Tamil Leader News
முக்கியம்
பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●மெர்லின் மன்றோ; உண்மையான அன்பைத் தேடிய சோகமான வாழ்க்கைப் பயணம்!●59 மில்லியன் ரூபாய் பண மோசடி வழக்கிலிருந்து டேசி ஃபொரெஸ்ட் விடுவிப்பு!●பெண்களின் இதயத்தைப் பாதுகாக்கும் புதிய மருத்துவப் பாதை!●அடக்குமுறைச் சட்டங்களைத் திரும்பப் பெறுக: நாளை (04) பாராளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம்!●16 வயது சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடை!●கிரிஷ் வழக்கில் பிணை கிடைத்தாலும் நாமல் தொடர்ந்தும் சிறையில்!●
செய்திகள்

நான்காவது நாளாகவும் தொடரும் போராட்டம் - மக்கள் புரட்சியாக மாறலாம்!

T

The Leader Desk

ஏப்ரல் 12, 2022 • 4:09 AM

நான்காவது நாளாகவும் தொடரும் போராட்டம் - மக்கள் புரட்சியாக மாறலாம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஜனாதிபதி செயலக வளாகத்தில் ஆர்ப்பாட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள பகுதியில் கூடாரங்கள் அமைத்து தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வரும் மக்கள் “கோட்டா கோ கம” என்ற பெயர்ப்பலகைப் அங்கு காட்சிப்படுத்தியுள்ளனர்.
  • பொருட்களின் விலையும் மக்களால் தாங்கிக் கொள்ளமுடியாத அளவில் உயர்வடைந்துள்ளது. நாட்டின் அதிகமான மக்கள் புத்தாண்டை கொண்டாடும் நிலையில் இல்லை.
  • நேற்றைய போராட்டத்தில் கொல்லப்பட்ட சித்திரவதைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் படங்கள் ஜனாதிபதி செயலகம் முன்பாக வைக்கப்பட்டிருந்தது.
எழுத்து அளவு:

ஜனாதிபதி செயலக வளாகத்தில் ஆர்ப்பாட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள பகுதியில் கூடாரங்கள் அமைத்து தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வரும் மக்கள் “கோட்டா கோ கம” என்ற பெயர்ப்பலகைப் அங்கு காட்சிப்படுத்தியுள்ளனர்.

 கடும் மழையையும் பொருட்படுத்தாது தொடர்ச்சியாக போராடிவரும் இளைஞர் , யுவதிகள் உள்ளிட்ட சகல தரப்பினரும் ஜனாதிபதி பதவி விலகும் வரை ஓயப்போவதில்லை என்ற முடிவில் உறுதியாக உள்ளனர். 

கடந்த காலங்களில் ராஜபக்ஷ அரசாங்கங்கள் செய்த ஒட்டுமொத்த தவறுகளுக்கும் தற்போது மக்கள் கேள்வி எழுப்பிவருகின்றனர்.

நேற்றைய போராட்டத்தில் கொல்லப்பட்ட சித்திரவதைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் படங்கள் ஜனாதிபதி செயலகம் முன்பாக வைக்கப்பட்டிருந்தது.

உயிர்த்த ஞாயிறுதாக்குதலுக்கு நீதி பெற்றுக்கொடுக்காமை, உத்தகால தவறுகள், இன, மத முரண்பாடுகளை முன்னிறுத்தி அரசியல் இலபம் ஈட்டியமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளை மக்கள் முன்வைக்கின்றனர்.

எவ்வாறாயினும் நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடிக்கு இதுவரை அரசாங்கம் எந்த ஒரு தீர்வையும் முன்வைக்க விலை, டொலரின் பெறுமதி தொடரச்சியாக அதிகரித்து செல்கின்றது. பொருட்களின் விலையும் மக்களால் தாங்கிக் கொள்ளமுடியாத அளவில் உயர்வடைந்துள்ளது. 

நாட்டின் அதிகமான மக்கள் புத்தாண்டை கொண்டாடும் நிலையில் இல்லை. இந்த மாத இறுதியில் நாட்டின் பொருளாதாரம் மேலும் வீழ்ச்சியை சந்திக்கும் என அரசியல் வல்லுநர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். புத்தாண்டின் பின்னர் புதிய அமைச்சரவை பதவி ஏற்கும் என அரசு அறிவித்துள்ளது. 

எனினும் இதன் மூலம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை சாந்தப்படுத்தாது. எவ்வாறாயினும், மக்களின் குரலுக்கு செவிசாய்க்க அரசு மறுக்குமானால் அது ஒரு புரட்சிக்கு வழிவகுக்கும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

நான்காவது நாளாகவும் தொடரும் போராட்டம் - மக்கள் புரட்சியாக மாறலாம்! | Tamil Leader | We Lead the Nation