமல் தொடர்ந்தும் சிறையில்!●
செய்திகள்

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிக்க வேண்டி வடக்கின் அரசியல் கட்சிகள் கூட்டாக கோரிக்கை!

T

The Leader Desk

ஏப்ரல் 12, 2022 • 3:53 PM

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிக்க வேண்டி வடக்கின் அரசியல் கட்சிகள் கூட்டாக கோரிக்கை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • குறித்த அறிக்கையில்,''இலங்கையின் வரலாற்றில் முதல் தடவையாக ஒவ்வொரு பிரிவினரின் அன்றாட வாழ்க்கையும் பொருளாதாரப் நெருக்கடியின் காரணமாக வீழ்ச்சியடைந்துள்ளது.
  • இந்த நிலைமையை அரசாங்கமும் ஏனைய அரசியல் கட்சிகளும் சரியாக புரிந்து கொள்ளாவிட்டால் நாடு முழுவதுமாக அராஜகமாக மாறிவிடும் என ஆறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
  • இதன் விளைவாக, பல்லாயிரக்கணக்கான மக்கள் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிக்கு, குறிப்பாக சுகாதாரம், உணவு மற்றும் கல்வி ஆகியவற்றில் தீர்வுகளை கோரி வீதிகளில் இறங்கியுள்ளனர்.
எழுத்து அளவு:

ஆறு தமிழ் அரசியல் கட்சிகளும் கூட்டறிக்கையில், தற்போதைய நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்கி, அமைதியின்மையைத் தணிக்கவும், அதிகரித்து வரும் பொருளாதார நெருக்கடியைக் கட்டுப்படுத்தவும், மக்கள் இயல்பு வாழ்க்கையை நடத்துவதற்கும் பாராளுமன்ற அதிகாரமளிக்கும் முறைக்கு செல்லுமாறு அரசாங்கத்திடம் கோரியுள்ளனர். 

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழீழ விடுதலைக் கழகத் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், தமிழரசுக் கட்சியின் தலைவர் என்.ஸ்ரீகாந்தா, தமிழீழ மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் கூட்டாக அறிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த அறிக்கையில்,''இலங்கையின் வரலாற்றில் முதல் தடவையாக ஒவ்வொரு பிரிவினரின் அன்றாட வாழ்க்கையும் பொருளாதாரப் நெருக்கடியின் காரணமாக  வீழ்ச்சியடைந்துள்ளது. இதன் விளைவாக, பல்லாயிரக்கணக்கான மக்கள் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிக்கு, குறிப்பாக சுகாதாரம், உணவு மற்றும் கல்வி ஆகியவற்றில் தீர்வுகளை கோரி வீதிகளில் இறங்கியுள்ளனர்.

இந்த நிலைமையை அரசாங்கமும் ஏனைய அரசியல் கட்சிகளும் சரியாக புரிந்து கொள்ளாவிட்டால் நாடு முழுவதுமாக அராஜகமாக மாறிவிடும் என ஆறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

“மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வில்லாத நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. எனவே, அதனை நீக்கிவிட்டு மீண்டும் பாராளுமன்ற முறைமை ஏற்படுத்தப்பட வேண்டும். என கோரியுள்ளனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிக்க வேண்டி வடக்கின் அரசியல் கட்சிகள் கூட்டாக கோரிக்கை! | Tamil Leader | We Lead the Nation