Tamil Leader News
முக்கியம்
பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●மெர்லின் மன்றோ; உண்மையான அன்பைத் தேடிய சோகமான வாழ்க்கைப் பயணம்!●59 மில்லியன் ரூபாய் பண மோசடி வழக்கிலிருந்து டேசி ஃபொரெஸ்ட் விடுவிப்பு!●பெண்களின் இதயத்தைப் பாதுகாக்கும் புதிய மருத்துவப் பாதை!●அடக்குமுறைச் சட்டங்களைத் திரும்பப் பெறுக: நாளை (04) பாராளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம்!●16 வயது சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடை!●கிரிஷ் வழக்கில் பிணை கிடைத்தாலும் நாமல் தொடர்ந்தும் சிறையில்!●
செய்திகள்

அரசுக்கு ஆதரவாக பிக்குகள் களத்தில் - அமைதியான மக்கள் ஆர்ப்பாட்டத்தை குலைக்கும் திட்டமாம்!

T

The Leader Desk

ஏப்ரல் 12, 2022 • 10:24 AM

அரசுக்கு ஆதரவாக பிக்குகள் களத்தில் - அமைதியான மக்கள் ஆர்ப்பாட்டத்தை குலைக்கும் திட்டமாம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கொழும்பு தாமரைத் தடாகம் மஹிந்த ராஜபக்ஸ கலையரங்கிற்கு அருகிலிருந்து இந்த பேரணி முன்னெடுக்கப்படுகின்றது.
  • pic.twitter.com/3zcFQcDF6s — DailyMirror (@Dailymirror_SL) April 12, 2022 ‘சிங்கள பௌத்த ஆணைக்கு கை வைக்கும் பொய்யான போராட்டங்களுக்கு ஏமாறாதீர்கள்’ என்ற தொனிப்பொருளில் இந்த எதிர்ப்பு ஊர்வலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
  • இதுவேளை, ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுவரும் காலிமுகத்திடல் பகுதியில் பல உளவாளிகள் இறக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
  • https://bit.ly/3uHGkH6 அரசாங்கம், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களுக்கு பாடம் கற்பிக்க போவதாக கூறிவருவதாக தெரிவிக்கப்படுகிறது.
எழுத்து அளவு:


கொழும்பு தாமரைத் தடாகம் மஹிந்த ராஜபக்ஸ கலையரங்கிற்கு அருகிலிருந்து இந்த பேரணி முன்னெடுக்கப்படுகின்றது.

இந்த ஆர்ப்பட்ட குழு ஜனாதிபதி செயலகத்தை அண்மித்த பகுதிக்கு செல்ல திட்டமிடப்பட்டுள்ளதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெள்ளைத் துணி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட வண.வட்டினாபஹ சோமானந்த தேரரிடம் இந்த நடவடிக்கை ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, தேரர் உள்ளிட்ட பிக்குகள் குழுவொன்று தீவிரவாத இனவாதிகள் குழுவுடன் இணைந்து மக்கள் போராட்ட பூமியை ஆக்கிரமிக்கத் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

‘சிங்கள பௌத்த ஆணைக்கு கை வைக்கும் பொய்யான போராட்டங்களுக்கு ஏமாறாதீர்கள்’ என்ற தொனிப்பொருளில் இந்த எதிர்ப்பு ஊர்வலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதுவேளை, ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுவரும் காலிமுகத்திடல் பகுதியில் பல உளவாளிகள் இறக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், இந்த தகவல் வெளியாகியுள்ள நிலையில், இப்போராட்டத்திற்கு ஆதரவாக இலட்சக்கணக்கான மக்கள் தற்போது போராட்டக்களத்தில் திரண்டு வருகின்றனர்.

அரசாங்கம் எவ்வளவு ஆத்திரமூட்டல் செய்தாலும், அமைதியான முறையில் செயல்பட வேண்டும் என்றும், வன்முறையில் ஈடுபட வேண்டாம் என்றும் போர்க்களத்தில் உள்ள அமைப்பாளர்கள், வலியுறுத்துகின்றனர்.

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

அரசாங்கம், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களுக்கு பாடம் கற்பிக்க போவதாக கூறிவருவதாக தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும் மீண்டும் இனவாதத்தை தூண்டும் வகையிலான இந்த சதி குறித்து ஏற்கனவே இலங்கை தூதரகங்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளுக்கு மோதல் வலயத்தில் உள்ள இளம் செயற்பாட்டாளர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...